Published:Updated:

ரூ.20 லட்சம் முதலீடு செய்தால்... கிடைக்கும் மாத வருமானம்!

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ரூ.20 லட்சம் முதலீடு செய்தால்... கிடைக்கும் மாத வருமானம்!

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

வயது 45. கடந்த ஆறு மாத காலமாக வேலையில்லாமல் இருக்கிறேன். என் சேமிப்பு மூலமாகக் குறிப்பிட்ட அளவுக்கு வருமானம் கிடைக்கும்பட்சத்தில், வேலை கிடைக்கும் வரையிலான காலகட்டத்தை எளிதில் கடக்க இயலும். என் சேமிப்பில் 20 லட்ச ரூபாய் இருக்கிறது. இதை முதலீடு செய்து மாதாந்தர வருமானம் பெற ஆலோசனை கூறுங்கள். எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டால் பயனுடையதாக இருக்கும்.

கிறிஸ்டோபர், முகநூல் வழியாக...

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்  

“நீங்களும் உங்கள் மனைவியும் தலா ரூ.4.5 லட்சத்தை ‘அஞ்சலக மாதாந்தர வருவாய்’ (MIS) திட்டத்தில் முதலீடு செய்தால், 7.6% வட்டி என்ற நிலையில் மாதந்தோறும் ரூ.5,700 கிடைக்கும். மீதமிருக்கும் தொகையில் ரூ.5 லட்சத்தை ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் டிவிடெண்ட் ஃபண்டில் முதலீடு செய்தால், தோராயமாக மாதம் ரூ.5,000 எதிர்பார்க்கலாம்.

மீதம் ரூ.6 லட்சம் உள்ளது. இதை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் அஸெட் அலொகேஷன் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளவும். அதிலிருந்து எஸ்.டபுள்யூ.பி முறையில் மாதம் ரூ.5,000 வரை வருமானம் பெறலாம். மொத்தமாக, ரூ.15,700 மாத வருமானமாகப் பெற வாய்ப்பிருக்கிறது.”

எஸ்.பாரதிதாசன், கே.பி.மாரியப்பன்
எஸ்.பாரதிதாசன், கே.பி.மாரியப்பன்

கார் சாவிக்குத் தனியாக இன்ஷூரன்ஸ் இருப்பதாகக் கூறுகிறார்களே உண்மையா, அது அவசியமா?

ரஞ்சித், முகநூல் வழியாக...

கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்

“உண்மைதான். முன்னர் வந்த கார்களுக்கான சாவிகள் குறைவான விலையிலிருந்தன. எனவே, அவற்றுக்கென இன்ஷூரன்ஸ் தேவைப் படவில்லை. ஆனால், தற்போது ரிமோட் கீ சிஸ்டம் வந்திருக்கிறது. இதன் விலை சில ஆயிரங்களில் தொடங்கி லட்சக்கணக்கான ரூபாயாக இருக்கிறது. கார் சாவியைத் தொலைத்துவிட்டால் ‘கீ லாக்கெட்’-ஐ மொத்தமாக மாற்ற வேண்டியிருக்கும். அதற்கான செலவு அதிகம் என்பதால், கார் சாவிக்கென கூடுதல் இணைப்பு (Add-on) பாலிசி இருக்கிறது.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

கார் சாவிக்கு மட்டுமல்ல, காருக்குள் வைத்திருக்கும் பொருள் களுக்கான இன்ஷூரன்ஸ், கார் டயர்களுக்கான இன்ஷூரன்ஸ், கார் விண்ட் ஷீல்டுக்கான இன்ஷூரன்ஸ் எனப் பல கூடுதல் பாலிசிகள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் காருக்கு பம்பர்-டு-பம்பர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது கூடுதல் இணைப்பாக கார் சாவிக்கான பாலிசியையும் எடுத்துக் கொள்வது நல்லது.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரூ.20 லட்சம் முதலீடு செய்தால்... கிடைக்கும் மாத வருமானம்!

`வங்கி திவாலாகும் சூழலில், வங்கி டெபாசிட்டுக்கான அதிகபட்ச இன்ஷூரன்ஸ் தொகை ரூ.1 லட்சம் கிடைக்கும்’ என்கிறார்கள். ஒருவர் பல வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் ரூ.1 லட்சத்துக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் மூலம் இழப்பீடு கிடைக்குமா?

கணேஷ், முகநூல் வழியாக...

ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.

“இந்தியாவைப் பொறுத்தவரை வங்கிகள் திவாலாகுமோ என்ற பயம் தேவையில்லை. வாராக்கடன் பிரச்னையால் வங்கியின் செயல்பாடு பாதிக்கப்படும் சூழலில், இன்னொரு வங்கியோடு அதை இணைத்துவிடுவார்கள். எனவே, வங்கி திவாலானாலும் பிரச்னையில்லை. ஒருவர் பல வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும்போது, எந்த வங்கி திவாலாகிறதோ அந்த வங்கியின் கணக்குக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் (அசல் + வட்டி) மட்டுமே இன்ஷூரன்ஸ் தொகை வழங்கப்படும். ஆனால், திவால் ஆகாத மற்ற வங்கிகளின் டெபாசிட்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.”

என்.விஜயகுமார், ஆர்.கணேசன்
என்.விஜயகுமார், ஆர்.கணேசன்

சீனியர் சிட்டிசனான என் தந்தைக்கு வைப்புநிதி முதிர்வுத்தொகையாக ரூ.5 லட்சம் கிடைத்திருக்கிறது. ஆண்டு வருமானமாக 8% வரை எதிர்பார்க்கக்கூடிய கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து ஓய்வூதியம்போல மாத வருமானம் கிடைப்பதற்கு ஆலோசனை கூறவும்.

செந்தில்குமார், கோயமுத்தூர்

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்

“தற்போதைய சூழலில் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால் சுமார் 7%  வருமானம் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் வசிக்கும் சீனியர் சிட்டிசன்களுக்காகவே சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் இருக்கிறது. இது, கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து ஐந்தாண்டுகாலத்தில் முதிர்வடையும்.

இதை ஒரேயொரு முறை மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இதில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு 8.6% வருமானம் கிடைக்கும். இதில் வருமானத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வங்கிக் கணக்கில் சேர்ப்பார்கள். நீங்கள் உங்கள் தேவைக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து செலவு செய்துகொள்ளலாம்.

இதுபோக, குறிப்பிட்ட சில வங்கி வைப்புநிதிகளிலும் முதலீடு செய்யலாம். ஹெச்.டி.எஃப்.சி வைப்புநிதியில் சுமார் 7.65% வட்டி கிடைக்கக்கூடும்.”

பார்ட்னர்ஷிப்பில் நடத்தப்பட்ட நிறுவனத்தைத் தற்போது கலைத்துவிட்டோம். அந்த நிறுவனத்துக்கான பான் கார்டை எவ்வாறு சரண்டர் செய்வது?

ராம்குமார், முகநூல் வழியாக...

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்

“பார்ட்னர்ஷிப் நிறுவனத்தைக் கலைப்பதற்கு முன்பு வரை வரி செலுத்தியதற்கான சான்றை எடுத்துக்கொள்ளவும். பார்ட்னர்ஷிப் நிறுவனத்தைக் கலைத்தது குறித்து ஒரு பத்திரத்தில் (Dissolution Deed) கையெழுத்திட்டிருப்பீர்கள். அதன் நகலை எடுத்துக் கொள்ளவும். பான் கார்டை சரண்டர் செய்வது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதிக் கொள்ளவும்.

இந்த மூன்றையும் எடுத்துக்கொண்டு, அந்த பான் கார்டை உங்கள் பகுதிக்கான அதிகார வரம்புடைய வருமான வரி மதிப்பீட்டு அலுவலரிடம் ஒப்படைத்த பிறகு பான் கார்டை சரண்டர் செய்ததற்கான ஒரு ஒப்புகைச்சீட்டு தருவார்கள்.”

வி.எஸ்.சரண்சுந்தர், எஸ்.ராமலிங்கம்
வி.எஸ்.சரண்சுந்தர், எஸ்.ராமலிங்கம்

என் வயது 35. எனது 55 வயதில் ஓய்வுக்காலச் சேமிப்பாக ரூ.2 கோடி தேவை. கடந்த ஓராண்டாக, மாதந்தோறும் ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்டில் 2,000 ரூபாயும், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்டில் 4,000 ரூபாயும் முதலீடு செய்துவருகிறேன். என் இலக்கை எட்டுவதற்கு இந்த முதலீடு போதுமா?

சந்திரசேகர், முகநூல் வழியாக...

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“தற்போது நீங்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவரும் லார்ஜ்கேப் (ஆக்ஸிஸ் புளூசிப்), ஸ்மால்கேப் (நிப்பான் இந்தியா) ஃபண்டுகள் தரும் ஆண்டு சராசரி வருமானம் 12% எனக் கணக்கிட்டால், 20 ஆண்டுகளில் 55 லட்சம் ரூயாய்தான் சேரும்.

விலைவாசி உயர்வை எதிர்கொள்ள ஆண்டுதோறும் எஸ்.ஐ.பி தொகையை 8-10% அதிகப்படுத்த முயலுங்கள்!

இவற்றோடு ரூ.4,000 வீதம் ஆக்ஸிஸ் ஸ்மால்கேப், டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்ட் மல்டிகேப், மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் மற்றும் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஆகிய நான்கு ஃபண்டுகளில் கூடுதலாக 16,000 ரூபாயை முதலீடு செய்தால், 12% ஆண்டு வருமானம் எனக் கணக்கிட்டால், ரூ.2 கோடி இலக்கை நீங்கள் அடைய வாய்ப்பிருக்கிறது.

விலைவாசி உயர்வை எதிர்கொள்ள வருடா வருடம் மாத எஸ்.ஐ.பி தொகையை இயன்றவரை 8-10% அதிகப்படுத்த முயலுங்கள். 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்வதும் அவசியம்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com