Published:Updated:

வேலை குடும்பம் பேலன்ஸ்! - நல்வாழ்க்கைக்கான வழிகள்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

நாணயம் புக் ஷெல்ஃப்

வேலை குடும்பம் பேலன்ஸ்! - நல்வாழ்க்கைக்கான வழிகள்!

நாணயம் புக் ஷெல்ஃப்

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

ன்றைக்கு நாம் 24/7 உலகத்தில் வாழ்கிறோம். இதில் குடும்பம்-வேலைச் சமநிலையை வெற்றிகரமாகப் பின்பற்ற முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுபவர்கள் ஏராளம். நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் புத்தகம் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறது. மைக்கேல் ஹின்ஸ் (Michael Hinz), ஜெஸ்ஸிகா ஹின்ஸ் (Jessica Hinz) ஆகிய இருவர் இணைந்து எழுதிய ‘லேர்ன் டு பேலன்ஸ் யுவர் லைஃப்’ என்ற இந்தப் புத்தகம், வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விரும்பிய சாதனைகளைச் செய்து, இலக்குகளை எட்டுவதற்கான வழிகளைச் சொல்கிறது.

வேலை குடும்பம் பேலன்ஸ்
வேலை குடும்பம் பேலன்ஸ்

முக்கியமானது எது?

``சில நாள்களில் நீங்கள் அலுவலகத்துக்குப் போய் ‘நான் எதற்குமே லாயக்கற்றவன்’ என்ற எண்ணத்தோடு அமர்ந்திருந்திருப்பீர்கள். `இந்தச் சின்ன விஷயத்தைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியவில்லையே...’ என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றியிருக்கும். அதற்கான காரணங்களைத் தீர ஆராய்ந்தீர்கள் என்றால் ஒன்று தெளிவாக உங்களுக்குப் புரியும். நீங்கள் செலவிடுவதில் பெரும்பான்மையான நேரம் உங்களுக்கு சிறிதும் முக்கியமில்லாத, ஆனால் அடுத்தவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் விஷயங்களுக்கானவையாக இருக்கும். நமக்கு எது முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் இதைச் சரிசெய்வதற்கு வழிவகை செய்யும்.

அது ஒன்றும் சுலபமான காரியமல்ல. ஏனென்றால், `நாம் நம்முடைய பணம், நேரம் ஆகியவற்றை நமக்காக மட்டுமே செலவிடப் பழகிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது நம்மை சுயநலக்காரராக வெளிக்காட்டுவிடுமே (பணம்கூட பரவாயில்லை... நேரத்தை அளவிட ஆரம்பித்தால்...)’ என்ற பயம்தான் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறது’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Learn to Balance Your Life
Learn to Balance Your Life

பழக்கத்தை மாற்றுங்கள்!

``சமநிலை என்பது நிறுவனத்துக்குள் நீங்கள் செயல்படும் வழிவகைகளிலேயே இருக்கிறது. `அது எப்படி?’ என்று நீங்கள் கேட்கலாம். ஒரே காரியத்தில் தன்னை மறந்து ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு, எல்லா விஷயங்களுக்கும் நேரம் ஒதுக்குவதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொள்ள முயல வேண்டும். இதைப் பழக்கமாக்கிக்கொள்வது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், அதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டால் இவை எல்லாமே எல்லை மீறிச் செல்வதற்கு முன்னாலேயே சுலபத்தில் உங்களால் சரிசெய்யப்பட்டுவிடும்’’ என்கிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள். இதை நடைமுறைப்படுத்த நீண்டகாலம் பிடிக்கும். ஆனால், நடைமுறைப்படுத்த செய்ய வேண்டிய காரியங்கள் மிகப்பெரிய அளவில், தீவிரமானதாக இருக்காது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சோம்பேறித்தனத்தை ஒழித்துக் கட்டுங்கள்!

உங்கள் செயல்பாடுகளில் சின்ன சின்ன மாறுதல்களைக் கொண்டு வந்தாலே போதுமானது. பெரும்பாலும் மாற்றத்தைக் கொண்டுவரத் தடையாக இருப்பது நம் சோம்பேறித்தனம்தான். சோம்பேறித்தனத்தால் நாம் மாற முடியாமல் அவதிப்படுகிறோம்.

வேலை குடும்பம் பேலன்ஸ்
வேலை குடும்பம் பேலன்ஸ்

உதாரணமாக, பெரிய வருமானமோ, சவால்களோ இல்லாத வேலையில் நீங்கள் நீண்ட நாள்கள் இருந்துவருவீர்கள். அதற்கு என்ன காரணம்... அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மற்றும் சக பணியாளர்களிடம் நன்கு பழகியிருப்பீர்கள். அதனாலேயே, `அந்த வேலையைவிடச் சிறந்த வேலை நமக்குக் கிடைக்காது’ என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கியிருக்கும்’’ என்கின்றனர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். ஆனால், உங்கள் வாழ்க்கை முழுமையானதாக இருக்கும் வண்ணம் மாற்றப்பட வேண்டுமென்றால் இதைச் செய்தேயாக வேண்டும். நீங்கள் முக்கியமானவர்கள் என்று நினைக்கும் நபர்களை (குடும்பத்தினரை) நீங்கள் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றால், இந்த மாற்றங்களை அவசியம் கொண்டு வந்தேயாக வேண்டும்.

