Published:Updated:

வாழ்க்கையில் வெறுமையை வெல்லலாம்... வெற்றியை நோக்கிச் செல்லலாம்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

நாணயம் புக் ஷெல்ஃப்

வாழ்க்கையில் வெறுமையை வெல்லலாம்... வெற்றியை நோக்கிச் செல்லலாம்!

நாணயம் புக் ஷெல்ஃப்

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

ம்மில் பலருக்கும் நாம் ஓர் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வது போன்ற எண்ணம் பல நேரங்களில் தோன்றும். ஒரு வேலையில் சேர்ந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு வரும் தேக்கநிலையின்போது, பார்க்கும் வேலையை ஏதாவது ஒரு காரணத்தால் இழக்கும்போது, தீராத வியாதி நமக்கு வந்திருக்கிறது என மருத்துவர் சொல்லும்போது, நெருங்கிய உறவினர் ஒருவர் மரணமடையும்போது... இப்படிப் பல தருணங்களில் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வதைப் போன்ற எண்ணம் நமக்கு மேலோங்கும். இந்த வெறுமையை எப்படிக் கடந்து வருவது என்பதைத் தெளிவாக விளக்குகிறது ஐசையா ஹேன்கல் (Isaiah Hankel) எழுதிய ‘பிளாக் ஹோல் ஃபோக்கஸ்’ என்ற புத்தகம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

‘‘நம் நோக்கம்தான் நம் வாழ்வையும் தாழ்வையும் நிர்ணயிப்பதாக இருக்கிறது. அந்த நோக்கத்தை எந்த அளவுக்குத் தெளிவாகத் தீர்மானித்து உருவேற்றிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு வாழ்க்கை உற்சாகமாகவும் பிரகாசமாகவும் இருக்கும். எனவே, நோக்கம்தான் நம்மைச் சராசரி வாழ்க்கை வாழ்வதிலிருந்து வெளியேற்றி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக இருக்கும். நம் நோக்கம் என்ன என்பதை அழுத்தமாகக் கேடடுக்கொள்வதன் மூலம்தான் நாம் செல்ல வேண்டிய பாதை எது என்பதற்கான விடையை நம்மால் தெளிவாகப் பெற முடியும்’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘மனிதன் எந்த விஷயத்தையும் இரண்டு காரணங்களுக்காகச் செய்கிறான். ஒன்று, சந்தோஷத்துக்காக; மற்றொன்று, வருத்தத்தை/வலியை மறப்பதற்காக. வலிதான் சிறந்த மோட்டிவேஷனாக இருக்கிறது. `நான் வெற்றி பெறுவதைவிட தோல்வியைத் தவிர்க்கவே விரும்புகிறேன்’ என்பதைப் பலரும் சொல்கிறார்கள். நாம் அனைவரும் தோல்வியைத் தவிர்க்க விரும்புகிறோம். ஆனால் அந்தத் தோல்விதான் நமக்கு உத்வேகம் தருவதாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வலி என்பது நம் தேவையை நாம் பூர்த்தி செய்துகொள்ள முடியாதபோது தோன்றும் ஒன்று. மனிதனின் தேவைகளை வரிசைப்படுத்தி அடுக்கிவைத்து அவற்றில் ஏதாவது ஒன்று பூர்த்தி செய்யப்படாதபோது அவனுக்கு வலிக்கிறது. தேவைகள்தான் ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையாக இருந்து வலியைக் கொடுப்பவை. உதாரணமாக, ஒரு மனிதனுக்குத் தனிமையான (பிரைவேட்) நேரமும், நெட்வொர்க்கிங்கும் அத்தியாவசியமான ஒன்று’’ என்று சொல்லும் ஆசிரியர், வாழ்க்கைக்கான நோக்கம் குறித்துப் புதிய விளக்கம் தருகிறார்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

‘‘நோக்கத்தைத் தெளிவாக வைத்துக்கொள்ள ஆரம்பிக்கும்போது, நம்மால் கூடுதல் சக்தியைத் திரட்டி நாம் நினைக்கும் காரியங்களுக்காகச் செயல்பட முடியும். தெளிவான நோக்கம் என்பது சரியான பாதையை அமைத்து அதில் நம்மை பயணிக்கச் செய்யும். 1950-களில் ஹாவர்டு ஆராய்ச்சியாளர் ஒருவர், ஓர் எலியால் நீரில் எவ்வளவு நேரம் நீந்த முடியும் என்ற ஆராய்ச்சியைச் செய்தார். சாதாரணமாக ஒரு எலியால் 15 நிமிடங்கள் மட்டுமே ஓடும் நீரில் நீந்த முடிகிறது. அதேநேரம், 15 நிமிடங்கள் கழித்து அந்த எலி மூழ்கும் வேளையில் காப்பாற்றி, கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி நீந்தவிட்டால் அந்த எலியால் 60 மணி நேரம் (240 மடங்கு அதிக நேரம்) நீந்த முடிகிறது என்பதைக் கண்டறிந்தார்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

