நாணயம் புக் ஷெல்ஃப்

ஒரு மேலாளர் (மேனேஜர்), `திறமைசாலி’ என்ற பெயரை எப்போது பெறுகிறார்... நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளை எடுத்துக்கொள்வதிலும், எடுத்துக்கொண்ட பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதிலும் முனைப்புடன் செயல்படும்போதுதானே! அப்படிப்பட்ட தலைசிறந்த மேலாளர்கள் எப்படியிருப்பார்கள், அவர்களின் பொறுப்புகளும் குணாதிசயங்களும் என்னென்ன என்பது குறித்து டொனால்டு என்.சல் (Donald N.Sull) எழுதியிருக்கும் ‘வொய் குட் கம்பெனீஸ் கோ பேட் அண்ட் ஹெள கிரேட் மேனேஜர்ஸ் ரீமேக் தெம்’ என்ற புத்தகம் விரிவாக அலசுகிறது.

மேலாளரின் பொறுப்பு

“இன்றைக்கு நிறுவனம் எடுக்கும் ஒரு முடிவோ, நடவடிக்கையோ எதிர்காலத்தில் அதன் செயல்பாட்டை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பதை மனதில்கொண்டு செயல்பட வேண்டியது மேலாளரின் பொறுப்பு. ஒரு மேலாளரின் பொறுப்பு என்பது முதலீட்டைத் திரட்டுவதில் ஆரம்பித்து தனிநபர் எடுக்கும் முடிவுகள், பொதுவெளியில் தகவல்களை வெளியிடுதல் எனப் பல்வேறு இடங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது. மேலாளர்களின் பொறுப்புணர்வுதான் நிறுவனத்தைக் கட்டமைத்து, அதன் பலம் மற்றும் பலகீனங்கள், வாய்ப்புகள் மற்றும் வரம்புகள் போன்றவற்றைத் தீர்மானித்து நிறுவனம் செல்லும் பாதையின் திசையை நிர்ணயிக்கிறது.

இன்றைக்கு நிகழ்காலச் சுழலின் அழுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் மேலாளர்கள் பெரும்பாலும் குறுகியகால அடிப்படையில் நன்மை பயக்கும் முடிவுகளைத்தான் எடுக்க முயல்கிறார்கள். குறுகியகாலத்தில் நன்மை தரும் முடிவுகள், நாளடைவில் நீண்டகால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்து விடுகின்றன. குறுகியகால நன்மை பயக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா... குறிப்பிட்ட நிறுவனம் செயல்படும் சந்தையின் சூழல் மாறும்போது, உடனடியாக அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள இயலாமல் நிறுவனம் தவிக்க ஆரம்பிக்கும்.

மேலாளர்களுக்கான சவால்!

பொறுப்புணர்வு அதிகமிருக்கும் நிர்வாகிகள் அவர்கள் எடுக்கும் முடிவுகளின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை முழுதும் உணர்ந்தவர்களாக இருப்பார்கள். மேலாளர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நிறுவனத்தின் ஆயுள்காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.

தொழில் முனைவோர் கள் தாங்கள் உருவாக்கும் புதிய தொழில் குறித்து எடுக்கும் முடிவுகள் அந்த நிறுவனத்தை அசைவின்மை என்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது கொஞ்சம் சுலபமான விஷயம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், ஆரம்பத்திலிருந்தே இதில் கவனமாக இருந்துவிடலாம்.

ஆனால், மேலாளர் களுக்கோ இந்தச் சூழல் சுலபமானதாக இருப்ப தில்லை. ஏனென்றால், அவர்கள் பொறுப் பெடுக்கும்போது ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள் எடுத்து செயல்படுத்திவரும் முடிவுகளும் பொறுப்புகளும் இவர்கள் பதவியேற்றவுடன் சட்டென இவர்கள் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும்.

பழைய மேலாளர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொறுப்புசார் விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு, அவற்றில் எவையெல்லாம் எந்த நேரத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் என்பதைக் கண்டறிந்து, அவ்வப்போது அவற்றை மாற்றியமைக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே இருப்பதை மாற்றிமையப்பதில் எக்கச்சக்க இடைஞ்சல்கள் இருக்கவே செய்யும். ஏனென்றால், புதிதாகக் கொண்டுவரும் மாற்றம் என்பது புத்துணர்ச்சி தருவதாக இருக்க வேண்டியது அவசியம். பழைய விஷயங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாக உருவெடுத்த பின்னர், கொண்டுவரும் புதிய விஷயங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நடைமுறைப்படுத்துவது கடினமான ஒன்று.