Nanayam Book Self
Nanayam Book Self

என்ன செய்ய வேண்டும்?

``நீங்கள் செய்யக் கூடாது என்று நினைப்பவற்றை, `செய்ய முடியாது’ என்று வெளிப்படையாகச் சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் மற்றவர்களிடம் வேலையைக் கொடுத்து வாங்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வேலையைச் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்தும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் நம் கையிலிருக்கும் நேரத்துக்குள் எக்கச்சக்கமான வேலைகளை முடிப்பதற்கான கெடுக்களை ஒருபோதும் வைத்துக்கொள்ளக் கூடாது. உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் மற்றும் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனம் போன்றவற்றை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் ஒரு விஷயத்தைச் செய்யத் திட்டமிடும்போது அதற்குத் தேவைப்படும் நேரத்தைவிட கொஞ்சம் அதிகப்படியான நேரத்தை ஒதுக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். இந்த அதிகப்படியான நேரம் ஒவ்வொரு காரியத்தைச் செய்யும்போதும் நாம் எதிர்கொள்ளும் எதிர்பாராத தாமதங்களைச் சரிசெய்துகொள்ள உதவும்’’ என்கிறார்கள் ஆசிரியர்கள் ஜெஸ்ஸிகா ஹின்ஸும் மைக்கேல் ஹின்ஸும்.

நம் கையிலிருக்கும் நேரத்துக்குள் எக்கச்சக்கமான வேலைகளை முடிப்பதற்கான கெடுக்களை ஒருபோதும் வைத்துக்கொள்ளக் கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒரு பயிற்சிப் புத்தகம்!

இந்தப் புத்தகம் ஒரு பயிற்சிப் புத்தக அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முடிக்க முடிந்த அளவிலான திட்டங்களைத் தீட்டுவது எப்படி, உங்களுடைய இலக்கை நிர்ணயிப்பது எப்படி, வேலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே வண்டியைச் சரிசமமாக ஓட்டுவது எப்படி. நம்மை நோக்கி வரும் பேப்பர்கள், இ-மெயில்கள் போன்றவற்றில் எதற்கு நடவடிக்கை தேவை, எது வெறுமனே பாதுகாக்கப்பட மட்டுமே வேண்டும், எது குப்பைத்தொட்டிக்குப் போக வேண்டும் என்று பிரித்துக்கொள்வது எப்படி, நம்முடைய நேரத்தை வீணடிக்கும் விஷயங்கள் மற்றும் நபர்களைக் கண்டறிந்து கையாள்வது எப்படி, பயணம் செய்யும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்வது எப்படி, நம்முடைய திறன் வளர்ச்சிக்கான முதலீடுகளைச் செய்வது எப்படி, நம்முடைய சொந்தபந்தம் மற்றும் நண்பர்களின் உறவுகளைச் சரிவரக் கையாள்வது எப்படி, நட்பு வட்டத்தில் தொடர்புடன் இருப்பது எப்படி, ஒவ்வொரு நாளிலும் குறிப்பட்ட நேரம் ஒதுக்கிச் சுத்தம் செய்ய வேண்டியவற்றை (இ-மெயில் முதல் வேண்டாத குப்பை வரை) சுத்தம் செய்துகொள்வது எப்படி, மன அழுத்தம் வரும்போது அதை உடனுக்குடன் சரிசெய்துகொள்வது எப்படி, சாக்குப்போக்குச் சொல்லாமல் ஃபிட்னெஸ் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி, படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் செய்து முடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, சிந்தனை செய்வதற்கான நேரத்தை ஒதுக்குவது எப்படி... போன்ற 22 விஷயங்களுக்கான பயிற்சிகளைத் தரும் பாடங்களைக்கொண்டு, எப்படி வாழ்க்கையைச் சமநிலையில் வைத்துக்கொள்வது என்பதை விளக்கியிருக்கிறார்கள் இதன் ஆசிரியர்கள்.

வாழ்க்கையில் சமநிலையைக் கொண்டு வருவது ஒரு முறை செய்து முடிக்கக்கூடிய காரியமில்லை. அது நம்முடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடக்க வேண்டிய நடைமுறை.

வேலை-வாழ்க்கைச் சமநிலை மிக மிகக் குறைவாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அதை வளர்த்தெடுப்பதற்கான பாடங்களைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை அவசியம் படித்துப் பயன்பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism