நம்மால் அதையெல்லாம் செய்ய முடியாது’ என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கவே செய்கிறது.

‘இந்த எண்ணம் தவறானது. உங்களால் நிச்சயம் சாதனை படைக்க முடியும்’ என்ற பாசிட்டிவ் சிந்தனையை நமக்குள் ஆழமாக விதைக்கிறது டேனியல் சிடியாக் (Daniel Chidiac) எழுதிய ‘ஹு சேய்ஸ் யூ கான்ட்? யூ டு’ (Who says you can’t? You do) என்ற புத்தகம்.

``அது எப்படி அனைவராலும் சாதிக்க முடியும் என்கிறீர்களா... உங்களிடம் இருக்கும் முழுமையான சக்தியை நீங்கள் முழுவதுமாக அறிந்து, அதைப் பயன்படுத்தினால் நீங்கள் கனவு காணும் அத்தனை விஷயங்களையுமே உங்களால் செய்து முடிக்க முடியும்’’ என்பதைச் சொல்லி அதிரடியாக ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

‘‘நாம் அனைவருமே நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஓர் எண்ணம் வைத்திருப்போம். ஆனால், வெகு சிலரே அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த தெளிவான கற்பனையை, அனுபவத்தைக்கொண்டிருப்போம். ஏனென்றால், நாம் மனதார விரும்பும் வாழ்க்கை குறித்து ஆழ்ந்து சிந்தனை செய்வதற்கான தயக்கம் நம் அனைவருக்கும் மிக அதிகமாக இருப்பதுதான். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், மனிதர்கள் பலரும் இந்த உலகில் அவர்கள் வாழ நினைக்கும் வாழ்க்கையை நினைத்துக்கொண்டே (`அதை அடைய முடியாது’ என்ற எண்ணத்துடன்) வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். மனிதன், தன் திறமையின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும், அன்றாட வாழ்வில் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் கவலையால் செய்ய முடியாமல் போவதே இதற்குக் காரணம்’’ என்கிறார் நூலாசிரியர்.

போதைக்கு அடிமையானவர்

`இதையெல்லாம் சொல்வதற்கு இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு என்ன தகுதி இருக்கிறது’ என்ற கேள்வியை நாம் கேட்கலாம். அதற்கான பதிலை ஆசிரியரே சொல்கிறார். ‘‘போதை மருந்துகளுக்கு அடிமையாகி, உடல் மற்றும் மனரீதியான உளைச்சல்கள் பலவற்றை சந்தித்து மீண்ட என்னைவிட இதுகுறித்து யாரும் தெளிவாகச் சொல்லிவிட முடியாது. பார்க்க ஒரு வேலையில்லாமல், எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல், கையாலாகாத்தனத்தின் உச்சத்தில் இருந்தேன். அந்த நிலையிலிருந்து என்னால் என்னுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள முடிந்ததென்றால், உங்களால் நிச்சயமாக மாற்றியமைக்க முடியும்.

அந்த நேரத்தில், வாழ்க்கையில் முழுமையாகத் தோல்வியடைந்த மனிதனாக என்னை உணர்ந்த நான், `ஏன் ஒரு சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள். மற்றவர்களோ தாங்கள் நினைத்த சாதாரணமான விஷயத்தைக்கூட எட்ட முடியாத நிலையில் உழல்கிறார்களே ஏன்?’ என்ற கேள்வி எனக்குள் தோன்றியது. இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய நான் மேற்கொண்ட பயணத்தில் கண்டுகொண்டதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்’’ என்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

வெற்றியாளர்களின் செயல்பாடுகள்!

வெற்றிகரமான மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து, அவர்களின் எந்தவிதமான செயல்பாடு அவர்களை வெற்றி பெறச் செய்தது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, அதன் மூலம் கண்டறிந்த விஷயங்களை விளையாட்டு வீரர்களில் ஆரம்பித்து, டி.வி புகழ் பர்சனாலிட்டிகள் வரையில் பயிற்சியளித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். ``வெற்றிகரமாக வாழும் மனிதர்களின் செயல்பாடுகள் பலவும் ஒரு சில வகைகளாக (Patterns) இருக்கின்றன’’ என்று சொல்லும் ஆசிரியர், அவை என்னென்ன என்பதை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்களைக் கண்டுபிடியுங்கள்!

