Published:Updated:

தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் எவ்வளவு கிடைக்கும்?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

கேள்வி - பதில்

தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் எவ்வளவு கிடைக்கும்?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

தொழிலை விரிவாக்கம் செய்ய ரூ.10 லட்சம் முதலீடு தேவைப்படுகிறது. `வங்கியில் முத்ரா லோன் வாங்க வேண்டுமென்றால் முதலில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே தருவார்கள்; அதை முறையாகத் திரும்பச் செலுத்துவதைப் பொறுத்தே ரூ.10 லட்சம் கடனாகப் பெற முடியும்’ என்றும் என் நண்பர் கூறுகிறார். அது உண்மையா?

லோகேஷ், முகநூல் வழியாக...

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி

“அது உண்மையல்ல. உங்கள் தொழில், வரவு செலவுக் கணக்கீடு, திட்ட வரையறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நல்ல முறையில் இருந்தால், முதன்முறையே ரூ.10 லட்சம் வரை முத்ரா வங்கிக் கடன் பெற வாய்ப்பிருக்கிறது.”

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், டாக்டர் 
ஏ.கோபால்கிருஷ்ண ராஜு
ஜி.டி.கோபாலகிருஷ்ணன், டாக்டர் ஏ.கோபால்கிருஷ்ண ராஜு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூத்தக் குடிமகனான எனக்கு ஆண்டுக்கு பென்ஷன் மூலமாகவும், வீட்டு வாடகை மூலமாகவும் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் வருகிறது. என் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் வைப்புநிதியாக இருக்கிறது. இதற்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. டி.டி.எஸ் பிடித்தத்தைத் தாண்டி வரி செலுத்த வேண்டியிருக்குமா?

தாமஸ், முகநூல் வழியாக...

டாக்டர் ஏ.கோபால்கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

“உங்களுக்குக் கிடைக்கும் பென்ஷன் வருமானம், வீட்டு வாடகை மற்றும் வைப்புநிதிக்கான வட்டி ஆகிய மூன்றையும் சேர்த்து நிதி ஆண்டில் மொத்தம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் வரும்பட்சத்தில் நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்காது. உங்களிடம் டி.டி.எஸ்ஸாகப் பிடித்தத் தொகை ரீஃபண்டாகத் திரும்பக் கிடைக்கும். ஒருவேளை பென்ஷன் + வாடகை + வைப்புநிதி வட்டி மூன்றும் சேர்ந்து, ரூ.5 லட்ச ரூபாயைவிட அதிகமாக இருந்தால், ரூ.5 லட்சத்தைவிட அதிகமாக உள்ள தொகைக்கு 20% வரி செலுத்த வேண்டியிருக்கும். டி.டி.எஸ் பிடித்தமாக 10% மட்டுமே பிடித்தம் செய்யப்படுமென்பதால், கூடுதல் தொகையை வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.”

கமாடிட்டி டிரேடிங்கில் வழிகாட்டியாக உதவும் செல்போன் செயலிகள் சிலவற்றைக் கூறுங்கள்...

சாரல் சுரேஷ்குமார், முகநூல் வழியாக...

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“பொதுவாக கமாடிட்டி டிரேடிங்கை ‘மைண்ட்செட் கேம்’ என்று அழைப்போம். டிரேடிங்கில் ஈடுபடுவதற்கு முதலில் உங்களை மனரீதியாக தயார்ப்படுத்திக்கொண்டு, அடுத்து ரிஸ்க்கைக் கையாளுவதற்கான திட்டத்தையும் வகுத்துக்கொண்டு வியாபாரம் செய்ய வேண்டும். எந்தச் செயலியையும் வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவற்றைத் தகவல் கொடுக்கும் தளமாகவும், வரைபடத்தைக் கொடுக்கும் கருவியாகவும் பார்க்க வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில், `கமாடிட்டி சார்ட்’, `மார்க்கெட் பல்ஸ்’ (Market Pulse) போன்றவை இலவசமாகக் கிடைக்கின்றன.”

பி.கமலேசன், த.முத்துகிருஷ்ணன்
பி.கமலேசன், த.முத்துகிருஷ்ணன்

நான் ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனத்தில், எனக்கு ஓராண்டுச் சம்பளத்தை முன்கூட்டியே பணிநீக்க இழப்பீடாகத் தந்தார்கள். இரண்டுமாத காலத்தில் அடுத்த பணியில் சேர்ந்துவிட்டேன். தற்போது இங்கும் மாதச் சம்பளம் வருகிறது. நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கலின்போது முன்கூட்டியே தரப்பட்ட ஓராண்டுகாலச் சம்பளத்தை இரண்டு நிதியாண்டுக்கும் பிரித்துக் காட்ட முடியுமா?

ரிஷி, முகநூல் வழியாக...

பி.கமலேசன், ஆடிட்டர்

“உங்களுக்கு முன்கூட்டியே தரப்பட்ட ஓராண்டுச் சம்பளம் முழுவதுமே நடப்பு நிதியாண்டுக் கணக்கில்தான் வரும். இந்த நிதியாண்டில் முந்தைய நிறுவனத்தில் பெற்ற மாதச் சம்பளம், பணிநீக்க இழப்பீட்டு வருவாய் மற்றும் நடப்பு நிறுவனத்தில் இந்த நிதியாண்டில் பெறும் மாதச் சம்பளம் ஆகிய மூன்றுமே உங்களுடைய இந்த நிதியாண்டுச் சம்பளக்கணக்கில்தான் வரும். இவற்றுக்கான வரிக்கழிவுக்கு, வழக்கமான சம்பளக் கணக்கு வரிக்கழிவு முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கேள்வி பதில்
கேள்வி பதில்

என்னிடமுள்ள ரூ.3 லட்சத்தில் 75% தொகையை டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டில் இரண்டாகப் பிரித்து மொத்தமாகவும், மீதமுள்ள 25% தொகையை அவசரத் தேவைக்காகவும் முதலீடு செய்ய வேண்டும். கூடுதலாக, 6,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்ய ஆலோசனை கூறவும்.

ராஜேஷ்கண்ணன், முகநூல் வழியாக...

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

“3 லட்ச ரூபாயில் 25 சதவிகிதமான 75,000 ரூபாயை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து எமர்ஜென்சி தேவைக்காகப் பயன்படுத்தவும். மீதமுள்ள 2,25,000 ரூபாயை டி.எஸ்.பி ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் இரண்டாகப் பிரித்து மொத்த முதலீடு செய்யவும். இதே இரண்டு ஃபண்டுகளில் தலா ரூ.3,000 வீதம் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யவும்.”

என் தந்தை விவசாயி. மூத்த குடிமகன். நான் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். நாங்கள் இருவரும் ஜாயின்ட் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், அதற்கு யார் வருமான வரி செலுத்த வேண்டும்?

ஆர்.சிவகுமார், இ-மெயில் வழியாக...

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘நீங்கள் இருவரும் இணைந்து எந்த விகிதாச் சாரத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப அதில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு இருவரும் வருமான வரி செலுத்த வேண்டும். உங்கள் தந்தையின் முதலீட்டில் விவசாயத்தின் மூலம் பெறப்பட்ட தொகை (விவசாய வருமானத்துக்கு வரி இல்லை என்றாலும், அது ஒருவரின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அந்தத் தொகைக்கு வரி கணக் கிடப்பட்டு, பின்னர் விவசாய வருமானத்துக்குக் கணக்கிடப்பட்ட வரி கழிக்கப்படும்), மூத்த குடிமகனுக்கான வருமான வரி வரம்பு ஆகியவற்றையெல்லாம் கணக்கிட்டு, அதற்கேற்ப வருமான வரி கணக்கிடப்படும். உங்கள் தந்தைக்கு விவசாய வருமானம் மற்றும் எஃப்.டி வருமானம் இரண்டும் சேர்ந்து, அவர் சீனியர் சிட்டிசன் என்பதால், ரூ. 3 லட்சத்துக்குள் இருந்தால் அவர் வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது.

கே.ஆர்.சத்யநாராயணன், எஸ்.ராமலிங்கம்
கே.ஆர்.சத்யநாராயணன், எஸ்.ராமலிங்கம்

மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். சேமிப்புக் கணக்கில் ரூ.80,000 இருக்கிறது. நான் ஓய்வு பெறும்போது கிடைக்கவிருக்கும் கிராஜுவிட்டி தொகை ரூ.9,00,000 மற்றும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை ரூ.7,00,000 அடுத்த மாதம் கிடைக்கும். மொத்தம் ரூ.16 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் ஆறு ஆண்டுகளுக்கு முதலீடு செய்து என் மகளின் திருமணச் செலவுகளை எதிர்கொள்ள ஆலோசனை கூறுங்கள்.

ஜூலியட் ஜீவானந்தம், நாசரேத்

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“மகள் திருமணத்துக்கு இன்னும் ஆறு ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க முடியாது. அவசர நிதிக்காக 30,000 ரூபாயை வங்கி சேமிப்புக்கணக்கில் வையுங்கள். 50,000 ரூபாயை 7% வருமானம் தரக்கூடிய எளிதில் பணமாக்கக்கூடிய லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். ரூ.4,00,000 வீதம் இரண்டு லார்ஜ்கேப் ஃபண்டுகளான ஆக்சிஸ் புளூசிப், டி.எஸ்.பி டாப் 100 ஈக்விட்டி ஃபண்டுகளிலும், ரூ.4,00,000 வீதம் இரண்டு மல்டிகேப் ஃபண்டுகளான கோட்டக் ஸ்டாண்டர்ட் மல்டிகேப், மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்டுகளிலும் ஆறு வருடங்களுக்கு முதலீடு செய்து பலன்பெறுங்கள். ஆண்டு வருமானம் 10% ஈட்டும்பட்சத்தில், நீங்கள் ரூ.29,34,000 எனும் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் எவ்வளவு கிடைக்கும்?

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com