`நம்முடைய பர்சனாலிட்டியை (ஆளுமை குணம்) மாற்றவே முடியாது’ என்ற தவறான எண்ணமே பலரிடமும் இருக்கிறது. `பர்சனாலிட்டியை மாற்றிக்கொள்ள முடியும்.

அதன் மூலம் நம் வாழ்க்கையின் போக்கை நம்மால் மாற்றியமைத்துக்கொள்ள முடியும்’ என்ற கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறது ‘பர்சனாலிட்டி இஸ் நாட் பர்மனென்ட்’ என்ற புத்தகம். பெஞ்சமின் ஹார்டி (Benjamin Hardy) எழுதிய இந்தப் புத்தகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

நான்கு வண்ண பர்சனாலிட்டிகள்..!

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், இந்தப் புத்தகத்தை எழுத முக்கியமான காரணம், பர்சனாலிட்டி குறித்த வண்ணம் தொடர்பான பிரிப்பில் சிக்கிக்கொண்டதுதான். ஆசிரியர் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பாப்புலரான பர்சனாலிட்டி டெஸ்ட் நடத்தப்பட்டது. அந்த டெஸ்ட்டின் கோட்பாடு, மனிதர்களை அவர்களின் பர்சனாலிட்டி அடிப்படையில் நான்கு வண்ணங்களாகப் பிரித்து வகைப்படுத்துவது. சிவப்பு நிறம் என்று வகைப்படுத்தப்படுபவர்கள் நினைத்ததைச் சாதிக்கும் துணிவும் குணமும் கொண்டவர்கள்; நீல நிறம் கொண்டவர்கள் மனசாட்சிப்படி நடப்பவர்கள் மற்றும் உறவுகளை மதிப்பவர்கள்; வெள்ளை நிறம் கொண்டவர்கள் தங்களுடைய செயல் குறித்து தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மற்றும் சற்று மந்தமான செயல்பாட்டை உடையவர்கள்; மஞ்சள் என்பது ஜாலியான மற்றும் தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே ஒரு பார்ட்டியாகக் கருதுபவர்கள் என்று சொன்னது அந்த டெஸ்ட்.

திருமணத்துக்குத் தடையான நிறம்..!

ஆசிரியரின் மனைவியான லாரென், ஒரு சிவப்பு நிற பர்சனாலிட்டி கொண்ட ஆசாமியைத் திருமணம் செய்துகொண்டு, அந்த நபர் கொடுத்த இம்சை காரணமாக விவகாரத்து பெற்றிருந்தார். ஆசிரியரோ, வெள்ளை நிற பர்சனாலிட்டி. ஏற்கெனவே அனுபவித்த கொடுமைகள் காரணமாக அவர் எப்படி மாறிப்போயிருப்பாரோ என்ற கேள்வி அவர்களின் திருமணத்துக்கு ஒரு தடையாக நிற்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் லாரெனையே திருமணம் செய்து கொண்டார் ஆசிரியர். 14 ஆண்டுகளில் ஐந்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஆசிரியர்.
.நாணயம் புக் ஷெல்ஃப்: பதவி உயர்வு கிடைக்காததற்கு என்ன காரணம்?.
தவறான கணிப்புகள்..!

‘‘நம்மில் பலரும் இந்த வகையில் தவறாக கணிக்கப் பட்டவர்களே. பர்சனாலிட்டி டெஸ்ட் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயமே தவிர, அது சொல்லும் வகையில் ஒருவருடைய பர்சனாலிட்டி என்பது அச்சு அசலாக இருப்பதேயில்லை. சில நேரம், அது ஒருவருடைய பர்சனாலிட்டி குறித்த மிக மிகத் தவறான ஒரு கணிப்பாகக்கூட இருந்துவிடக்கூடும்.

`ஒருவருடைய பர்சனாலிட்டி என்பது அவருக்கு இயல்பாகவே அமைந்துள்ள ஒரு விஷயம், அதை மாற்றவே முடியாது’ என்று புரிந்துவைத்திருப்பதிலிருந்தே பிரச்னை ஆரம்பிக்கிறது. பர்சனாலிட்டி என்பது மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம். மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பவர்கள். `உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, பர்சனாலிட்டி மட்டும் மாறவே மாறாது என்றால் எப்படி?’’ என்கிறார் ஆசிரியர்.

மாற விரும்பும் மனிதன்..!

“இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று, `மனிதர்களில் 90% பேர் தங்களுடைய பர்சனாலிட்டியில் சிலவற்றை மாற்றிக்கொண்டு தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடையவே நினைக்கின்றனர்’ என்கிறது.

பர்சனாலிட்டி என்பது மாற்றக் கூடியதே என்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு டேட்டாக்கள் சமீப காலத்தில் வெளியாகின்றன. `மனிதர்கள் தங்களுக்கு எது சிறப்பானதாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையில் பயணிக்கும் சுதந்திரம் கொண்ட வர்கள்’ என்கிறோம். அப்படியிருக்க, பர்சனாலிட்டியிலும் எது நமக்கு உதவியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், அந்தப் பாதையில் பயணிக்க அவர்கள் முயல்வார்கள் இல்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

பர்சனாலிட்டியை மாற்றிக்கொண்டால்..!

``பர்சனாலிட்டியை மாற்றிக்கொண்டால் பின்வரும் பலன்கள் கிடைக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

1) பர்சனாலிட்டியே ஒருவரின் வாழ்வையும் தாழ்வையும் நிர்ணயிக்கிறது என்ற நம்பிக்கையை முழுமையாக மாற்றிக்கொள்ள முடியும்.

2) உங்களுடைய இன்றைய அல்லது முந்தைய வாழ்க்கையிலிருந்து எந்தவோர் அளவுக்கும் முற்றிலும் மாறுபட்ட எதிர்கால வாழ்க்கையை உங்களால் நிர்ணயித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும்.

3) உணர்வுகளில் நெகிழ்வுதன்மையைக் கொண்டுவந்து உங்களுடைய முந்தைய வாழ்க்கை எந்தவிதத்திலும் எதிர்கால வாழ்க்கையை பாதிக்காதபடி செய்ய முடியும்.

4) ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்று அதிர்ச்சியடையாமல், ‘எனக்காகத்தான் இது நடக்கிறது’ என்ற எண்ணம் உங்களை வாழவைக்கும்.

5) உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல வைக்கும்.

6) உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களுடைய திட்டமிட்ட இலக்கை அடைய உங்களை ஊக்குவிப்பவர்களாக மாறவைக்கும்.

7) உங்கள் ஆழ்மன சக்தியை ஊக்குவித்து, உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் விஷயங்களைத் தகர்த்தெறியச் செய்யும்.

8) உங்களுடைய சூழ்நிலையை மாற்றியமைத்து உங்களுடைய கடந்த காலத்தில் நீங்கள் ஆழ்ந்து கிடப்பதிலிருந்து விடுவித்து, உங்களை எதிர்காலத்தை நோக்கித் தள்ளிச் செல்லும்.

பர்சனாலிட்டியை மாற்றிக்கொள்ள..!

``பர்சனாலிட்டி என்பது மாறும் தன்மையும் வளைத்துக் கொள்ளக்கூடியதுமான விஷயம்தான்’’ என்று சொல்லும் ஆசிரியர், பின்வரும் நான்கு விஷயங்களே பர்சனாலிட்டியை வழிநடத்திச் செல்லும் என்கிறார்.

1) நம் வாழ்க்கையில் கசப்பான அனுபவம் தந்த நிகழ்ச்சிகளை (அதிர்ச்சி/வலி தரக்கூடிய விஷயங்கள்) நம்மைப் பழைமையில் அழுந்தச் செய்கிறதா அல்லது புதியவற்றை நோக்கி ஓடவைக்கிறதா?

2) ‘நான் இப்படித்தான்’ என நாம் நம்மைப் பற்றி என்று ஒரு கதையை மற்றவர்களிடம் சொல்வோம். அது எந்த மாதிரியான கதை?

3) நம்முடைய ஆழ்மனம் ‘இது போதும்’ (வாழ்க்கை, வேலை, அந்தஸ்து என) என்று ஒரு விஷயத்தை ரகசியமாக ரசித்து வாழும். அதை உணர்ந்துகொண்டால் அதை மாற்றியமைப்பதன் மூலம் முன்னேற்றப் பாதையில் வேகமாக முன்னேற முடியும்.

4) நாம் வாழும் சூழல் நம்மை முன்னேறச் செய்ய இசைந்ததாக இருக்கிறதா அல்லது தேங்கியிருக்கும் இடத்திலேயே இருக்கச் செய்கிறதா?

``பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்யும் இந்த நான்கு அடிப்படை நெம்புகோல்களைச் சரிவரப் புரிந்துகொண்டு செயல்பட்டால், நம் தேவைக்கேற்ப பர்சனாலிட்டியை நம்மால் கட்டமைத்துக் கொள்ள முடியும். இந்தக் கலை உங்களுக்குக் கைகூடி வந்துவிட்டால், உங்களுடைய கடந்த காலமும் எதிர்காலமும் நீங்களே கட்டமைத்துக் கொண்ட ஒரு விஷயமாகவே இருக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

பர்சனாலிட்டியை மாற்றியமைத்துக்கொள்ள உதவும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் டீம்