என் வங்கிக் கணக்கை ஆன்லைன் பேங்கிங் மூலமாகப் பயன்படுத்துகிறேன். மாதத்தில் சிலமுறை ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்துகிறேன். `ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது காசோலை மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்தால்தான் வங்கிக் கணக்கு உயிர்ப்புடனிருக்கும்’ என்றும், `இல்லையெனில் அது செயலற்ற கணக்காக (Dormant Account) ஆகிவிடும்’ என்று நண்பர் கூறினார். இது உண்மையா?

ஆர்.ஸ்ரீகாந்தன், சென்னை

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி

“உங்கள் நண்பர் சொல்வது தவறு. நீங்கள் ஆன்லைன் மூலமாகப் பரிவர்த்தனை செய்தாலும் அது பரிவர்த்தனைக் கணக்கில்தான் வரும். வங்கி மூலமாகத்தான் நேரடியாகப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை. அடுத்ததாக, இரண்டு ஆண்டுகளாக ஒரு வங்கிக் கணக்கில் எந்தவிதமான பணப் பரிமாற்றமும் இல்லாமல், அதிலுள்ள டெபாசிட்டுக்கு வட்டி மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால், அது ‘செயலற்ற கணக்கு’ என்று கருதப்படும். அதன் பிறகு, அந்த வங்கிக் கணக்கின் மூலம் ஏ.டி.எம் பயன்பாடு போன்றவற்றைச் செய்ய முடியாது. அப்படி செயலற்றக் கணக்காக மாறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவருக்கு அது குறித்தத் தகவல் அனுப்பப்படும். பத்து ஆண்டுகளுக்கு அந்த வங்கிக் கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதிலுள்ள தொகை அரசுக் கணக்குக்குச் சென்றுவிடும்.”

மொத்தம் ஆறு வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டவிருக்கிறேன். அதற்கான கார் பார்க்கிங் ஏரியாவைத் தரைத்தளத்திலேயே வைக்கலாமா அல்லது அண்டர்கிரவுண்டில் அமைப்பது நல்லதா?

தனசேகர், முகநூல் வழியாக...

ஆர்.குமார், நிர்வாக இயக்குநர், நவீன்ஸ் ஹவுஸிங்

“தரைத்தளத்தில் அமைப்பதுதான் சரியானதாக இருக்கும். கார்கள் நிறுத்துவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் மட்டுமே அண்டர் கிரவுண்டைப் பயன்படுத்தலாம். தரைத்தளமென்றால், கார்கலை உள்ளே கொண்டுவருவதும் வெளியே எடுப்பதும் எளிது. கார் பார்க்கிங்குக்கான செலவு குறைவு. அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிங்கைக் கட்டுவதற்கான செலவு அதிகம். அதனுள் கார்கள் வந்து செல்வதற்கான வழி அமைக்கவே குறிப்பிட்ட அளவு இடம் தேவைப்படும். எனவே, பார்க்கிங் இடம் குறைவாகவே கிடைக்கும். பெருமழை, வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதியும் செய்யப்பட வேண்டும். அதற்கான பராமரிப்புச் செலவும் தரைத்தள பார்க்கிங்கைவிட அதிகம்.”

ஏற்கெனவே 50% வருமான இழப்பாக உள்ள நிலையில் அரபிந்தோ பார்மா பங்குகளை விற்றுவிட்டு வெளியேறலாமா?

டேனி, முகநூல் வழியாக...

எம்எஸ்ஓ.அண்ணாமலை, பங்குச் சந்தை ஆலோசகர்

“இன்னும் மூன்று முதல் ஆறுமாத காலத்துக்குப் பொறுத்திருக்கவும். அப்போது உங்களுடைய வருமான இழப்பு குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது.”

குறுகியகாலத்தில் மிதமான வருமானம் ஈட்ட எந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது சிறந்தது?

சங்கர் கணேஷ், முகநூல் வழியாக...

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“எரிசக்தித் துறை, தனியார் வங்கிகள் மற்றும் சேவைத்துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். பொருளாதார மந்தநிலை காரணமாக அதிக ஏற்ற இறக்கத்துடனுள்ள இன்றைய பங்குச் சந்தை நிலவரத்தில், இந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள்தான் ஓரளவு சீராகவும், குறைந்த ஏற்ற இறக்கத்துடனும் செயல்படுகின்றன.”

நானும் (வயது 28) என் மனைவியும் (27) ஐ.டி துறையில் பணிபுரிகிறோம். நீண்டகால அடிப்படையில் பங்குச் சந்தையில் முதன்முதலாக முதலீடு செய்ய நினைத்து, ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) தலா ரூ.1,00,000 முதலீடு செய்ய முயன்றோம். அலாட்மென்ட் கிடைக்கவில்லை. எனவே, அந்தத் தொகையை இனி வரவிருக்கும் ஐ.பி.ஓ-க்களில் முதலீடு செய்யலாமா அல்லது அதிக வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா? மேலும், இந்த வருட வரிச் சேமிப்புக்கு தலா ரூ.1,00,000 பெறத்தக்க திட்டங்களைப் பரிந்துரை செய்யவும்.

தமிழரசன், சென்னை

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“ஐ.ஆர்.சி.டி.சி அலாட்மென்ட் கிடைக்கவில்லை என வருந்த வேண்டாம். பங்குச் சந்தையில் முதன்முறையாக நீண்டகால முதலீடு செய்ய முடிவெடுத்திருப்பதால், நீங்கள் ஐ.பி.ஓ-க்களைவிட பங்குச் சந்தை நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் உங்களுடைய நிதி இலக்கை அடைய முடியும். ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.1 லட்சம், மிரே அஸெட் மிட்கேப் ஃபண்டில் ரூ.1 லட்சம் என முதலீடு செய்யவும். வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின்படி, வரிச் சேமிப்புக்கான முதலீட்டுக்கு இந்த நிதியாண்டில் இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.4,000 மற்றும் கனரா ராபிகோ டாக்ஸ் சேவர் ஃபண்டில் ரூ.4,500 என மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையிலும் இதே ஃபண்டுகளில் ரூ.30,000 மற்றும் ரூ.25,000 ரூபாயை மொத்தத் தொகையாகவும் முதலீடு செய்யலாம்.”

நான் 2008-ம் ஆண்டில் 55 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கினேன். அதைத் தற்போது ரூ.1.20 கோடிக்கு விற்பனை செய்தேன். இதற்கு எவ்வளவு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்? அந்தத் தொகையை கேப்பிட்டல் கெயின் அக்கவுன்ட்ஸ் ஸ்கீமில் (CGAS) டெபாசிட் செய்ய விரும்பினால், முழுத் தொகையையும் டெபாசிட் செய்ய வேண்டுமா அல்லது இண்டெக்ஸேஷன் போக மிச்சத் தொகையை மட்டும் டெபாசிட் செய்ய வேண்டுமா?

ராஜகோபால், கோயமுத்தூர்

டாக்டர் ஏ.கோபால்கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

“வீடு விற்றதன் மூலம் கிடைத்த தொகைக்கு மூலதன ஆதாய வரியாக 20% விதிக்கப்படும். இண்டெக்ஸேஷன் செய்த பிறகு கிடைக்கும் தொகையை சி.ஜி.ஏ.எஸ் -ல் டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள் வருமான வரி கட்டுவதைத் தவிர்க்கலாம். இப்படி அதிகபட்சம் மூன்றாண்டு காலத்துக்கு நீண்டகால மூலதன ஆதாயத்தை வைத்திருக்கலாம். இந்த டெபாசிட் மூலமான வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. இந்தத் தொகையைக்கொண்டு சொந்த வீடு வாங்குவதாக இருந்தால் இரண்டு ஆண்டுகளும், வீடு கட்டுவதாக இருந்தால் மூன்று ஆண்டுகளும் அவகாசம் தரப்படும். அதற்குள் வீடு வாங்கினால் அல்லது கட்டினால் வருமான வரி கட்ட வேண்டியிருக்காது.”

முதலீட்டுக்காலம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், மாதம் ரூ.15,000, அதிகபட்ச ரிஸ்க் எடுக்க முடியும். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து, 12% ஆண்டு வருமானம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பரிந்துரைக்கவும்.

செல்வராஜ் மாரியப்பன், முகநூல் வழியாக...

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

“பத்து ஆண்டுகளுக்கு நீண்டகால முதலீடு செய்வதால், 15,000 ரூபாயை தலா ரூ.3,000 என ஐந்து வகை ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம். உங்களுக்கான ஃபண்டுகள்... ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்ட், சுந்தரம் லார்ஜ் அண்டு மிட்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் ஆகியவை.’’

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com