``வெற்றிகரமாக வாழத் தேவையான அறிவைப் பெறுவதற்கான சுய கண்டுபிடிப்பு என்பதற்கான தயார்நிலையில் நாம் இருப்பது மிக முக்கியமானது. நான் சந்தித்த அனைவருமே அந்தவிதமான சுய கண்டுபிடிப்பைச் செய்வதில் ஆர்வம்கொண்டவர்களாக இருந்தனர். எங்கே இந்த விஷயத்தை ஆரம்பிப்பது என்று அவர்களுக்குத் தெரியாமலிருந்தது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் அந்தக் கண்டுபிடிப்பை வெற்றிகரமாகச் செய்ததன் மூலம்தான் வெற்றி பெற்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.’’
.நாணயம் புக் ஷெல்ஃப் : புத்திசாலிகள் செய்யும் முட்டாள்தனம்!.
எதற்கு எவ்வளவு சக்தி?

``ஒரு விஷயத்தை நோக்கி நாம் எந்த அளவுக்கான சக்தியைச் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு வேகமாக நாம் அந்த விஷயத்தைச் சென்றடைய முடியும் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நம்மில் பலர், நம் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தராத அல்லது முன்னேற்றத்துக்கான பாதையைத் தடுக்கக்கூடிய விஷயங்களிலேயே நம் சக்தியைச் செலவழிக்கிறோம். எனவே, எது நமக்கு ஆக்கம் தரும்... எது நமக்கு ஆக்கம் தராதது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதில் நம் சக்தியைச் செலவழிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

``நமக்குப் பிடித்ததை அடைவதற்கான நம் பயணத்தில் தெளிவுடனும், மனரீதியான அளவில் சரியானதொரு உந்துதலுடனும் செயல்பட்டால் மட்டும்தான் நம்மால் வெற்றிபெற முடியும்’’ என்கிறார் ஆசிரியர். மேலும், ``வாழ்வில் வெற்றியடைய நம் உறவுகளின் பங்களிப்பு மிக மிகத் தேவையான ஒன்று. அதிலும் கணவன்/மனைவின் பங்கு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, நல்லதொரு உறவைப் பேணிக்காப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சீராக இல்லாமலிருக்கும் உறவுகளைக் கண்டறிந்து சரிசெய்யவோ, வெளியேறவோ முடிவெடுக்க வேண்டும்’’ என்கிறார்.

உடல்நலம் மிக முக்கியம்!

``எண்ணிய விஷயங்களை எண்ணியவாறே அடைந்தாலும் உடல்நலம் குன்றிய ஒருவரை வெற்றி பெற்றவர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர் பெற்ற வெற்றியை அனுபவிக்க நல்ல உடல்நலம் தேவை’’ என்கிறார் ஆசிரியர். எனவே, உடல்நலம் பேணுதல் என்பது வெற்றி பெறுவதற்கான அடிப்படை விஷயங்களில் ஒன்று.

விழித்திரு, உடைத்தெறி!

``நம் மூளையை விழித்திருக்கச் செய்வதும், மனதைக் கட்டிப்போட்டிருக்கும் தளைகளை உடைத்தெறிவதும் முன்னேற்றத்தைப் பெறுவதற்கான மிக அவசியமான செயல்கள்’’ என்று சொல்லும் ஆசிரியர், நாம் பெறக்கூடிய வெற்றியின் எல்லைகளை நிர்ணயிப்பதில் மூளை மற்றும் மனதின் பங்களிப்பை விளக்கமாகக் கூறுகிறார். உங்கள் மூளை மற்றும் மனதின் செயல்பாடுகள் உங்களை மட்டுமல்ல, உலகத்தையே மாற்றும் அளவுக்கு வல்லமை படைத்தவை.

நிஜமான வெற்றி எது?

வெற்றி பெற்ற அனைவருமே மனநிறைவுடன் இருப்பதில்லை. நிஜமான வெற்றி என்பது மனநிறைவின் உச்சமே.

உங்களை எது மனநிறைவுடன் வைத்திருக்கிறது என்பதைக் கண்டறியுங்கள். அதை விட்டுவிட்டு நீங்கள் வாழும் சமூகம் எதை வெற்றி என்கிறதோ, அதைத் துரத்திச் செல்லாதீர்கள்’’ என்கிறார் சிடியாக்.

முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சி குறித்த பல முக்கிய கருத்துகளைத் தெளிவுபடுத்தும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை அவசியம் படித்துப் பயன்பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்