நாணயம் புக் ஷெல்ஃப்

தங்கள் நிறுவனத்தை மிகப்பெரியதாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தொழிலதிபர்களுக்கு இருப்பது இயல்பு. ஆனால், `பெரிதாக மாற்றுவதற்கு பதில் ஸ்மார்ட்டாக மாற்றினால், சிறிய நிறுவனமாக இருந்தாலும் பல சாதகமான அம்சங்களைப் பெற முடியும்’ என்கிறது பால் ஜார்விஸ் (Paul Jarvis) எழுதிய ‘கம்பெனி ஆஃப் ஒன்’ என்ற புத்தகம்.

“தனியொருவனாகப் பெரிய அளவில் எதையும் சாதித்துவிட முடியாது என்ற எண்ணம்கொண்டிருந்தேன். ஒருநாள் அக்கவுன்டன்ட்டாக இருக்கும் நண்பர் ஒருவர், ‘இதுவரை சம்பாதித்ததை வைத்துக்கொண்டு ஆயுள் முழுக்க எனக்குப் பிடித்ததைச் செய்து செளகர்யமாக வாழ்ந்துவிடலாம் என்று நினைக்கிறேன்’ என்றார். மீதமிருக்கும் வாழ்நாளுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு, அதற்கான தொகையைக்கூட ஏற்கெனவே முதலீடு செய்து வைத்திருப்பதாகவும் சொன்னார்.

நன்றாக நடக்கும் அக்கவுன்டன்ட் தொழிலை விருத்தியாக்கி, பல்வேறு கிளைகளை உருவாக்கி அதன் மூலம் அதிகம் சம்பாதிக்க நினைக்காமல், `போதும்’ ன்று நினைக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால், அவரோ, ‘தொழிலை விருத்தி செய்துகொண்டே போனால் நான் நினைத்த எதையும் செய்ய முடியாது. தொழிலை நிர்வகிக்கவே நேரம் போதாது. `என் தொழிலைத் திறம்பட நிர்வகிக்க வேண்டும்’ என்று நினைக்கிறேனே தவிர, பெரிதாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சிறிதாக இருந்தால், எப்போது நான் `போதும்’ என்று நினைக்கிறேனோ அப்போது சுலபமாகத் தொழிலைச் சுருக்கிக்கொள்ளலாம்’ என்றார்.

`ஸ்மார்ட்டான சிந்தனைகள் வளர்ச்சியைக் கொடுக்கும்’ என்ற பொதுப்புத்தியை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், எல்லா வளர்ச்சியும் நன்மையளிப்பதில்லை என்பதே உண்மை. இது தனிமனிதர்களுக்கானது மட்டும் அல்ல. நிறுவனங்களுக்கும் பொருந்தும். வளர்ச்சி வேண்டுமா... நிறைய வாடிக்கையாளர்கள் வேண்டும். அதற்கு நிறைய பணியாளர்கள் வேண்டும். நிறைய வருமானம் வேண்டுமா... நிறைய செலவு செய்ய வேண்டும்.

இப்படி எல்லாவற்றையும் பெரிதாக நினைப்பதால், அவற்றுக்கான விளைவுகளும் பெரிதாகவே இருக்கும். `பெரிய அளவில் ஆள் சேர்க்காமல் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்திக்கொள்ளும் உத்திகள் இல்லவே இல்லையா... செலவினங்கள் அதிகமாகாமல் வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ள வழிவகைகள் இல்லையா... வாடிக்கையாளர்களிடம் பொருளைக் கொண்டு சேர்க்கும்போதே அதை உபயோகிக்கும் முறைகளை விளக்கமாகச் சொல்லி புரியவைப்பதன் மூலம் வாடிக்கையாளர் சேவை/சப்போர்ட்டுக்கு அதிக ஆட்களை பணியமர்த்துவதைத் தவிர்ப்பதற்கான வழிகள் இல்லையா... புதிய விரிவாக்கங்களைச் செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடாமல், சிறப்பான திறமைகளால் குறைந்த நேரத்தில் அந்த வேலைகளை முடித்து விட்டு வேலையிலிருந்து அதிக நேரம் விலகியிருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாதா?’ எனப் பல கேள்விகளைக் கேட்கிறார் ஆசிரியர்.

வளர்ச்சி என்பது எப்போதும் ஒரு புத்திசாலித்தனமான ஸ்ட்ராட்டஜியாக இருப்பதில்லை. வளர்ச்சி என்பது வைத்து பராமரிக்க முடியாத அளவுக்கான பணியாளர்களையும், தாக்குப்பிடிக்க முடியாத அளவிலான செலவினத்தையும், நாளொன்றுக்கு எக்கச்சக்கமான நேரத்தை அலுவலகத்திலேயே செலவிடவேண்டிய சூழலையும் கொண்டுவந்து சேர்த்துவிடக்கூடும். அதனால் பல நேரங்களில் மொத்தமாகக் கடையை மூட வேண்டிய சூழ்நிலையும் பல நிறுவனங்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இப்படி நிறுவனங்களைப் பெரிதாக மாற்றுவதற்காக உழைப்பதற்கு மாறாக சிறியதாக, ஸ்மார்ட்டானதாக, தாங்கும் சக்தி அதிகம்கொண்டதாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை” என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

