வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆக வேண்டும் என விரும்புவோர் ஏராளம். ஆனால், அப்படியான விருப்பங்கள் அனைத்துமே விண்ணை எட்டுவதில்லை! தான் விரும்பும் துறையில் வெற்றி காணத் துடிக்கும் தொழில்முனைவோர்கள் தங்களின் பேரார்வம், உலக நடைமுறையில் சாத்தியமானவை மற்றும் நோக்கம் போன்ற முக்கிய விஷயங்களைப் புரிந்துகொள்வது குறித்து, அஜித் நவால்கா எழுதிய ‘லிவ் பிக்’ (Live Big) எனும் புத்தகம் நமக்கு விரிவாக விளக்குகிறது.

சவால்களும் ஆச்சர்யங்களும்!

தொழில்முனைவோர் ஆக நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, உங்களுடைய தொழில் என்பது ஒரு நிறுவனமல்ல... ஓர் அனுபவம் என்பதைத்தான். அந்த அனுபவம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக உதயமாகிறது. உங்களின் சந்தைக் குழுவுடன் பேசும்போது, தயாரிப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும்போது என ஒவ்வொரு சூழலிலும் அந்த அனுபவம் வெவ்வேறுவிதமாக உதயமாகிறது. ஒவ்வொரு கணமும் இதில் முக்கியம். இந்தக் கணங்களில் ஏற்படும் உணர்வுகள், ஒரு ராட்டினம்போல் ஏற்ற இறக்கங்களைக்கொண்டிருக்கும்.

கடுமையான சவால்களை நீங்கள் சந்திப்பீர்கள். `இவையெல்லாம் நல்லமுறையில் நடைபெறுமா?!’ என நீங்கள் ஆச்சர்யத்துடன் எதிர்பார்க்கும் தருணங்கள் இருக்கும். தவிர, சந்தேகத் தருணங்கள், கேள்விகள் நிரம்பிய தருணங்கள் போன்றவையும் எப்போதும் உங்களைச் சுற்றி இருக்கும். இவற்றுடன் உங்களைச் சூழ்ந்திருப்போர் சொல்லும் யோசனைகள் (பரிந்துரைகள்) வேறு எக்கச்சக்கமானதாக இருக்கும். பொதுப்புத்தியிலிருந்து விலகிச் செயல்பட வேண்டிய நிலையையும் அவ்வப்போது எதிர்கொள்வீர்கள்.

தொழில் வளர்ச்சி என்பது...

பலவிதமான குழப்பங்களிலிருந்து தெளிவுபெற்று நிறுவனத்தை நடத்திச் செல்லும்போதுதான் நீங்கள் உங்கள் தொழிலை வளர்த்தெடுக்கிறீர்கள். உங்கள் தொழில் வளர்கிறது என்றால், நீங்களும் வளர்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஏனென்றால், தொழில் வளர்ச்சி என்பது உங்களுடைய ஆற்றல் வளர்ச்சியைக் குறிக்கும். நீங்கள் உங்களுடைய உணர்வுகளை எப்படிக் கையாளப் பழகுகிறீர்கள், நம்பிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளை எப்படி நடைமுறைப் படுத்துகிறீர்கள், சிந்தனையை எப்படி விரிவுபடுத்திச் செயல்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்து தொழில் வளர்ச்சி பெறும். எந்தத் தொழில்முனைவோர் இவற்றையெல்லாம் சரிவர செய்கிறாரோ, அவர் லாபம் தரும் தொழிலை மிகச் சிறப்பாக நடத்திச் செல்கிறார் என்று பொருள்.

இன்றைய உலகில் புதிய ஐடியாக்களை உருவாக்குவதும், புதிய தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு மட்டுமே வெற்றிவாகை சூடிவிடலாம் என நினைப்பதும் தவறான கோட்பாடு. வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டிலும் சிறந்தவராகத் திகழ நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் நீங்கள் கொண்டிருக்கும் பழக்கவழக்கம் மற்றும் தன்மையைத்தான். நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை, பல்வேறுவிதமான மனநிலை, ஆன்மிக நிலை மற்றும் உணர்ச்சிபூர்வ நிலைகளைக் கடந்து பயணிக்கிறோம். இந்த நிலைகளை எப்படித் தெளிவாகக் கையாள்கிறோம்; அவற்றை எப்படி உண்மையாகவே நம்முடன் இணைத்துப் பார்க்கிறோம் என்பதே நாம் எந்த அளவுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் அடைகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.

பேரார்வம் நிலையானதா..?

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தில் பேரார்வம் (Passion) கொண்டிருப்பர். ஒரு தொழில்முனைவோரின் பேரார்வம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அது நிரந்தரமானதா எனப் பார்த்தால், இல்லை என்பதே நமக்குக் கிடைக்கும் பதில். ஏனென்றால், தொழில்முனைவோரின் பேரார்வம் மாற்றத்துக்கு உட்பட்டது; எளிதில் கணிக்க முடியாத ஒழுங்கற்ற, சீரற்ற, சிக்கலான ஒன்றாக இருக்கும்.

ஒன்றில் பேரார்வம்கொண்டிருக்கும் ஒருவர், நாள்பட நாள்பட அதில் ஆர்வம் குறைந்து மற்றொன்றை நோக்கிச் செல்வது இயல்பு. ‘என்னுடைய ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கிறதே!’ என்று ஒரு தொழில்முனைவோர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பேரார்வம் மாறிக் கொண்டேயிருப்பது சாபமல்ல; வரம். ஒரு தொழில்முனைவோர் ஆக, நீங்கள் பேரார்வம் கொண்டிருக்கும் விஷயத்தைத் துரத்திச் செல்லுங்கள். அதை ஒருபோதும் உங்களுடன் இணைத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், உங்கள் பேரார்வம் உலகத்துக்கு வேண்டாத விஷயமாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு.

வாழ்க்கையின் நோக்கம்!

அதேபோல்தான் வாழ்க்கையின் நோக்கமும். நோக்கம் என்பது, மிகப்பெரிய கற்பனைகொண்ட விஷயம். ஏன் நாம் மனிதராகத் தோன்றியுள்ளோம் என்ற கேள்விக்கு பதில் தேடினால், பதில் கிடைக்கவே கிடைக்காது. பிறந்ததால் வாழ்வது கட்டாயமாகி விட்டது என்பதே நிதர்சனமான உண்மை. இதில் நோக்கத்தைத் தேடினால் வெற்றி என்பது கிடைக்க வாய்ப்பில்லை. உங்கள் நோக்கம் என்பது நீங்கள் தேர்ந்தெடுப்பதில்தான் இருக்கிறது.

தொழில்முனைவோரின் ஆர்வம் என்பது எரிபொருள். நோக்கம் என்பது போய்ச் சேர வேண்டிய இடம். இந்த இரண்டையும் நடைமுறையில் எந்த அளவுக்கு இணைப்பது சாத்தியம் என்பதே தொழில்முனைவோர் பயணிப்பதற்கான சாலையின் வரைபடம். கரடுமுரடான ஒற்றையடிப் பாதையைக் கொண்ட ஓர் ஊர் என்று வைத்துக்கொள்வோம். புழக்கத்தில் இருக்கும் வாகனங்களைக்கொண்டு அந்த ஊருக்குப் போகவே முடியாது. அப்படிப்பட்ட சூழலில் தேவையான அளவுக்கு எரிபொருள் கைவசம் இருப்பதால் என்ன பயன்..? எனவே, ஒரு விஷயம் நடைமுறையில் சாத்தியப்படுமா என்பதை தொழில்முனைவோர் உணர்ந்துகொள்வது மிக மிக அவசியம்.

ஒன்றில் பேரார்வம் கொண்டிருக்கும் ஒருவர் நாள்பட நாள்பட அதில் ஆர்வம் குறைந்து மற்றொன்றை நோக்கிச் செல்வது இயல்புதான்.

எது நிஜமான யதார்த்தம்?

உங்களுடைய தயாரிப்புகள் மக்களுக்குத் தேவையானதாக இருப்பது, இதுபோன்ற தயாரிப்புக்கான தேவை சந்தையில் இருப்பது, உங்களுடைய உற்பத்திக்கான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சரியான திறமையைக் கொண்ட ஆள்களை உங்களால் கண்டுபிடித்து பணியமர்த்த முடிவது, உற்பத்தி செய்யும் நடைமுறைகளை உருவாக்கி அதை விரிவாக்கம் செய்வது... போன்ற திறன்கள் உங்களுக்குள் இருக்குமானால், நீங்கள்தான் மிகச் சிறந்த தொழில்முனைவோர் என்பதை எளிய வார்த்தைகளில் விளக்குகிறது இந்த நூல்.

ஒரு தொழில்முனைவோர் ஆக என்னென்ன விஷயங்களை நீங்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவான உதாரணங்களுடன் விளக்கும் நூலாசிரியர், ஒரு தொழிலுக்குப் பணம் மிக மிக அவசியம் என்பதையும் இறுதியாக விளக்குகிறார்.

இந்த உண்மையை எப்போதும் மனதில் வைத்துச் செயல்பட்டால் மட்டுமே நீங்கள் உங்களுடைய தொழிலில் புதிய உச்சங்களைத் தொட முடியும் எனக் குறிப்பிட்டு, இந்த நூலை நிறைவு செய்துள்ளார் நூலாசிரியர் அஜித் நவால்கா.

தொழில்முனைவோர் தொடர்பான பல்வேறு உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டும் இந்தப் புத்தகத்தைப் படித்தால், விரைவில் நீங்களும் ஒரு தொழில்முனைவோர் ஆகலாம்!

- நாணயம் விகடன் டீம்