தொடர்ந்து முயன்றால் எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியும் என்பார்கள். `மனதை வசப்படுத்தும் சூட்சுமத்தைக் கற்றுக்கொண்டுவிட்டால் வெற்றி கிடைத்தே தீரும்’ என்று பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது டேவிட் காகின்ஸ் (David Goggins) எழுதிய ‘கான்’ட் ஹர்ட் மீ’ (Can’t Hurt Me) என்ற புத்தகம். அமெரிக்க நேவி சீல்ஸ் பிரிவின் (United States Navy SEALs) முன்னாள் தலைவர் டேவிட் காகின்ஸ். இந்தப் புத்தகம் மூளையைத் தன்வசப்படுத்தி, சிக்கலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொண்டு வெல்வது என்பதைச் சொல்லித்தருகிறது.

“உங்களுக்கு நீங்கள் யார் என்பதும், உங்களால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதும் முழுமையாகத் தெரியுமா... `தெரியும்’ என்று நம்பிக்கொண்டிருப்பீர்கள். `தெரியும்’ என்று நம்பிக்கொண்டிருப்பதால் அது உண்மையாகிவிடாது. `இல்லை’ என்பதுதான் சரியான விடை. `தெரியும்’ என்று நம்புவது செளகர்யமாக இருப்பதற்கான அடித்தளம். உலகம் முழுவதும் பெரும்பான்மையானவர்கள் இந்தப் பொய்யான நம்பிக்கையுடனேயே வாழ்ந்துவருகின்றனர். நானும் அப்படி வாழ்ந்தவன்தான்” என்று ஆரம்பிக்கும் ஆசிரியர் தொடர்ந்து தன்னைக் குறித்து சொல்கிறார்.

“மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசாங்கம் செய்யும் உதவியில் பிழைத்து, சமூகத்தின் அடிமட்டத்தில் உழன்று, `நமக்கெல்லாம் எதிர்காலம் என்பது பிரகாசமாக இல்லை’ என்று வாழ்ந்து வந்தவன்தான் நான். அடிமட்டம் என்பது எப்படியிருக்கும் என்பதை உலகில் பலரும் அனுபவித்திருப்பார்கள். அது உங்களை வேகமாகக் கீழே இழுத்துச் செல்லும் புதைமணலுக்கு ஒப்பானது. மேலே எழவோ கொஞ்சம் முன்னே நடக்கவோ விடவே விடாது.

இப்படி அழுத்திப் பிடிக்கும் சூழ்நிலையில், `உள்ளதைக்கொண்டு நன்றாக வாழ்வோம்’ என்ற நிலைமையில், கிடைக்கும் சுகஜீவனத்துக்கு நாம் ஆசைப்படுவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். `இப்படியே இருந்தால் உருப்படவே முடியாது’ என்று மனது சொன்னாலும் அதைவிட்டு விலக முடியாத சூழலில் சுகமாக வாழ்ந்து கொண்டிருப்போம். ஏனென்றால் நம் மூளை பழக்க வழக்கங்களுக்கு அடிமை. அது நம்மை முழுமையாக அடிமைப்படுத்திவிடும். அவ்வப்போது நாம் கேட்கும் ஊக்கம் தரும் பேச்சுகள் நம்மைக் கொஞ்ச நேரம் விழித்திருக்கவைக்கும். பிறகு மீண்டும் பழைய நிலைமைக்குச் சுலபமாகச் சென்றுவிடுவோம். மோட்டிவேஷன் என்பது உங்களையும் உங்கள் செயல்பாட்டையும் புரட்டிப்போட்டு விடாது. ஏனென்றால், அது விரட்ட வேண்டியது நாம் அனுபவிக்கும் சுகத்தை.

‘என்ன சுகத்தை அனுபவிக்கிறோம். வயிற்றுப்பாடே பிரச்னை. வலிகள் நிறைந்ததாகவே இருக்கிறது வாழ்க்கை’ என்பீர்கள். அதே அளவு வலியில் தொடர்ந்து இருக்க விரும்புவதே சுகம்தான். வலியை அதிகரிக்கவும், அதிக வலியை விரும்பி ஏற்கவும், வலிகளை எதிர்கொள்வதில் இரும்பு மனிதனாக நாம் மாறவும் மோட்டிவேஷன் என்பதெல்லாம் உதவவே உதவாது.

பள்ளிக்கல்வியை மட்டுமே முடித்திருக்கும் என்னை, உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எம்.ஐ.டி மனபலத்தை அதிகரித்துக்கொள்வது குறித்த கலந்துரையாடல் கூட்டத்துக்கு அழைத்திருந்தது. கூட்டத்தில் இது குறித்து நீண்டநாள்களாக ஆராய்ச்சி செய்துவரும் பேராசிரியர் ஒருவர், ‘என்னதான் மனபலத்தைக் கூட்ட ஒருவர் முயன்றாலும் அவரின் எல்லையை அவரின் ஜீன்களே நிர்ணயிக்கின்றன. அதைத் தாண்டி ஒருவரால் செல்ல முடியாது’ என்று கூறி, அது குறித்த அவருடைய ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டினார். எனக்கு அந்தக் கருத்தில் உடன்பாடு இல்லையென்றாலும், அவருடைய ஆய்வு, படிப்பு மற்றும் பதவிக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருந்தேன்.

ஆனாலும், என் முகம் மாறியிருந்ததைக் கண்டுபிடித்த ஒருவர் `உங்கள் கருத்து என்ன?’ என்று என்னைக்கேட்டார். `அந்தப் பேராசிரியர் சொன்னது நூறு சதவிகிதம் பொருந்தாது. தீவிரமாக முயன்றால் யார் வேண்டுமென்றாலும் முற்றிலும் மாறுபட்ட மனிதராக உருவெடுக்கலாம். வலுவான மூளையும் அடங்காத விருப்பத்தால் செறிவூட்டப்பட்ட மனமும் இருந்தால் அது சாத்தியம்’ என்றேன்.

உங்கள் மனநிலையின் மீது நீங்கள் செலுத்தும் அதிகாரம்தான் உங்களுக்கு வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதைப் புரிந்துகொண்ட நிமிடமே உங்களின் வெற்றிக்கான பாதை திறந்துவிடும்.

அதற்கு நான் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ மேதை ஹெராக்லிட்டஸ் (Heraclitus) கூறியதை மேற்கோள் காட்டினேன். போர்க்களத்திலிருக்கும் நூறு பேரில் பத்து பேர் அங்கே இருக்க வேண்டிய தகுதியைக்கொண்டவர்களாக இல்லாமலும், எண்பது பேர் போர்ப் படையில் பங்கேற்கும் தகுதியை மட்டும் சரியான அளவில்கொண்டிருப்பவர்களாகவும், ஒன்பது பேர் நிஜமான படை வீரர்களாகவும், ஒரே ஒருவர் மட்டும் மாவீரராகவும் இருக்கிறார்கள் என்பதை அவர் கூறியிருந்தார். எனவே, உங்கள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் இதில் எந்த மாதிரியான ரோலை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதற்கு உங்கள் மனபலமே உறுதுணையாக இருக்கும். நம் வாழ்க்கை நம் கையில் மட்டும் இருக்கிறதே தவிர, நம்முடைய ஜீன்களின் கையில் இல்லை என்பதே என் கருத்து. என்னுடைய கதையே இதற்கான ஆதாரம்” என்று விளக்கியிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

முன்னேற்றப் பாதையிலிருக்கும் முக்கியச் சவால்களைப் பட்டியலிட்டிருக்கும் ஆசிரியர், அவை ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கி அவற்றை எப்படி வென்றெடுப்பது என்பதையும், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட நிகழ்வுகள் மூலமாகவே தெளிவுபடுத்தியிருக்கிறார். ``உங்கள் பாதையில் நிற்பது நீங்களா அல்லது மற்றவர்களா என்பதை முதலில் பட்டியலிடுங்கள்’’ என்று சொல்லும் நூலாசிரியர், ``உங்களை நீங்களே நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் துணிவைப் பெறுவது எப்படி?’’ என்பதையும் விளக்குகிறார்.

மிகவும் கேவலமான சூழ்நிலைகளில் இருக்கும் போதுகூட, அதில் ஏதாவது ஒரு விஷயம் அத்தனையையும் நமக்குச் சாதகமாக மாற்ற உதவும் அளவுக்குக் கைகொடுப்பதாக இருக்கும். அதைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் நாம் வென்ற சூழல் எப்படி இருக்கும், தோற்ற சூழல் எப்படி இருக்கும் என்பதை மனக்கண் முன் தோற்றுவித்துப் பார்க்க பழகிக்கொள்ள வேண்டும்.

`நீ தோற்பதற்காகவே பிறந்தவன்’ என்று காது புளித்துப்போகும் அளவுக்கு உலகம் திரும்பத் திரும்ப நம்மிடம் சொல்லும்போது, `இன்னும் கஷ்டப்படுவோம்; கஷ்டப்பட்டு முன்னேறுவோம்’ என்ற மனப்பக்குவத்தை நீங்கள் பெற வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

முன்னேற்றத்துக்கான பாதையை நம்முடைய அன்றாட செயல்களில் புகுத்திக்கொள்வது எப்படி என்பதை விளக்கியிருக்கும் ஆசிரியர், நம்மிடமிருக்கும் பெரிய கெட்ட குணமான, `ஒரு நிலையை அடைந்த பிறகு செயல்படாமல் போதல்’ என்பதிலிருந்து எப்படி மாறுவது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

“இறுதியாக உங்களுடைய பெரிய அளவிலான முயற்சிகளில் தோற்கும்போது, `எதனால் தோற்றோம்?’ என்பதை எழுதிப் பாருங்கள். தோல்விக்குப் பிறகு அதை எழுதிப் பார்க்கும் போதே நமக்கு நல்லதொரு மாற்றுவழி உதயமாகிவிடும். எவையெல்லாம் சரியாகப்போயின; எவையெல்லாம் தவறாகிப்போயின என்பதையெல்லாம் எழுதிப் பார்க்கும்போது மட்டுமே எந்த இடத்தில் நாம் தவறு செய்தோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் எண்ணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

உங்கள் மனநிலையின் மீது நீங்கள் செலுத்தும் அதிகாரம்தான் உங்களுக்கு வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதைப் புரிந்துகொண்ட நிமிடமே உங்களின் வெற்றிக்கான பாதை திறந்துவிடும்” என்று அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை அவசியம் பெற்றே ஆக வேண்டிய சூழலிலிருக்கும் உலகில் வாழும் நாம், இந்தப் புத்தகத்தை ஒரு முறை அவசியம் படிக்கலாம். வெற்றிக்கான ஊக்கத்தையும் பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்