“இன்றைய உலகில் சிறிய அளவில் செழிப்புடன் இருப்பது எப்படி என்று கண்டறிவதே நல்லது. இதுதான் ‘கம்பெனி ஆஃப் ஒன்.’ `கம்பெனி ஆஃப் ஒன்’ என்பதால் இது ஒரு நபர் கம்பெனிக்கான சூத்திரம் மட்டுமல்ல. தனியாளாக நீங்கள் சுயசார்புடன் திகழ நினைத்தால், அதற்கும் இந்த ஸ்ட்ராட்டஜி உதவும்.

கம்பெனி ஆஃப் ஒன் என்றால், ஒரு நிறுவனத்துக்கு வளர்ச்சி என்பது தேவைதானா என்று கேள்வி கேட்பது. சிறதாக இருப்பதை இறுதி இலக்காகக் கொண்டிருப்பதுதான் கம்பெனி ஆஃப் ஒன். நாம் அனைவருமே கம்பெனி ஆஃப் ஒன்தான். பெரிய நிறுவனங்களில் நீங்கள் பணியில் இருந்தாலும் உங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆகச்சிறந்த முறையில் நீங்கள் செயல்படுவீர்கள் அல்லவா... நீங்கள் பார்க்கும் வேலை பற்றி உங்கள் நிறுவனத்தில் யாருமே கவலைப்பட மாட்டார்கள். உங்கள் வெற்றி என்ன என்பது குறித்தும், அதன் இலக்கையும் நீங்களே நிர்ணயித்துக்கொண்டு அதை நிறுவனத்தின் இலக்குடன் இணைத்து செயல் படுவதுதான் நீங்கள் கம்பெனி ஆஃப் ஒன் என்பதற்கு உதாரணமாக இருப்பதைக் காட்டும். `அது எப்படி பெரிய நிறுவனத்துக்குள் இப்படி இருப்பது? என்று கேட்பீர்கள். இது கொஞ்சம் கஷ்டமானதுதானே தவிர சாத்தியமில்லாததல்ல.

நாம் புதிய வாடிக்கையாளர்கள்மீது கவனம் செலுத்துகிறோமா அல்லது பழைய வாடிக்கையாளர்களைக் கொண்டுவருவது எப்படி என்பதில் கவனம் செலுத்துகிறோமா... நம் நிறுவனத்தைப் பெரிதாக மாற்றுவதற்கு பதிலாக சிறப்பானதாக மாற்ற முயன்றால் என்ன... நம் நிறுவனத்துக்குக் கட்டாயம் வளர்ச்சி என்பது தேவைதானா... எந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டினால் நம்முடைய லாபம் குறைய ஆரம்பிக்கும் என்பது நமக்குத் தெரியுமா... எப்படி நாம் மற்றவர்களை வளரவிட்டு அவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளப்போகிறோம்... போன்ற கேள்விகளை `கம்பெனி ஆஃப் ஒன்’னாக இருக்க விரும்பும் நிறுவனங்கள் தங்களைத் தாங்களே அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

“இன்றைய உலகில் சிறிய அளவில் செழிப்புடன் இருப்பது எப்படி என்று கண்டறிவதே ‘கம்பெனி ஆஃப் ஒன்.’

அடுத்ததாக, `கம்பெனி ஆஃப் ஒன்’ என்பதற்குத் தேவையான சரியான மனநிலையைப் பெறுவதற்கான வழிமுறைகளையும், `கம்பெனி ஆஃப் ஒன்’ என்பதை அடைந்த நிலையிலேயே நிலை நிறுத்திக்கொள்வது எப்படி என்றும் ஆசிரியர் விளக்குகிறார்.

“உங்கள் சொல்லை எப்படி நீங்கள் காப்பாற்ற முயல்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள உங்களை நோக்கி வருவதை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை உற்று நோக்குங்கள்” என்கிறார் ஆசிரியர். “வளர்வதற்கான வாய்ப்புகளைப் புறந்தள்ளுவதல்ல `கம்பெனி ஆஃப் ஒன்.’ கண்ணெதிரே வரும் வாய்ப்புகளைக் கருத்தோடு கவனித்து, `இது நமக்கு மிக மிக உகந்ததுதானா?’ என்று கேள்விகளைக் கேட்ட பிறகு அதில் ஈடுபடுவதுதான் `கம்பெனி ஆஃப் ஒன்’ ” என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

`வளர்ச்சி... வளர்ச்சி...’ என்று எத்தனையோ நிறுவனங்கள் அலைந்துகொண்டிருக்கும் உலகில், தேவையற்ற வளர்ச்சிக்கு எதிரான கருத்துகளை ஆணித்தரமாகக் கூற முயலும் இந்தப் புத்தகத்தை எல்லோருமே ஒரு முறை படிக்கலாம்; பயன் பெறலாம்.

- நாணயம் டீம்