Published:Updated:

அதிவேக மாற்றங்கள்... வெற்றியைத் தக்கவைக்க உதவும் சூட்சுமங்கள்!

நாணயம் புக் செல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் செல்ஃப்

நாணயம் புக் செல்ஃப்

அதிவேக மாற்றங்கள்... வெற்றியைத் தக்கவைக்க உதவும் சூட்சுமங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

Published:Updated:
நாணயம் புக் செல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் செல்ஃப்

ன்றைக்குப் புதிய மாற்றங்கள்தான் வெற்றியை நிர்ணயம் செய்கின்றன. நடக்கும், நடக்கப்போகும் அதிவேக மாற்றங்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாவிட்டால் தோல்வி என்பது நிச்சயம்; `மாற்றங்களைப் புரிந்துகொண்டு செயல்படும் நிறுவனங்கள்தான் வெற்றிகரமாக இயங்கும்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது அலெக்ஸ் மோஸ்டு (Alex Moazed) மற்றும் நிக்கோலஸ் எல் ஜான்சன் (Nicholas L. Johnson) இணைந்து எழுதிய ‘மாடர்ன் மானோபோலிஸ்’ எனும் புத்தகம். `21-ம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தில் வெற்றிகரமான நிறுவனமாக இருப்பது எப்படி?’ என்பதைச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

நோக்கியாவின் தோல்வி

கடந்த 2007-ம் ஆண்டு ஐபோனும் 2008-ம் ஆண்டு கூகுளின் ஆண்ட்ராய்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மொபைல்போன் என்ற களத்தின் சட்ட திட்டங்கள் ஒரேயடியாக மாறிப்போயின. ஹார்டுவேர் நிபுணத்துவத்தில் ஜெயித்துக்கொண்டிருந்த ஒரு துறையை, சாஃப்ட்வேர் நிபுணத்துவத்தை வைத்து ஜெயிக்க வேண்டிய களமாகப் புரட்டிப்போட்டன ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள்.

மொபைல்போன்
மொபைல்போன்

இத்தனைக்கும் நோக்கியாவை சாதாரண நிறுவனமாக யாரும் நினைத்துவிட முடியாது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் பின்லாந்து நிறுவனமான நோக்கியா, மரச் சாமான்கள் செய்வதில் ஆரம்பித்து, டயர் செய்வது வரை பல்வேறு தொழில்களைச் செய்து வந்தது. அந்தத் துறைகளில் பலவிதமான நஷ்டங்களுக்கிடையே இயங்கிவந்த அந்த நிறுவனம், 1980-களின் இறுதியில் 1990-களின் ஆரம்பத்தில் தன் செயல்பாட்டுத் திட்டங்களை முழுமையாக மாற்றி வெற்றியை ஈட்டியது; அமெரிக்க மேனேஜ்மென்ட் அசோசியேஷன் வெளியிட்ட உலகின் முக்கிய 50 நசிந்த தொழில்களை மீட்டெடுத்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

மொபைல் துறையிலும் சிக்கலைச் சந்தித்த வேளையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முந்தைய நிர்வாகியான ஸ்டீபன் எலோப் என்பவரை சி.இ.ஓ பதவியில் அமர்த்தியது நோக்கியா. `ஆப்பிளுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை; ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் இவை இரண்டில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என முடிவெடுத்தது. இந்த ஸ்ட்ராட்டஜி மாறுதலால் ஏற்பட்ட தொழில்ரீதியான இடைஞ்சல்கள் மற்றும் நோக்கியாவின் அதிகாரத்துவ உள்நிறுவனச் செயல்பாடுகள் போன்றவற்றின் தாக்கத்தால் அவர் திக்குமுக்காடிப்போனார். அப்போது நோக்கியா நிறுவன ஊழியர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார் அவர். ‘நெருப்பு பற்றி எரியும் மேடை’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தக் கடிதம், அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிவேக மாற்றங்கள்... வெற்றியைத் தக்கவைக்க உதவும் சூட்சுமங்கள்!

‘கடலில் எண்ணெய் எடுக்கும் ப்ளாட்ஃபார்மில் நெருப்பு பிடித்தது. அந்த ப்ளாட்ஃபார்மில் ஒரே ஒரு மனிதர் இருந்தார். நெருப்பின் உக்கிரம் அதிகரிக்க அதிகரிக்க அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். இன்னும் கொஞ்ச நேரம் அந்த இடத்திலேயே இருந்தால் நெருப்பு அவரைப் பொசுக்கிவிடும். அதனால் சற்றும் யோசிக்காமல் உறைந்துபோகும் அளவுக்குக் குளிர்ந்திருந்த கடல் நீரில் குதித்தார். 30 அடி ஆழம் வரை சென்று வந்த நிலையில் அவர் பிழைத்துக்கொண்டார். ஒருவேளை அவர் குதிக்க பயந்திருந்தால் என்னவாகியிருக்கும்... நெருப்பு அவரைப் பொசுக்கியிருக்கும் அல்லவா... அதேபோல்தான் நோக்கியாவின் தற்போதைய நிலைமையும்’ என்ற ரீதியில் தன் நிலையை உருக்கமாக அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் அவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாற்றம் நிச்சயம்!

எலோப் சொன்ன ‘Burning Platform’ கதையால், `சிம்பியன்’ எனும் நோக்கியாவின் இயங்குதளத்தின் வீழ்ச்சி வேகமாக உருவெடுத்தது. ஏனென்றால், அன்றைய சந்தையில் சிம்பியன் இயங்குதளமே மிகப் பெரிய சந்தைப் பங்களிப்பைக்கொண்டிருந்தது. ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டின் தாக்குதலுக்கு சிம்பியனால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது நிச்சயமான ஒன்றாக இருந்ததது; என்றாலும், அந்தக் கடிதம் வாடிக்கையாளர்கள் சிம்பியன் இயங்குதளத்தை அதிவேகமாக ஒதுக்குவதற்கு வழிவகை செய்தது என்பதே நிஜம்.

அதிவேக மாற்றங்கள்... வெற்றியைத் தக்கவைக்க உதவும் சூட்சுமங்கள்!

நோக்கியாவின் தோல்வியை இன்றைக்குப் பார்த்தால், அது சரியாக நிர்வகிக்கப்படாத ஒரு நிறுவனத்தின் கேஸ் ஸ்டடியாக மட்டுமே தெரியும். ஆழமாகச் சிந்தித்தால் மட்டுமே நோக்கியா இருந்த தொழிலின் அடித்தளமே மாற்றத்தைச் சந்தித்தது என்பது புரியும். இது நோக்கியாவுக்குக் கடைசிவரை பிடிபடவே இல்லை.

`அவையெல்லாம் டெக்னாலஜி நிறுவனங்கள். சிலிக்கான் வேலியிலிருந்து பல மாறுதல்கள் புறப்பட்டு வந்து தாக்கு தாக்கென்று தாக்கிச் சிதைக்கும். எங்கள் தொழிலிலெல்லாம் மாற்றம் என்பது வரவே வராது’ என்று சொல்பவரா நீங்கள்? `எல்லாத் தொழில்களிலும் இந்த இடைஞ்சல்கள் வர வாய்ப்பு மிக மிக அதிகம். இதுவரை வரவில்லையென்றால், வெகு சீக்கிரமே வரும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் இந்த நூலாசிரியர்கள்.

`ஏனென்றால் இன்றைக்கு நிறுவனங்களின் எல்லைகளை டெக்னாலஜிதான் நிர்ணயிக்கிறது. நிறுவனங்களின் எல்லைகளை விரிவாக்கவும் குறைக்கவும்கூடியதாக இருக்கிறது டெக்னாலஜி. இதனால் மிகப்பெரிய நிறுவனங்கள்கூட குறுகிய காலத்தில் வீழ்ச்சியடைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று சொல்லும் நூலாசிரியர்கள், அதற்கான காரண காரியங்கள் பலவற்றையும் விளக்குகின்றனர்.

