தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் நான், வங்கிகளில் வீட்டுக் கடன் பெற முயன்றேன்; கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு வீட்டுக் கடன் பெற்றுத் தருவதாக அனுபவமுள்ள சில ஏஜென்ட்டுகள் என்னை அணுகுகிறார்கள். வங்கியே கடன் தர முன்வராத நிலையில் அவர்களால் மட்டும் எப்படி பெற்றுத்தர முடியும்?

கிருஷ்ணன், முகநூல் வழியாக...

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி

“தற்போது வீட்டுக் கடன் என்பது மிக எளிதான ஒன்றாகிவிட்டது. அவரவர் வருமானத்துக்கேற்ப வீட்டுக் கடன் தாராளமாகக் கிடைக்கும். ஒருவேளை உங்கள் சிபில் ஸ்கோரில் பிரச்னை இருந்தால் மட்டும் வீட்டுக் கடன் கிடைப்பதில் சிக்கல்கள் எழக்கூடும். தனியார் வங்கிகளில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதற்கு ஏஜென்ஸிகள் இருக்கின்றன. அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். அதனால் உங்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசி வாங்கித்தருவார்கள். மற்றபடி அவர்களுக்கென வங்கி விதிமுறைகளில் மாற்றம் எதுவும் இருக்காது.

அதேவேளையில் சில ஏஜென்ஸிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதும் நடக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் வங்கிக் கடன் உறுதியான பின்னரே அதற்கான பிராசஸிங் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் வாங்குகிறார்கள். ஆனால், தனியார் வங்கிகளின் ஏஜென்ஸிகள் பிராசஸிங் கட்டணத்தை முன்னதாகவே வாங்கிவிடுவார்கள். இப்படிப் பணத்தை வசூலித்துவிட்டு கடைசி நேரத்தில், `கடன் ரத்தாகிவிட்டது’ என்று கூறி, ஏற்கெனவே வசூலித்த பணத்தைத் திரும்பத் தராமல் மோசடி செய்வதும் நடக்கிறது. எனவே, கவனமாக இருக்கவும்.”

ஏற்றுமதிக்குக் கிடைக்கும் மானியங்களை எப்படித் தெரிந்துகொள்வது?

வெங்கடேஷ், சென்னை-12

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்ஸிம்

``இந்திய அரசின் Indiantradeportal.in என்ற இணையதளத்தில் உங்களுக்குத் தேவையான விவரங்களைப் பெறலாம். இந்த இணையதளத்தை ஃபியோ (Federation of Indian Export Organisations) என்ற அமைப்பு பராமரித்துவருகிறது. எந்தப் பொருளை ஏற்றுமதி செய்யப்போகிறீர்கள் என்பதை இணையதளத்தில் குறிப்பிட வேண்டும். அதையடுத்து, ஏற்றுமதி என்ற பட்டனைத் தேர்வுசெய்ய வேண்டும். அடுத்து உங்கள் பொருளுக்கான ஹெச்.எஸ் கோடு கிடைக்கும்.

அடுத்ததாக எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும், எந்தெந்த வகைகளை ஏற்றுமதி செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். பின்னர், அந்தப் பொருளுக்கு என்னென்ன மானியமெல்லாம் கிடைக்கும், அதற்கான ஜி.எஸ்.டி., டூட்டி டிராபேக் (Duty Drawback), டிரான்ஸ்போர்ட் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட் ஆகியவை எவ்வளவு, ஏற்றுமதிக்கொள்கை போன்ற அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் காண முடியும். இது ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் பயனுள்ள இணையதளம்.”

ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் - ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் - ரூ.3,000, டி.எஸ்.பி மிட்கேப் ரெகுலர் ப்ளான் குரோத் ஆப்ஷன் - ரூ.3,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் - ரூ.2,000 ஆகிய நான்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் கடந்த ஓராண்டு காலமாக முதலீடு செய்துவருகிறேன். முதலீட்டுக்காலம் 12 ஆண்டுகள். என் முதலீட்டுத் தேர்வு சரியானதா என்பதை விளக்கவும்.

நித்யா, கோவை-4

ஸ்ரீகாந்த் மீனாட்சி, நிறுவனர், primeinvestor.in

“12 ஆண்டுக்காலம் என்பது முதலீடுகளைப் பொறுத்தவரை ஒரு நல்ல, நீண்டகாலம். அத்தகைய காலவெளிக்கு அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகள் நல்ல லாபம் பெற்றுத் தர வாய்ப்புள்ளது. உங்கள் முதலீடுகள் அந்த வகையில்தான் உள்ளன.