மேலாளர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நிறுவனத்தின் ஆயுள்காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்

அதற்காக முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவோ, தள்ளிப் போடவோ செய்யாதீர் கள். மாறாக, ஒவ்வொரு முறை ஒரு மேலாளராக நீங்கள் நிறுவனம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். செய்யப்படும் மாற்றங்கள் எதிர்காலத்தில் செழிப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட வழிவகுக்குமா என்பதுதான் அந்தக் கேள்வி” என்கிறார் ஆசிரியர்.

யார் சிறந்த மேலாளர்?

“ஒரு மேலாளரை சிறந்தவராக ஆக்கும் விஷயங்கள் என்னென்ன என்று கேட்டால், அதை யாரிடம் கேட்கிறோமோ அவரைப் பொறுத்த பதில்களே கிடைக்கும். ஒரு ஸ்ட்ராட்டஜியை எப்படி உருவாக்குகிறார், அதை எப்படி நடைமுறையில் செயல்படுத்துகிறார், தலைமைப் பண்பை அவற்றில் எப்படிக் காட்டுகிறார் என்பதைப் பற்றிய பதில் களாகவே இருக்கும். இவை யெல்லாம் ஒரு மேலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்கின்றனவே தவிர, அவர் எப்படி மேலாண்மை செய்வார் என்பது பற்றிச் சொல்வதாக இல்லை. நிஜத்தில் ஒரு வெற்றிகரமான மேலாளர் என்பவர் அவர் மேலாண்மை செய்யும் விதத்தினால்தான் உருவாகிறார்.

என்னுடைய ஆராய்ச்சியில் இந்த மேலாண்மை செய்யும் முறை என்பது முழுக்க முழுக்க அவர் எடுத்துக்கொள்ளும் பொறுப்புகளைச் சார்ந்ததாகவே இருக்கிறது. முதலீடுகளைச் செய்தல், பணிக்கான நபர்களைத் தேர்வு செய்தல், பொதுவெளியில் நிறுவனம் குறித்த அறிக்கைகளை வெளியிடுதல் போன்ற அனைத்துமே பொறுப்பு சார்ந்த விஷயங்களே. நாளடைவில் இந்தப் பொறுப்பு சார்ந்த விஷயங்களே நல்ல மேலாளர்களையும் சிறந்த நிறுவனங்களையும் உருவாக்குகின்றன. நினைவிருக்கட்டும், மேலாளர்கள் தங்கள் முன்னாலிருக்கும் வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற முடிவே நிறுவனத்துக்கு உதவியாக இருக்கப்போகிறதா அல்லது உபத்திரவமாக இருக்கப்போகிறதா என்பதை நிர்ணயிப்பதாக இருக்கிறது.

டி.என்.ஏ-வில் மாற்றம்!

மனிதர்களுக்கு டி.என்.ஏ இருப்பதைப்போல் நிறுவனங்களுக்கும் டி.என்.ஏ என்பது இருக்கிறது. இந்த டி.என்.ஏ-வில் மாற்றம் செய்வது என்பது எந்த அளவுக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த நிறுவனத்தால் மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. அதனாலேயே மாறுகிற சூழ்நிலையில் அவை அழிந்தும் போகின்றன. இந்த நிலையை மாற்றுவது அல்லது வராமல் பார்த்துக்கொள்வது என்பது ஒரு மேலாளரின் கடமை” என்று சொல்லும் ஆசிரியர், இதிலிருந்து நிறுவனத்தைக் காப்பாற்றத் தேவையான பொறுப்பு என்ன, நிறுவனம் ஏற்கெனவே பெற்ற வெற்றியால் தோன்றும் செயலற்றதன்மையை மாற்றுவது எப்படி, புதிய பாதைகளைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுப்பது எப்படி, மாற்றத்தைக் கொண்டுவரும் வேளையில் தோல்விக்கான வாய்ப்புகளைக் குறைத்துக்கொள்வது எப்படி... என்பதையெல்லாம் தனித்தனி அத்தியாயங்களில் பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறார்.

நிறுவனத்தின் பாதையை நிர்ணயிக்கும் மேலாளர்களுக்கான பல்வேறு அறிவுரைகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்து, பயன்பெறலாம்.

-நாணயம் விகடன் டீம்