எதனால் இந்த அதிசயம் நடக்கிறது? முதலில் நீச்சலடிக்கும்போது காப்பாற்றப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அந்த எலிக்கு இல்லை. அதேநேரம், மூழ்கும்போது காப்பாற்றப்பட்டு, பின்னர் மீண்டும் தண்ணீரில் விடப்படும்போது காப்பாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் எலிக்கு மேலோங்குவதால், நீண்ட நேரம் அதனால் நீந்த முடிகிறது. காப்பாற்றப்பட்ட நிலை எப்படி இருக்கும் என்பதை எலி துல்லியமாகத் தெரிந்துகொண்டுவிடுவதால் கூடுதல் சக்தியைத் திரட்டி மிக நீண்ட நேரம் எலியால் நீச்சலடிக்க முடிகிறது. இதனாலேயே சீரிய நோக்கம் என்பது நம்பிக்கையைக் கொண்டுவருகிறது என்றும் அந்த நம்பிக்கையே நமக்கு அதிக சக்தியைத் தருவதாக அமைகிறது’’ என்கிறார் ஆசிரியர்.``நோக்கம் என்றதும், ஏதோ வாழ்க்கையின் எல்லைக்கான திட்டம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் மனதில் எண்ணும் விஷயம் கிடைக்கும் காலம்தான் அது. சிறந்த நோக்கத்தைக் கண்டறிந்து நிறைவேற்ற ஒரு வழி இருக்கிறது. முதலில், உங்களுடைய நோக்கத்தை நிர்ணயம் செய்யுங்கள். பிறகு அதை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பின்னோக்கிய வரிசைக் கிரமத்தில் திட்டமிடுங்கள். முன்னோக்கிய திட்ட மிடலைவிட பின்னோக் கிய வரிசைக்கிரமத் திட்டமிடுதலே வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது’’ என்கிறார் ஆசிரியர். இதற்கான உதாரணங்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நீங்கள் எங்கே சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த நிலையை அடைய முதலில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக வரையறை செய்ய வேண்டும். உங்களின் கடந்த காலத்தை நடுநிலையுடன் விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு நீங்களே பொறுப்பு என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். ஏனென்றால், தனிமனித முன்னேற்றத்துக்குப் மிகப்பெரிய தடை என்பது மனிதர்கள்தானே தவிர, அவர்களைச் சுற்றியிருக்கும் எந்த விஷயமுமல்ல.

Black Hole Focus
Black Hole Focus

எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். அதை முடிவு செய்து, அத்துடன் உங்களுடைய நோக்கம் என்ன என்பதையும், அதை அடைவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளையும் நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளும்போது அவை உங்கள் வாழ்க்கையில் வெற்றி என்பதைக் கொண்டுவந்து சேர்க்கும்.

உங்கள் செயல்களில் எதற்கு முன்னுரிமை தருகிறீர்கள் என்பது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

உங்கள் செயல்களில் எதற்கு முன்னுரிமை தருகிறீர்கள் என்பது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதனாலேயே அந்த முன்னுரிமைகளைச் சரியாக மாற்றியமைத்துவிட்டால், வெற்றி என்பது சுலபத்தில் கிடைத்துவிடும். அடிக்கடி உங்களை நீங்களே கேள்விகளைக் கேட்டுக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். ‘இப்போது நான் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் எது’ என்ற கேள்வியை அடிக்கடி கேட்டுக்கொள்ளுங்கள். `இப்போது நான் செய்யும் ஒரு செயல் அடுத்த ஒரு வருடத்தில் ஏதாவது பலன்களைத் தருமா’ என்பதையும் கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

தகவல் தொழில்நுட்பக் காலமெல்லாம் போய், இன்று ஐடியாக்களின் காலத்தில் இருக்கிறோம். எல்லாரிடமும்தான் ஐடியா இருக்கிறது. அவற்றில் எது சிறந்தது, அதை மற்றவர்களுக்கு எப்படித் தெளிவாக எடுத்துச்சொல்வது, அதை நிஜமாக்கத் தேவையான நடவடிக்கைகள் என்னென்ன, சரியான ஐடியாவை தேர்வு செய்யக்கூடிய புத்திசாலித்தனத்தைக் கொண்டிருப்பது ஆகிய அம்சங்கள்தான் ஒரு ஐடியாவை வெற்றிகரமானதாக்குகிறது. உங்களுடைய நோக்கம், உங்களுடைய ஐடியாக்கள் குறித்த சொல்வண்ணம், செயல்வடிவம் மற்றும் புத்திசாலித்தனமான தேர்வைச் செய்தல் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டே வாழ்க்கையும் வெற்றியும் அமைகின்றன’’ என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

கவனச்சிதறல் என்பது மிக அதிக அளவில் நடக்க வாய்ப்பிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன்னேற்றத்தை அடைவதற்கான கவனத்தைப் பெறுவது எப்படி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்கலாம்!

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism