Published:Updated:

நாணயம் லைப்ரரி : பேசி ஜெயிக்கும் கலையில் நீங்கள் எப்படி..? - வெற்றிக்கு உதவும் உரையாடல்!

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் லைப்ரரி

முன்பின் தெரியாத நபர்களுடன் எப்படிப் பேசிப் பழகுவது என்று யாரும் சொல்லித் தருவதேயில்லை. இதனால்தான் பல கஷ்டங்கள்!

ற்றவர்களுடன் பேசுவதற்கு மிகவும் தயக்கம் காட்டும் நபரா நீங்கள்? அப்படியானால், டெப்ரா ஃபைன் என்ற பெண்மணி எழுதிய ‘தி ஃபைன் ஆர்ட் ஆஃப் ஸ்மால் டால்க்’ எனும் புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தில் ஆரம்பத்திலேயே சில முக்கியமான கேள்விகளைக் கேட்கிறார்.

‘‘கடந்த வருடம் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு நெட்வொர்க் கிங்குக்கான மீட்டிங்குக்கு (கிளப் / குழு) சென்றீர்களா, அப்படிச் சென்ற இடத்தில் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை நோக்கிப் பேச்சைத் திருப்ப வேண்டும் என்பதில் கவனமாக இருக்கத் தெரிந்த நபரா நீங்கள்? கடந்த வருடத்தில் உங்களுடைய நட்பு வட்டத்தை உபயோகித்து குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்காவது ஏதாவது, காரியம் சாதித்துக் கொடுத்துள்ளீர்களா? உங்களிடம் யாராவது ‘என்ன புதுசா செய்தி இருக்கு’ என்று கேட்டால், ஒன்றுமில்லை என்பீர்களா அல்லது சமீபத்தில் நீங்கள் எதிர்கொண்ட சுவாரஸ்யமான விஷயம் எதைப் பற்றியாவது ஈடுபாட்டுடன் கூறுவீர்களா?’’ என்பன போன்ற கேள்விகளை நம்மிடம் கேட்கிறார் ஆசிரியை.

நாணயம் லைப்ரரி : பேசி ஜெயிக்கும் கலையில் நீங்கள் எப்படி..? - வெற்றிக்கு உதவும் உரையாடல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘இந்தப் புத்தகத்தைப் படித்த பின் நீங்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலைச் சொல்வீர்கள். அப்போது சிறு உரையாடல்கள் மூலம் தொழில்ரீதியான வளர்ச்சியைப் பெருக்கவும், நட்பு வட்டத்தை அதிகரித்துக் கொள்ளவும், நெட்வொர்க்கிங் திறனைப் பெருக்கிக்கொள்ளவும், வேலையைச் சுலபமாகத் தேடிக்கொள்ளவும் உங்களால் முடியும்’’ என்கிறார் ஆசிரியை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சின்னதாகத் தொடங்கி..!

பெரிய உரையாடல்களின் ஆரம்பப்புள்ளியே இந்த சிறு உரையாடல்கள்தாம். அலுவலகம் செல்லும் வழியில், பள்ளியில் குழந்தையை விடும்போது அல்லது அழைக்கச் செல்லும் போது, அலுவலகத்தில் லிஃப்டில் செல்லும் போது, அலுவலக உணவு இடைவேளையின் போது, வேலைக்கான நேர்காணலுக்குச் செல்லும்போது எனப் பல சூழ்நிலைகளிலும் இந்தவித சிறு உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. சிறு உரையாடல்கள் இல்லாமல் பெரிய உரையாடல்களும் உறவுகளும் உருவாக வாய்ப்பே இல்லை. முன்பின் தெரியாதவர்களிடம் எப்படிப் பேசிப் பழகுவது என்று யாரும் சொல்லித் தருவதேயில்லை. இதனாலேயே நாம் இந்த விஷயத்தில் அதிகம் தடுமாறுகிறோம்’’ என்கிறார் ஆசிரியை.

நாணயம் லைப்ரரி : பேசி ஜெயிக்கும் கலையில் நீங்கள் எப்படி..? - வெற்றிக்கு உதவும் உரையாடல்!

சிறுவயது ஆலோசனைகள்..!

“என்னதான் நாம் வளர்ந்து பெரிய மனிதராக ஆகிவிட்டாலுமே சிறு பிராயத்தில் நமக்கு சொல்லித் தந்த விஷயங்கள் பலவற்றையும் நாம் மறப்பதேயில்லை. ‘பொறுமையாக இருப்பவர்களுக்கே நல்ல விஷயங்கள் கைகூடிவரும்’, ‘முன்பின் தெரியாத நபருடன் பேசாதே’ என்று பல அறிவுரைகளை நம்முடைய பெற்றோர்கள் சிறுபிராயத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி நம் மனதில் உருவேற்றி வைத்திருக்கிறார்கள். ‘‘ஒரு குழந்தையாக நம் பாதுகாப்புக்காகச் சொல்லப்பட்ட அறிவுரைகள் அவை. இப்போது ஒரு முழு மனிதனாக உருவெடுத்த பின்னால், அந்நியர்களிடமிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, சிறு குழந்தையில் சொல்லப்பட்ட அறிவுரைகளையே இப்போதும் கடைப்பிடிப்பது சிறுபிள்ளைத் தனம்’’ என்கிறார் ஆசிரியை.

ஐஸ்பிரேக்கிங்குக்கு 70 டிப்ஸ்!

