கற்றுக்கொள்வது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் நடக்கும். சிலர் மிக மிக நிதானமாகக் கற்றுக்கொள்வார்கள். இன்னும் சிலர் அதிவேகமாகக் கற்றுக்கொள்வார்கள். அதிவேகமாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வது எப்படி என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்கிறது ‘அல்ட்ரா லேர்னிங்’ என்ற புத்தகம். ஸ்காட் ஹெச்.யங் (Scott H.Young) எழுதிய இந்தப் புத்தகத்தில் பல சுவாரஸ்யமான மனிதர்களை நேரில் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கிறார் யங்.

உதாரணமாக, `உலகிலுள்ள பல நாடுகளுக்கும் சென்று, ஒவ்வொன்றிலும் மூன்று மாதங்கள் மட்டுமே தங்கியிருந்து, அந்த நாட்டு மொழியைச் சரளமாகப் பேச வேண்டும்’ என்ற சவாலை எடுத்துக்கொண்டு செயல்படுகிறார் ஒருவர். `எப்படி இது சாத்தியம்?’ என்று கேட்டால், ‘அந்த நாட்டில் கால்பதித்த முதல் நாளிலிருந்தே முன்பின் தெரியாத ஆட்களிடம் அந்த நாட்டு மொழியைப் பேச முயற்சி செய்ய வேண்டும்’ என்றாராம் அவர். அவருக்கு ஏற்பட்ட வித்தியாசமான ஓர் அனுபவத்தை இந்த நூலில் சொல்கிறார் ஆசிரியர்.

முன்றே மாதங்களில் புதிய மொழியைக் கற்கும் அந்த நபர் ஒருமுறை பிரேசில் நாட்டுக்கு சென்றிருந்தார். அங்கே இருந்தபோது விசாவை நீட்டிக்க இமிக்ரேஷன் அலுவலகத்துக்குச் சென்றிருந்தாராம். விசாவை நீட்டிக்க மறுத்திருக்கிறார்கள். அந்த அலுவலரை போர்ச்சுக்கீசிய மொழியில் அவர் திட்ட, போலீஸ் அவரைக் கைது செய்தது. கைது செய்த பிறகுதான் அவர் திட்டியதற்காகக் கைது செய்யப்படவில்லை என்பது தெரிந்தது. ‘தரை லோக்கலாக’ திட்டியதோடு, அவர் ஏற்கெனவே திருட்டுத்தனமாகக் குடியேறி விட்டு, இப்போது விசா வாங்கி அங்கேயே செட்டிலாகப் பார்க்கிறார் என்ற சந்தேகத்தால்தான் கைது நடவடிக்கையாம். ‘‘அதிக ரிஸ்க் எடுத்தால்தான் அதிவேகமாகக் கற்றுக்கொள்வது சாத்தியம்’’ என்றாராம் அந்த நபர்.

`அல்ட்ரா லேர்னிங்’ என்பது ஓர் உத்தி. தேவையான திறமையையும் அறிவையும் தானாகவே ஒருவர் கற்றுக்கொள்ளும் உத்தி. சுய முயற்சி மற்றும் கடுமையான பயிற்சியால் மட்டுமே அது சாத்தியப்படும். அல்ட்ரா லேர்னிங் என்பது ஏன் அவசியம்? முன்பெல்லாம், `நான்கு வருடப் பட்டப் படிப்பை முடித்தால், நல்ல வேலைக்குச் சென்று வாழ்நாள் முழுக்க பிழைத்துக்கொள்ளலாம்’ என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு ஒரு வேலைக்குச் செல்ல கல்வி தரும் திறன்கள் மட்டும் போதாது. பல சிறப்புத் திறன்கள் தேவைப்படுகின்றன. கம்ப்யூட்டர் புரோ கிராமர்கள் மட்டுமல்ல... டிசைனர்கள், டாக்டர்கள், நிர்வாகிகள், தொழில் முனைவோர்கள் எனப் பலதரப்பினருக்கும் அவரவர் ஈடுபடும் துறை அதிவேகமாக வளர் வதால், அதைவிட வேகமாக அவர்களுடைய திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அதற் காக அவர்கள் நிறைய கஷ்டப்படவும் வேண்டியிருக்கிறது.

அல்ட்ரா லேர்னிங் அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. ஏனென்றால், ஏற்கெனவே கணிசமான நேரத்தை நீங்கள் பார்க்கும் வேலைக்காக ஒதுக்கி அதனால் அசதியும் அடைந்திருப்பீர்கள். வருமானம் முக்கியம்தான். ஆனால், வருமானம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு எதிர்காலத்துக்கான முதலீடும் முக்கியம்தானே. அந்த முதலீடுதான் அல்ட்ரா லேர்னிங். வேலை மாற வேண்டுமா, புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டுமா, வேகமாகப் பதவி உயர்வுகளைப் பெற வேண்டுமா... அனைத்துக்கும் அல்ட்ரா லேர்னிங் அவசியம்.

சராசரிகளுக்கான காலம் காலாவதியாகி விட்ட காலகட்டம் இது. மத்தியரக திறன்கள் தேவைப்படும் வேலையான கிளார்க், டிராவல் ஏஜென்ட், கணக்குப் பதிவாளர்கள், தொழிற் சாலைப் பணியாளர்கள் போன்ற பணிகளில் புதிய டெக்னாலஜிகள் புகுத்தப்பட்டுவிட்டன. இவற்றுக்கு பதிலாக இரண்டு வகை பணி வகைகள் உருவாக்கப்பட்டுவிட்டன. ஒன்று, அதிக திறன்கொண்ட இன்ஜினீயர்கள், புரோகிராமர்கள், மேனேஜர்கள் மற்றும் டிசைனர்கள் போன்ற பணி வகைகளை உள்ளடக்கியது. மற்றொன்று, மிகவும் குறைந்த திறன்கொண்ட ரீடெயில் பணியாளர்கள், சுத்தம் செய்பவர்கள், வாடிக்கையாளர் சேவை ஏஜென்டுகள் போன்ற பணி வகைகளைக் கொண்டது. இதிலிருந்தே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது புரியும். டெக்னாலஜி மூலமாகக் குறைந்த கட்டணத்தில் உங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒரு அல்ட்ரா லேர்னராக மாற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒன்பது விஷயங்களைச் சொல் கிறார் ஆசிரியர்.

மெட்டா லேர்னிங்: (ஒரு மேப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்) உங்களுக்குத் தேவையான ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள். உங்களைப் பற்றி நீங்களே தீவிர ஆய்வு ஒன்றைச் செய்து, உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் திறன்கள் எப்படி புதிதாக நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயத்தைக் கற்க உதவும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

கவனம் குவித்தல்: உங்கள் கற்கும் திறனைக் கூர்மை யாக்குங்கள். கவனம் குவித்தல் என்ற அற்புதமான கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் கற்றலுக்கு மிக மிக உதவியாக இருக்கும்.

துணிந்து இறங்குங்கள்: எதில் நீங்கள் சிறப்பாகத் திகழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதில் துணிச்சலுடன் இறங்கிவிடுங்கள். அதை மற்ற வேலைகளுக்காக ஒதுக்காதீர்கள். ஏற்கெனவே நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலை செளகர்யமாக இருக்கிறது என்பதற்காக அதில் மட்டுமே ஈடுபட்டு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள மறந்துபோய்விடாதீர்கள்.

பயிற்சி செய்யுங்கள்: நீங்கள் எதில் பலவீனமாக இருக்கிறீர்களோ, அதைச் சரிசெய்யக் கடுமையான பயிற்சிகளைச் செய்யுங்கள்.

சுய தேர்வுகளை நடத்துங்கள்: கற்றவற்றைச் சோதித்துப் பாருங்கள். புரிந்துவிட்டதா, அதைப் பயன்படுத்த முடிகிறதா என்பது போன்ற கேள்விகளைக்கொண்ட சுய தேர்வுகளை நீங்களே நடத்திப் பாருங்கள்.

வருமானம் நமக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு எதிர்காலத்துக்கு முதலீடும் முக்கியம்!

பின்னூட்டங்களை நீங்களே கொடுத்துக் கொள்ளுங்கள்: முகத்தில் அடித்தாற்போல் பின்னூட்டங்களை நீங்களே கொடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய சரியான விமர்சனங்களை நீங்களே செய்தால் மட்டும்தான் முன்னேற்றம் சாத்தியப்படும்.

கற்றவற்றை நிலைநிறுத்திக்கொள்ளல்: புதிதாகக் கற்றுக்கொள்ளும் விஷயங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் கவனமாக இருங்கள். ஓட்டை வாளியில் தண்ணீர் நிரப்புவதால் பலன் ஏதுமில்லை. அதேபோல, நினைவில் வைத்துக்கொள்ளாமல் கற்பதில் பலன் ஏதுமில்லை.

உள்ளுணர்வுகளைக் கொண்டு கற்றலை மேம்படுத்துங்கள்: புதிய திறன்களை கற்றுக் கொள்ளும்போது அவற்றை நிலைநிறுத்த உங்கள் உள்ளுணர்வுடன் அதை இணைத்துக் கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள்.

செளகர்யத்தின் எல்லைகளைத் தாண்டுங்கள்: மேலே சொன்ன அனைத்துமே அடிப்படைகள்தான். நீங்கள் நிஜமாகவே ஒரு அல்ட்ரா லேர்னராக மாற வேண்டுமென்றால், உங்கள் செளகர்யம் என்ற எல்லையைத் தாண்டி உங்கள் பரிசோதனைகளைச் செய்து பாருங்கள். அப்போதுதான் நீங்கள் நினைத்த எல்லைகளைத் தொட முடியும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை அவசியம் ஒரு முறை படிக்கலாம்!

- நாணயம் விகடன் டீம்