12 ஆண்டுக்காலம் என்பது முதலீடுகளைப் பொறுத்தவரை உங்களுக்கு ஒரு நல்ல நீண்ட காலம்.

25% ஒரு லார்ஜ்கேப் ஃபண்டிலும், 20% ஒரு மல்டிகேப் ஃபண்டிலும் மற்றவை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஃபண்டிலும் உள்ளன. இந்தத் தொகுப்பில் ரிஸ்க் அதிகம். இருந்தாலும், இவை நல்ல ஃபண்டுகள், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம். ஆகையால், இந்தத் தொகுப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள்.”

பணி ஓய்வு பெற்றுள்ள நான் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதந்தோறும் ரூ.12,000 முதலீடு செய்ய ஆலோசனை வழங்கவும்.

கார்த்திக், முகநூல் வழியாக...

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“பொதுவாக குறுகியகாலக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் முதிர்வுக்காலம் சராசரியாக 2-3 ஆண்டுகளைக் கொண்டிருக்கும். எனவே, உங்கள் குறிக்கோளை அடைவதற்கு எஸ்.ஐ.பி முறையில் குறுகியகாலக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நலம். ஹெச்.டி.எஃப்.சி ஷார்ட் டேர்ம் டெபிட் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஷார்ட் டேர்ம் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஷார்ட் டேர்ம் ஃபண்ட் ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.”

நான் நவம்பர் 2018-ம் ஆண்டு பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தபோது எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டில் டிவிடெண்ட் பெறும் திட்டத்தில் முதலீடு செய்திருந்தேன். பங்குச் சந்தை ஏற்றத்தில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அடுத்த வருடம் குரோத் ஆப்ஷனுக்கு அதை மாற்றி, மாதந்தோறும் 1% சிஸ்டமேட்டிக் வித்டிராயல் முறையில் எடுக்கலாமா?

மைக்கேல், முகநூல் வழியாக...

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

“டிவிடெண்ட் ஆப்ஷன் திட்டத்தில் மத்திய அரசுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், 11.648% டிவிடெண்ட் விநியோக வரி செலுத்துகிறது. வரி செலுத்திய பிறகு இருக்கும் டிவிடெண்ட் தொகைதான் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், குரோத் ஆப்ஷனில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரை லாபத்துக்கு வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட தொகைக்கு 10% வரி செலுத்தினால் போதும். எனவே, குரோத் ஆப்ஷனுக்கு மாற்றி, மாதந்தோறும் 1% சிஸ்டமேட்டிக் வித்டிராயல் மூலம் எடுப்பது லாபகரமாக இருக்கும்.”

நஷ்டத்தில் இயங்கிய ஒரு நிறுவனத்தை எங்கள் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இயங்கிவந்த அந்த நிறுவனத்தில் முறையாகக் கணக்கு வழக்குகள் பராமரிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாங்கள் வருமான வரித் தாக்கல் செய்யும்போது, பழைய நிறுவனத்தின் கணக்குகளை எப்படி வருமான வரி கணக்கு தாக்கலில் கொண்டுவருவது?

கார்த்திக், முகநூல் வழியாக...

டாக்டர்.கோபால்கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

“ஒரு நிறுவனத்தைக் கையகப்படுத்திவிட்டால், அந்த நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்குகளுக்கு நீங்கள்தான் பொறுப்பாளி. கணக்கு வழக்குகள் பராமரிக்கப்படாமல், ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியிருப்பதாகச் சொல்ல முடியாது. எனவே, அவர்களிடம் அதற்கான கணக்குகள் இருந்தாக வேண்டும். அவற்றைத் திரட்டி, நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது உங்கள் கடமை.வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது அதையும் இணைத்துதான் தாக்கல் செய்ய வேண்டும். எத்தனை ஆண்டுகளுக்கு அவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற விவரத்தைக் குறிப்பிடவில்லை. ஒருவேளை நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் விடுபட்டிருந்தால், உங்களால் இயன்ற அளவுக்கு ஓரிரு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கையாவது நேர் செய்து, தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:  கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com