‘‘பாதுகாப்பான இந்தத் தருணத்தில் முன்பின் தெரியாதவருடன் பேசுங்கள். உங்களைத் தயக்கம் ஏதும் இல்லாமல் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய உலகம் எல்லோரும் எல்லோருடனும் நன்கு பழக வேண்டும் என்று எதிர்பார்க்கிற உலகமாக இருக்கிறது. அமைதியாக இருப்பது பண்பல்ல என்பதுதான் இன்றைய உலகத்தின் எழுதப்படாத விதி’’ என்று சொல்லும் ஆசிரியை, என்னென்ன விஷயங்களை இந்த சிறு உரையாடல்களின் போது உரையாடலை நீட்டிக்கப் (ஐஸ்பிரேக்கிங்) பயன்படுத்தலாம் என்பதையும் பட்டியலிட்டு உள்ளார் (பிசினஸ் குறித்த சந்திப்புகளுக்கு 20 டிப்ஸ், தனிப்பட்ட நட்புவட்ட சந்திப்புகளுக்கு 50 டிப்ஸ்).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘சிறு உரையாடல்களை நிகழ்த்த 70 டிப்ஸ்களை உங்களுக்குத் தந்தாகிவிட்டது. எனவே, அடுத்தமுறை தெரியாத நபர்கள் இடையே இருக்கும் சூழல் உருவாகும் போது நீங்களே முதலில் பேச்சை ஆரம்பியுங்கள்’’ என்று உற்சாகப்படுத்தும் ஆசிரியை, புதிய நபர்களின் பெயரை ஞாபகம் வைத்துக் கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தியும் அதனால் உருவாகும் நன்மைகளையும் பட்டியலிட்டு விளக்குகிறார்.

நாணயம் லைப்ரரி : பேசி ஜெயிக்கும் கலையில் நீங்கள் எப்படி..? - வெற்றிக்கு உதவும் உரையாடல்!

தொடர்ந்து பேசுவதற் கான பல விஷயங்களையும் அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பட்டியலிட்டுள்ள ஆசிரியை, எப்படிப் புதியதாக நாம் பார்க்கும்/கையாளும் விஷயங்கள் நமக்குக் கொஞ்ச காலத்துக்குப் பெரிய அளவுக்குப் புரியாத புதிர்போல் பயமாக இருக்குமோ, அதேபோல்தான் உரையாடலை ஆரம்பிக்கிற கலையாகிய இந்த விஷயமும் என்கிறார்.

‘‘நேருக்கு நேராகப் பார்த்து, சிரித்து, தோதான நபரைக் கண்டுபிடித்துப் பேச்சு கொடுப்பதே வெற்றிகரமான சிறு உரையாடல்களைச் செய்வதற்கான படிநிலைகள். இந்தப் படிநிலைகளை வரிசைக்கிரமமாகக் கடைப்பிடித்தால் நீங்கள் சுலபத்தில் வெற்றி காண்பீர்கள்.

நாணயம் லைப்ரரி : பேசி ஜெயிக்கும் கலையில் நீங்கள் எப்படி..? - வெற்றிக்கு உதவும் உரையாடல்!

கேள்விகளை எப்படி வாக்கியமாக அமைத்துக்கொள்வது (கல்யாணம் ஆகிவிட்டதா என்பதற்குப் பதிலாகக் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள், சம்பாதிப்பதற்கு என்ன தொழிலில் இருக்கிறீர்கள் என்பதற்குப் பதிலாக உங்கள் பிசினஸ் நன்றாக இருக்கிறதா என்பது போன்ற) என்பதையும் இந்தப் புத்தகம் தெளிவுபடுத்துகிறது. ஆர்வமாகக் கேட்பதற்கு உண்டான வழிவகையில் ஆரம்பித்து வாதம் செய்வது வரையிலுமான பல்வேறு விஷயங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியை.

கேள்விகளை எப்படி எதிர்கொள்வது..?

மனிதர்கள் பலவகை. மொத்த ஷோவையும் (மீட்டிங்) திருடிக்கொள்ளும் திறன் கொண்ட மோனோபோலைசர் (ஏகாதிபத்தியவாதி), அவ்வப்போது குறுக்கே வந்துபோகும் இடைச்செருகல் பேர்வழி, சொன்னதைக் கேட்டுக்கொள்ளும் அமைதிப்பூங்கா, அட்வைஸ் தர உடனடியாகத் தயாராகும் அட்வைசர்கள் போன்ற பலரும் அடங்கியதுதான் இந்த உலகம். இப்படிப்பட்ட இடத்தில் புகுந்து புறப்பட்டு வெற்றி பெற நல்லதொரு திறன் வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் ஆசிரியை, சரி பேச்சை ஆரம்பித்தாயிற்று, அதிலிருந்து வெளியே வருவதும் முக்கியமல்லவா என்று சொல்லி அதற்கான டிப்ஸ்களையும் தர ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியுள்ளார்.

இறுதியாக, பாசிட்டிவ்வான விஷயங் களையே முதலில் பேசத் தொடங்குவது, உற்சாகமான தோற்றம் மற்றும் தோரணையுடன் இருப்பது, நீங்கள் யார் என்பதை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது, முடிந்தவரை அடுத்தவருக்கு உதவுவது, பிறருக்குப் பிடித்த விஷயத்தில் ஈடுபாடு காட்டுவது, மற்றவர்களின் கருத்தையும் கேட்பது, உங்களை மகிழ்விக்கக்கூடிய அளவிலான நபர்களிடம் பேசுவது, எதிராளிக்கு எப்போது போரடிக்க ஆரம்பிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது உள்ளிட்ட 50 வழிமுறைகளையும் இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார் ஆசிரியை.

புதிய நபர்களை நண்பர்களாக்கி, அவர்களுக்கு உதவி, அவர்களிடமிருந்து உதவி பெற்று வாழ்க்கையில் முன்னுக்கு வரநினைக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்!

- நாணயம் டீம்