Published:Updated:

நாணயம் லைப்ரரி : முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறீர்களா? - வழிகாட்டும் அம்சங்கள்!

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் லைப்ரரி

உலக நடப்புக்கு ஒத்துவருமா என்று சற்றும் கவலைப்படாமல் நம் நம்பிக்கை சார்ந்து முடிவுகளை எடுப்பது தவறு!

ங்களுக்கு வாழ்க்கையிலும் பணியிடத்திலும் மிகச் சிறந்த முடிவுகளை எடுப்பது எப்படி என்பதில் குழப்பமா..? இந்தப் பிரச்னையை விளக்கமான தீர்வைத் தருகிறது நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் புத்தகமான ‘டிசிசிவ்'. சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் என்ற இருவர் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றனர்.

வேலையைவிட்டு அனுப்பலாமா, வேண்டாமா..?

ஷானன் என்ற பெண்மணி ஒரு சிறிய கன்சல்டிங் நிறுவனத்தின் தலைவர். க்ளைவ் என்பவர் அந்த நிறுவனத்தின் ஐ.டி டைரக்டர். இவரை வேலையைவிட்டு அனுப்பலாமா, வேண்டாமா என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க முடியாமல் ஷனான் திணறிக் கொண்டிருக்கிறார். என்னதான் பிரச்னை என்று பார்த்தால், க்ளைவ் நல்லவர்தான். ஆனால், ஒருநாளும் அவர் என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தாண்டி ஒரு மில்லி மீட்டர்கூட வேலை பார்க்க மாட்டார். அதற்காகத் திறமை இல்லாதவர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அவருடைய அணுகுமுறை (Attitude) என்பது ரொம்பவும் மோசமானது. சக பணியாளர்களைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை வேலையைவிட்டு தூக்கிவிடலாம் என்றால், அதற்கும் பயம். அவரைப் போல் கம்பெனியின் வாடிக்கையாளர்கள் டேட்டாபேஸை நிர்வகிக்க ஆள் கிடைக்காது. “இப்போது நீங்கள் சொல்லுங்கள், க்ளைவை வேலையைவிட்டு அனுப்பலாமா, வேண்டாமா?’’ என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

நாணயம் லைப்ரரி : முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறீர்களா? - வழிகாட்டும் அம்சங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சொல்லப்படாத உண்மைகள்..!

க்ளைவ் வேலையில் என்ன தேவையோ அதை மட்டுமே செய்கிறவர், எந்தப் புதிய முயற்சியையும் எடுக்கவே மாட்டார், ரொம்ப மோசமான ஆட்டிட்யூட் கொண்டவர் என்பதை வைத்துப் பார்க்கும்போது, அவரை வேலையிலிருந்து அனுப்பலாம் என்றே நமக்கு சொல்லத் தோன்றும். ஏனென்றால், நம் முன்னால் வைக்கப்படுகின்ற தகவல்களை வைத்தே முடிவெடுக்க முயற்சி செய்கிறோம். இதை ‘ஸ்பாட்லைட்’ எஃபெக்ட் என்பார்கள். சொல்லப்பட்ட தகவல்களை மட்டும் வைத்து முடிவெடுக்கத் துணிந்துவிடுகிறோம். க்ளைவை வேலையிலிருந்து அனுப்பாமல் அவருடைய குணத்துக்கு ஏற்றாற்போல் ஒரு பணிக்கு அவரை மாற்றலாம் அல்லது க்ளைவுக்கு ஒரு மென்டாரை ஏற்பாடு செய்து அவருடைய குறைகூறும் குணம் மற்றும் ஏனைய பணியிடத்தில் இருக்கும் குறைகளின் வீரியத்தைக் கொஞ்சம் குறைக்கலாம் இல்லையா? இந்த விஷயத்தில் க்ளைவ் பற்றி இன்னும் என்னவெல்லாம் சொல்லப்படாமல் இருக்கின்றன என்று பார்த்தால், பல விஷயங்கள் நம் பார்வைக்கு வரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

நாம் ஸ்பாட் லைட்டைக் கொஞ்சம் நகர்த்தி சுற்று முற்றும் இருக்கிற விஷயங்களையும் பார்க்க ஆரம்பித்தால், நம்முடைய முடிவு மாறுவதற்கான வாய்ப்புள்ளது இல்லையா? எனவே, ஸ்பாட்லைட்டில் இருக்கும் விஷயங்கள் மட்டுமே முடிவெடுப்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை.

நாணயம் லைப்ரரி : முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறீர்களா? - வழிகாட்டும் அம்சங்கள்!

தப்பும் தவறுமாக எடுக்கப்படும் முடிவுகள்..!

மனிதர்களின் முடிவெடுக்கும் பண்பு குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கரியர் குறித்த ஆய்வு முடிவுகள் வித்தியாசமானவையாக உள்ளன. உதாரணமாக, அமெரிக்கன் பார் அசோசியேஷனில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட 44% வழக்கறிஞர்கள் அப்போது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சட்டப்படிப்பு படிக்காதீர்கள் என்ற அறிவுரையையே வழங்கியுள்ளனர்.

