Published:Updated:

நாணயம் லைப்ரரி : வெற்றி பெற வாங்க பழகலாம்..! - இணக்கத்தின் சூட்சுமம்!

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் லைப்ரரி

ஒருவரை நாம் சந்திக்கும்போது நம் பேச்சில் இருக்கும் தெளிவுதான் அவருடைய மனதில் நம்மை நிலைபெறச் செய்யும்!

நாணயம் லைப்ரரி : வெற்றி பெற வாங்க பழகலாம்..! - இணக்கத்தின் சூட்சுமம்!

ஒருவரை நாம் சந்திக்கும்போது நம் பேச்சில் இருக்கும் தெளிவுதான் அவருடைய மனதில் நம்மை நிலைபெறச் செய்யும்!

Published:Updated:
நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் லைப்ரரி
``என் பெயர் வனேசா. நான் மற்றவர்களுக்கு விகாரமாகத் தெரிகிறேன் என்ற எண்ணம் கொண்ட நிலையிலிருந்து மீண்டுவந்த ஆள். சிறுபிராயத்திலிருந்தே எதற்கும் முன்னணியில் நிற்கமாட்டேன்.

சகமனிதர்களுடன் பழகுவது என்பது எனக்கு எட்டிக்காய் போன்ற விஷயம். என் வீட்டில் இன்டர்நெட் இணைப்பு வாங்கியவுடன் நான் என்னுடைய நட்பு என்ற அளவில் பிரென்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தது என்னுடைய பள்ளியில் வேலை பார்க்கும் நர்ஸ் பெண்மணிக்கு. இப்போது புரிந்துவிட்டதா என்ன மாதிரியான பர்சனாலிட்டி என்று?’’ - என நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் புத்தகத்தின் ஆசிரியர் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பிக்கிறார். ‘தி சயின்ஸ் ஆஃப் சக்ஸீடிங் வித் பீப்பிள்’ என்ற புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கிறோம்.

நாணயம் லைப்ரரி : வெற்றி பெற வாங்க பழகலாம்..! - இணக்கத்தின் சூட்சுமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்களின் செயல்பாடுகள் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். “மனிதர்களுக்கு எவையெல்லாம் பிடிக்கின்றன என்பதை அறிந்துகொண்டால் நீங்கள் மனிதர்களுடன் இணைந்து செயல்படுவது, தொடர்பில் இருப்பது போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட முடியும். மனிதர்களின் நடத்தை என்பது எப்படிக் கட்டமைக்கப்படுகிறது என்பதில் சில அடிப்படை விஷயங்கள் இருக்கின்றன. அதைப் புரிந்துகொண்டால் மட்டுமே எதை நாம் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பது நமக்கு தெளிவாகப் புலப்பட்டுவிடும். இதற்கு பீப்பிள் ஸ்கில்லை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்கிறார் ஆசிரியை. அதென்ன பீப்பிள் ஸ்கில்?

பீப்பிள் ஸ்கில் என்பது மசகு எண்ணெயைப் (lubricant) போன்றது. இதைப் புரிந்துகொண்டால் உங்கள் செயல்பாடுகள் வெகு இலகுவாகும். ஒரு புரொபஷனலாக உங்களுக்குத் தேவையான விஷயங்களைப் பேசித் தீர்த்துப் பெற்றுக் கொள்வது, நெட்வொர்க்கிங்குக்கான நிகழ்வு களில் உங்களைச் சிறப்பாக நிலைநிறுத்திக் கொள்வது போன்றவற்றுக்கு உதவியாக இருக்கும். சமூகத்தின் ஓர் அங்கத்தினராக நீங்கள் மற்றவர்கள் மத்தியில் ஒரு நீங்காத அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும், நல்ல நண்பர்களைப் பெறவும், சமூக உறவுகள் (நட்பு வட்டம், அக்கம்பக்கம் இருக்கின்றவர்கள் போன்ற நபர்கள்) என்ற போர்வையில் தரப்படும் காரியங்கள் ரீதியான அழுத்தங்களைப் புரிந்துகொண்டு அதிலிருந்து கழுவும் மீனில் நழுவும் மீனாகத் தப்பித்துக்கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். காதலராக மற்றும் கணவராக உறவுகளை நன்கு பலப்படுத்திக்கொள்ளவும், உங்கள் மனைவி அல்லது காதலியிடத்தில் நீங்கள் சொல்லும் விஷயங்களை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளும்படியாகச் (miscommunication தவிர்ப்பது) சொல்வது எப்படி என்பதை உணர்ந்துகொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்று பகுதிகள்

மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி ஒருவரை நாம் புதிதாகச் சந்திக்கும் வேளையில் இருக்கும் முதல் 5 நிமிடத்தின் முக்கியத் துவத்தையும் அதற்குண்டான நடைமுறை களையும் தெளிவாக விளக்குகிறது. அடுத்த பகுதி முதல் 5 மணி நேரத்தின் முக்கியத்துவம் மற்றும் அப்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது. மூன்றாவது பகுதி முதல் ஐந்து நாள்களில் எவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.

நாணயம் லைப்ரரி : வெற்றி பெற வாங்க பழகலாம்..! - இணக்கத்தின் சூட்சுமம்!

முதல் 5 நிமிடங்கள்

முதல் 5 நிமிடங்கள் என்ற பிரிவில் ஆசிரியை சொல்லும் சவால்கள் பின்வருவனவாகும். “ஒரு புதிய இடத்துக்கு நான் செல்கிறேன். எப்படி முதலில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்வது, யாரிடம் நான் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பவையே அந்தச் சவால்கள். சமூக விளையாட்டில் வெற்றிபெற நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது உங்கள் இயல்புக்குச் சற்றும் ஒத்துவராத ஓர் இடத்துக்குச் சென்று நீங்கள் என்னதான் நடித்தாலும் (பொய்யான ஈடுபாட்டைக் காட்டினாலும்) அதில் வெற்றி பெறவே முடியாது என்பதைத்தான். நீங்கள் பெரிய நடிகனாக இருக்கலாம். உள்ளத்தில் உள்ளதை எள்ளளவும் வெளிக்காட்டிக் கொள்ளவே செய்யாத மனிதராகக்கூட இருக்கலாம்.

ஆனால், என்னதான் நீங்கள் படித்த வித்தை பதினாறையும் முழுமையாக இறக்கினாலும் உங்களுக்கு உண்மையாகவே சந்தோஷம் தராத இடத்துக்கு நீங்கள் சென்றால் அந்த இடத்தில் உங்களால் நீங்காத அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியவே முடியாது. ஏனென்றால், உங்களால் அங்கே வெற்றிகரமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுடைய அடிமனதில் இருக்கவே இருக்காது. நம்பிக்கை என்பது ஒரு தொற்றுவியாதி உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களிடம் உள்ள அவநம்பிக்கையை சுலபத்தில் புரிந்துகொண்டு விடுவார்கள்” என்கிறார் ஆசிரியை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்...

“பொதுவாக, பீப்பிள் ஸ்கில் பற்றி கற்றுக்கொடுக்கும் புத்தகங்கள் மற்றும் பயிற்சிகள் ‘மாறுங்கள் மாறுங்கள், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு தகுந்தாற் போல் மாறிக்கொள்ளுங்கள்’ என்றே சொல்லும். மாறுதல் என்பது முடியவே முடியாது என்பதுதான் என்னுடைய வாதம். ஏனென்றால், ஒரு விஷயத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால், உங்களுள்ளே இயல்பாக இருக்கும் திறமையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, இல்லாத திறமையைக் கொண்டுவர முயல்வதன் மூலமோ, அந்தத் திறமை இருப்பதைப்போல் நடிப்பதன் மூலமோ நம்மால் ஜெயிக்கவே முடியாது. அடுத்தவர்களின் சட்ட திட்டங்களுக்கு நாம் மாறிக் கொள்வதைவிட நம்முடைய சட்ட திட்டங்களைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் வகுத்துக்கொண்டு செயல் பட்டு வெற்றிபெறுவதே எளிதானது” என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆசிரியை.

நாணயம் லைப்ரரி : வெற்றி பெற வாங்க பழகலாம்..! - இணக்கத்தின் சூட்சுமம்!

பதில் சொல்வதில் கவனம்

“போரடிக்கிற மனிதர்கள் நம்மைச் சூழ்ந்திருந்த தருணங்களை நாம் நினைவில் கொண்டிருப்பதேயில்லை. ஒருவரை நாம் சந்திக்கும்போது நாம் பேசும் பேச்சில் இருக்கும் தெளிவும் காரண காரியங்களுமே நம்மை அவருடைய மனதில் நிலையாக இருக்கச் செய்யும் என்பதை நாம் ஒருபோது மறந்துவிடக் கூடாது.

பேசுவது என்கிறீர்களே. கேட்பது மிகமுக்கியம் இல்லையா என்பீர்கள். அடுத்தவர் பேசுவதைக் காது கொடுத்து கேட்பது முக்கியமான விஷயம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால், அவர்கள் பேசுவதைக் கேட்டபின்னர் நாம் எந்த மாதிரியான பதில் பேச்சு பேசுகிறோம் என்பது மிகமிக முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் நாம் பேசும் பேச்சு மிக முக்கியம் என்கிறேன்” என்று சொல்கிறார் ஆசிரியை.

நாணயம் லைப்ரரி : வெற்றி பெற வாங்க பழகலாம்..! - இணக்கத்தின் சூட்சுமம்!

முகபாவத்தைப் புரிந்துகொள்ளுதலின் அவசியம், உங்களுடைய பர்சனாலிட்டியும் உங்களின் எதிரே இருப்பவரின் பர்ச னாலிட்டியும் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதைக் கணித்துச் செயல்படுவதில் இருக்கும் லாபம், பாராட்டுதல் எனும் கலையைக் கற்றுக்கொள்வதன் மூலம் நாம் அடையக்கூடிய அனுகூலங்கள், அனுபவத்தை, நிகழ்வுகளை ஒரு கதையைப் போல் சொல்லத் தெரிந்துகொள்வதின் மூலம் கிடைக்கும் லாபம், சமூகத்தைக் கண்டு அனைவருக்குமே கொஞ்சமாவது பயம் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவது போன்ற பல விஷயங்கள் குறித்தும் இந்தப் புத்தகம் மிகவும் விரிவாகப் பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறது.

“எதிர்கொள்ளும் மனிதர்களை வெறுமனே ஈர்க்க முயல்வதற்குப் பதிலாக நம்மீது உண்மையான ஈடுபாட்டைக் காட்டும்படியான சூழ்நிலையை உருவாக்குவதே மிகமிக உன்னதமான விஷயம்” என்று சொல்லும் ஆசிரியை, “நாம் எந்த அளவுக்கு மற்றவர்களை விரும்புகிறோமோ அந்த அளவுக்கே மற்றவர்கள் நம்மை விரும்புவார்கள்” என்று சொல்லி புத்தகத்தை நிறைவு செய்கிறார்.

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism