Published:Updated:

நாணயம் லைப்ரரி : மனநிறைவைத் தரும் அலுவலக நட்பு உங்களிடம் இருக்கிறதா? - பணியிட நட்பின் மகத்துவம்!

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் லைப்ரரி

அலுவலக நட்பு, சாப்பாட்டில் உப்பு மாதிரி இருக்க வேண்டும். அதிகம் அல்லது குறைவாக இருந்தால், சாப்பாடு ருசிக்காது!

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ஷாஸ்தா நெல்சன் என்ற பெண்மணி எழுதிய ‘தி பிசினஸ் ஆஃப் ஃபிரன்ட்ஷிப்.’ பணியிட நட்பை நமக்குப் பக்கபலமாய் அமைத்துக் கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம் இது.

அலுவலகம் என்பது வேலைபார்க்க..!

‘‘நான் இந்த அலுவலகத்தில் நட்பு பாராட்ட வரவில்லை” என்ற வாக்கியத்தை உலக அளவில் பல அலுவலகங்களிலும் பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம். அலுவலகத்தில் நாம் காண்பிக்கும் போட்டி குணமும் நட்பும் எதிரும்புதிருமான விஷயங்களாக இருக்கின்றன. பணியிடத்தில் ஏற்படும் போட்டியில் அடுத்தவர்களை அடித்து துவம்சம் செய்யும்போது நாம் இங்கே நட்பெல்லாம் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் நாம், நம்முடைய புரொஃபஷனல் வாழ்க்கைக்கும் பர்சனல் வாழ்க்கைக்கும் இடையே கோடு ஒன்றைப் போட்டு, அந்தக் கோட்டை நாம் தாண்டக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இந்தப் பணியிட நட்பு பாராட்டுதலைப் பார்த்து நாம் பயப்படாமல் அதை எப்படி நாம் நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றிச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

நாணயம் லைப்ரரி : மனநிறைவைத் தரும் அலுவலக நட்பு உங்களிடம் இருக்கிறதா? - பணியிட நட்பின் மகத்துவம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாப்பாட்டில் உப்பு மாதிரி..!

அலுவலக நட்பு என்பது சாப்பாட்டில் உப்பு மாதிரி இருக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் சாப்பாடு ருசிக்காது. இந்த ஆசிரியரிடம் பார்மசிஸ்ட் ஒருவர் இப்படிச் சொன்னார். ‘‘அலுவலக நட்பு என்பது இடைஞ்சலானது. அலுவலக நட்பு வட்டத்தில் நான் மூழ்கிக் கிடப்பதால், வார இறுதி நாள்களைக்கூட என்னால் குடும்பத்தினருக்கு முழுமையாக ஒதுக்க முடியவில்லை. அதுவும் அன்றைய தினத்தில் அலுவலக நண்பர்களுடன் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டு உடலும் மனமும் கடுமையான அயர்ச்சியை அடைந்துவிடுகிறது.’’

இப்படியொரு நட்பு என்றால், ஹாவர்டு பிசினஸ் ரிவ்யூ நடத்திய ஒரு சர்வே இன்னொரு விஷயத்தைச் சொல்கிறது. யாரெல்லாம் அலுவலகத்தில் நன்கு ஆதரவளிக்கும் நண்பர்களைக் கொண்டு இருக்கவில்லையோ, அவர்களெல்லாம் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது என்ற எண்ணத்துடனேயே மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, பணியிடத்தில் பணிச் சுமையால் மன அழுத்தம் வராமலிருக்க ஆதரவான நட்பு தேவைப்படவே செய்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நட்பு பாராட்டுவதில் எப்படி?

பணியிடத்தில் நட்பு கூடாது என்ற கொள்கை கொண்டவர்களுமேகூட பின்வரும் கேள்விகளுக்குச் சொல்லும் பதிலை வைத்து, அவர் நட்பு பாராட்டக் கூடியவர்களா, இல்லையா என்பதைச் சொல்லி விடலாம். உங்களுடன் பணிபுரிபவர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாகப் பணிபுரிகிறீர்களா, நீங்கள் உங்களுடன் பணிபுரிப வர்கள் மீது முழுநம்பிக்கை வைத்திருக்கிறீர்களா, பணிரீதியான சிக்கல்கள் வரும்வேளையில் தோளோடு தோள் கொடுத்து நிற்பார்கள் என்று நம்புகிறீர்களா? இந்தக் கேள்விக்கெல்லாம் ‘ஆம்’ என்று ஒருவர் பதில் சொன்னால், அவர் பணியிடத்தில் நட்புடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். இதனால்தான் பணியிட நட்பு ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்து உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது என்கிறார் ஆசிரியை.

நாணயம் லைப்ரரி : மனநிறைவைத் தரும் அலுவலக நட்பு உங்களிடம் இருக்கிறதா? - பணியிட நட்பின் மகத்துவம்!

சில சிக்கல்களும் வரவே செய்கின்றன!