`இந்தவித மாற்றங்கள், பல சிக்கல்களைக் கொண்டுவந்தாலும், நிறைய வாய்ப்புகளையும் உருவாக்கவே செய்கின்றன. எனவே, மாற்றங்களை நாம் சந்திக்கும்போதும், சோதனைகள் தோன்றும்போதும் எதனால் இப்படி நடக்கிறது என்ற அடிப்படைக் காரணத்தை மட்டும் கண்டுபிடிக்கத் தவறாதீர்கள்’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

அடித்தளமிட்ட சோஷியல் மீடியா

`மொபைல்போன், சோஷியல் மீடியா போன்றவை 10 வருடங்களுக்கு முன்னர் கொஞ்சம் பைத்தியக்காரத்னம் கொண்டதாகத்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தன. ஆனால், இன்றைக்கு அவைதான் வெற்றிகரமாக இயங்கும் பல்வேறு பிசினஸ்களுக்கு அடித்தளமாக இருக்கின்றன. இதனால்தான் சொல்கிறோம்... புதிய பிசினஸ் மாடல்கள் ஏற்கெனவே ஊறிப் போயிருக்கும் பிசினஸ்களின் கட்டமைப்புக்கு நிச்சயம் சவால்களைக் கொடுக்கவே செய்யும்’ என்கிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள்.

நிறுவனங்களின் எல்லைகளை விரிவாக்கவும் குறைக்கவும்கூடியதாக இருக்கிறது டெக்னாலஜி. இதனால் மிகப்பெரிய நிறுவனங்கள்கூட குறுகியகாலத்தில் வீழ்ச்சியடைந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன!

இந்தப் புதிய பிசினஸ் மாடல் என்பது ‘ப்ளாட்ஃபார்ம்.’ இந்த பிசினஸ், இரண்டு வெவ்வேறு குழுவினரை இணைக்கும் பணியைச் செய்கிறது. இந்த இணைப்பின் மூலம் அனைவரும் பலன் பெறுகிறார்கள். ப்ளாட்ஃபார்ம் என்பது ஏற்கெனவே இருக்கும் பிசினஸ் மாடல்களைவிட முற்றிலும் மாறுபட்டது. 20-ம் நூற்றாண்டில் நடைபெற்ற பல பிசினஸ்கள், இன்றைக்கு இருக்குமளவுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்ததேயில்லை.

ப்ளாட்ஃபார்ம்கள் வாடிக்கையாளர்களை அவர்களுடைய பொருள்கள் மற்றும் சேவைகளின் தேவைக்காக அதை வழங்கும் நிறுவனங்களுடன் இணைக்கின்றன. இவைதான் புதிய சந்தைகளை உருவாக்கித் தருகின்றன; பிசினஸ் நடைபெறும் சூழலை உருவாக்கித் தருகின்றன.

`நாம் எப்படி வேலை செய்கிறோம், எப்படி பிசினஸ் செய்கிறோம், எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பிலிருக்கிறோம் என்பதையெல்லாம் ப்ளாட்ஃபார்ம்களே நிர்ணயிக்கின்றன. இதைப் புரிந்துகொள்ளாததால்தான் நோக்கியா சரிந்தது. ஆப்பிளும் கூகுளும் வென்றது இதை தெளிவாகப் புரிந்துகொண்டதால்தான்’ என்று ஆணித்தரமாகச் சொல்லும் இந்த நூலின் ஆசிரியர்கள், இறுதி அத்தியாயத்தில், அடுத்து நடக்கப்போகும் பெரிய மாறுதல்களைக் கண்டறிவது எப்படி என்பது குறித்த விளக்கங்களையும் கூறியிருக்கிறார்கள்.

`மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று இயங்கும் இந்த வியாபார உலகில் அதைப் புரிந்துகொண்டு இயங்குவது எப்படி என்பதைச் சொல்லித்தரு இந்தப் புத்தகத்தை தொழில்முனைவோர் அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்