நிறுவனத்தின் சீனியர் அதிகாரிகள் 20,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 40 சதவிகிதத்தினர் 18 மாதங்களுக்குள் வேலையைவிட்டுச் சென்றுவிடுகின்றனர் எனத் தெரியவந்தது.

தனிமனிதர்கள் அவர்கள் வாழ்வில் எடுக்கும் முடிவுகளைப் பார்த்தால், அதிலும் இதே நிலைதான். சேமிக்க முடியும் அளவுக்கு சம்பாதிப்பவர்களில் பலரும் தங்களுடைய ஓய்வுக்காலத்துக்குத் தேவையான சேமிப்பைக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால், அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு விற்பதால் நஷ்டம் அடையும் போர்ட் ஃபோலியோவையே அவர்களில் பலரும் கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிக்கல் இல்லாத முடிவு..!

சாதாரணமாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் சாதக பாதகங்களை வரிசைப் படுத்தி எழுதி பின்னர் முடிவெடுங்கள் என்பார்கள். நம்முடைய மூளையோ சுலபத்தில் ஒரு பக்கம் சாய்ந்துவிடும் குணம் கொண்டது. அதனால் எழுதிப்பார்க்கிறேன் பேர்வழி என்று எழுதிய விஷயங்களில் நமக்கு எது வேண்டுமோ, அதை மட்டும் எடுத்துக்கொண்டு முடிவை எடுத்துவிடுவோம்.

நாணயம் லைப்ரரி : முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறீர்களா? - வழிகாட்டும் அம்சங்கள்!

நான்கு வில்லன்கள்..!

முடிவெடுப்பதில் முக்கியமான நான்கு வில்லன்கள் இருக்கின்றனர். முதலாவது வில்லன், நமக்கு இருக்கும் வழிகளில் குறைவானவற்றையே கவனத்தில் கொண்டு முடிவெடுப்பது. முதலில் என்னென்ன மாற்று வழிகள் இருக்கின்றன எனச் சிந்திக்க வேண்டும்.

இரண்டாவது, தற்போதைய உலக நடப்புக்கு ஒத்துவருமா வராதா என்று சற்றும் கவலைப்படாமல் நம்முடைய நம்பிக்கைகளுக்கு ஒத்துப் போகும் விஷயங்களைச் சார்ந்தே முடிவுகளை எடுப்பது. இதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் எடுக்கும் முடிவுக்கு எதிர்மறையான முடிவை எடுத்தால் என்னவாகும் என்பது குறித்து முழுமையாகப் பரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் ஏற்கெனவே எடுக்கலாம் என்று நினைத்த முடிவை எடுத்தால் என்னென்ன மாதிரியான சிக்கல்கள் வரும் என்பது நமக்குத் தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும்.

மூன்றாவது, முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் நமக்கு இருக்கும் உணர்வுகள் (கோபம், சாந்தம், மகிழ்ச்சி, துக்கம் போன்றவை) சார்ந்தே முடிவுகளைத் தீர்மானிப்பது. இந்த வித உணர்வுகளோடு எடுக்கும் முடிவுகள் அனைத்துமே குறுகியகாலத்தில் சரியானவை போன்று தோன்றினாலும், நீண்டகாலத்தில் தவறானவையாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

நான்காவது, நம்முடைய கணிப்புத்திறன் மீது நமக்கிருக்கும் அதீத நம்பிக்கை.

நாணயம் லைப்ரரி : முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறீர்களா? - வழிகாட்டும் அம்சங்கள்!

இந்த வில்லன்களை எப்படி வெல்வது? முதலில் நம்முன்னே இருக்கும் வழிகளைக் கண்டறிய முயல வேண்டும். அடுத்தபடியாக, நாம் எடுக்கும் முடிவு நடப்பில் இருக்கும் சூழ்நிலையுடன் ஒத்துப்போகுமா என்று பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். இறுதி முடிவு எடுப்பதற்கு முன் அந்த முடிவிலிருந்து விலகி, தூரத்தில் நின்று ஏதேனும் புதிய கோணங்கள் (சாதக/பாதக) தெரிகிறதா எனப் பார்க்க வேண்டும்.

இறுதியாக நாம் எடுக்கப் போகும் முடிவு தவறாகிப் போய்விடவும் வாய்ப்புள்ளது என்பதை நினைவுகூர்ந்து, அதனால் வரக்கூடிய விளைவுகளை நாம் எடுக்காமல் தவிர்க்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் நாம் எடுக்கும் முடிவுகளை சிறப்பாக எடுக்கமுடியும் என்று சொல்லும் ஆசிரியர்கள், இறுதியாக நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே பூரணமாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் சொல்கிறார்கள். அதேநேரம், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறை களைக் கடைப் பிடித்தால் மேம்பட்ட, துணிச்சலான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை உங்களால் எடுக்க முடியும் என்று உறுதி கூறி புத்தகத்தை முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.

- நாணயம் டீம்