பணியிடத்தில் நட்புடன் நடந்துகொள்கிற போது சில சிக்கல்களும் வந்துசேரவே செய்கின்றன. உதாரணமாக, தப்பு நடக்கிறது என்று தெரிந்தும் நட்புக்காகத் தப்பைக் கண்டிக்க முடியாமலும், நடவடிக்கை எடுக்க முடியாமலும் போனால் என்ன ஆவது, வேலைக்கு ஆகாத ஆளை நட்புக்காக முக்கியமான பணியில் அமர்த்திவிட்டால் என்ன ஆவது, இரண்டு நெருங்கிய நண்பர்கள் ஒரே பதவி உயர்வுக்குப் போட்டிபோட்டு ஒருவர் ஜெயித்து மற்றவர் தோற்றுவிட்டால், நிறுவனத்தின் செயல்பாட்டில் எக்கச்சக்க குழப்பங்கள் வரவாய்ப்புள்ளதே, நட்பு பாராட்டி அதில் துரோகம் இழைக்கப்பட்டு அதன் பின்னாலும் இருவர் இணைந்து செயல்படும் சூழலில் என்ன மாதிரியான நெருடல்கள் இருக்கும் என்றெல்லாம் பட்டிய லிட்டால் அது நீண்டு கொண்டே போகத்தானே செய்யும் என்கிறார் ஆசிரியை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலையை முடித்தோமா, வீட்டுக்குக் கிளம்பினோமா?

இன்றைய இளைஞர்கள் பலரும் வேலையை முடித்தோமா, வீட்டுக்கு கிளம்பினோமா என்றே இருக்கிறார்கள். அலுவல கத்தில் உரையாடல்கள் குறைய ஆரம்பித்துவிட்டது. சாதிக்க வேண்டும் என்று நினைப்புடன் இருக்கிற பிசினஸ் மைண்ட் கொண்ட, தற்போதைய நிலையை எப்பாடு பட்டாவது உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று சபதம் எடுத்தது போல் செயல்படும் நபர்கள் மத்தியில் நட்பு நன்றாக வளருமா என்ன என்ற கேள்வியைக் கேட்கிறார் ஆசிரியை.

நாணயம் லைப்ரரி : மனநிறைவைத் தரும் அலுவலக நட்பு உங்களிடம் இருக்கிறதா? - பணியிட நட்பின் மகத்துவம்!

மனநிறைவைத் தரும் நட்பு..!

பணியிடத்தில் தனிமை என்பது இன்றைக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தப் பணியிடத் தனிமையை உணரும்போது நம்முடைய உற்பத்தித்திறன் நம்மை அறியாமலேயே குறைய ஆரம்பிக்கிறது. அது மனிதர்களின் உடல்நலத்தையும் பாதிக்கிறது. ஒரு பணியிடக் குழுவினரின் இடையே நண்பர்கள் யாருமே இல்லாதபட்சத்தில அந்தக் குழுவின் மனநிறைவு 65 சதவிகிதமாகவும், மூன்றுக்கும் மேற்பட்ட அந்தக் குழுவின் உறுப்பினர்கள் நண்பர்களாக இருக்கும்போது அந்தக் குழுவினரின் மனநிறைவு என்பது 78 சதவிகிதமாகவும் இருப்பதாக மற்றோர் ஆய்வு சொல்கிறது.

‘‘பணியாளர்கள் மட்டுமல்ல, நிறுவனமும் இதுபோன்ற நட்பு பாராட்டுதலால் நன்மை அடைகிறது. பொதுவாக, மனிதவள மேம்பாட்டுப் பிரிவு ஊழியர்கள் பணியாளர்கள் இடையே நிலவும் நட்பால் வரக்கூடிய பாதகங்களை எண்ணி அஞ்சுபவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலைமாறி பணியிட நட்பால் நிறுவனங்களுக்கு வரக்கூடிய அனுகூலங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் அதிகரிக்கும்போது மட்டுமே நிறுவனங்கள் இந்த அனுகூலத்தின் பலனை முழுமையாக அடைய முடியும்’’ என்கிறார் ஆசிரியை.

அலுவலக நட்பை வளர்க்கும் வழிகள்..!

நட்பின் முதல் வரையறையான பாசிட்டிவிட்டியை வளர்க்க ஒருவரை அனுசரித்து அரவணைத்தும் பாராட்டியும், அவருடைய பக்கத்திலிருந்து நியாயங்களைப் பார்த்துப் பேசியும் நாம் முயற்சி செய்ய வேண்டும். பழக்கத்தை நிலையானதாக மாற்ற தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம். அலுவலக டீ-டைம், வார இறுதியில் சந்தித்தல் (இன்றைய இணைய உலகில் ஆன்லைனில் குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்தல்) போன்றவற்றைச் செய்தும், வெறுமனே போனில் பேசாமல் நேரிலோ, வீடியோகாலிலோ பேசியும் நட்பை நிலை நிறுத்தலாம் என்று சொல்கிறார் ஆசிரியை.

நாணயம் லைப்ரரி : மனநிறைவைத் தரும் அலுவலக நட்பு உங்களிடம் இருக்கிறதா? - பணியிட நட்பின் மகத்துவம்!

நட்பு என்பது அலுவலக வளாகத்தைத் தாண்டிச் செல்லும்போதுதான் செழித்து வளர்கிறது. இந்த நட்புப்பயிரின் இடையே தோன்றும் களைகளை எப்படிக் களைவது (மோசமான குணம் கொண்ட பணியாளர்களை) என்பதைச் சொல்ல தனியாக ஓர் அத்தியாயத்தை ஒதுக்கியுள்ளார்.

இது தவிர, பணியிட நட்பு மற்றவர்கள் மனதில் தேவையற்ற காதல் தோற்றத்தைத் தந்துவிடாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தியுள்ள ஆசிரியை, பணியிட நட்பு என்பது நண்பர்கள் மத்தியில் நல்லதொரு செயல்பாட்டுப் பொறுப்புணர்வைக் கொண்டு வருவதாலேயே அது தீவிரமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று சொல்லி முடிக்கிறார்!

- நாணயம் விகடன் டீம்