வருமான வரியை மிச்சப்படுத்த இரண்டாவது வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்குவது சரியா?

வனிதா ரமேஷ், ஆவடி

புவனா ஸ்ரீராம், நிதி ஆலோசகர்

“இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும் முன் ஒரு விஷயத்தை முதலில் புரிந்துகொள்ளுங்கள். வட்டி என்பது ஒரு செலவுதான். அதேபோல, வரி என்பது ஒரு செலவுதான். நீங்கள் கடன் வாங்கி ரூ1,000 வட்டி செலுத்தினால், நீங்கள் ரூ.1,000 செலவிடுகிறீர்கள். இப்படி 1,000 ரூபாயை நீங்கள் செலவழிப்பதன் அடிப்படையில் ரூ.300 (சில நிபந்தனைகள் மற்றும் அடிப்படை வருமான வரி வரம்புகளுக்கு உட்பட்டு) சேமிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது, ரூ.300 சேமிக்க ரூ.1,000 செலவிடுகிறீர்கள். இது மிகவும் புத்திசாலித்தனமான வழியா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.

வரிச் சேமிப்பு என்பது கடன் வாங்க அல்லது இரண்டாவது வீட்டை வாங்குவதற்கான காரணமாக இருக்க முடியாது. நம் நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சி அடையவும், நாட்டு மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டுக் கடனுக்கு மத்திய அரசாங்கம் வருமான வரிச் சலுகை தருகிறது. இந்த வரிச் சலுகை என்பது மட்டுமே வீடு வாங்க தகுந்த காரணமாக இருக்க முடியாது. வீட்டுக் கடனில் வாங்கப்படும் இரண்டாவது வீட்டின்மூலம் உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டும். தவிர, இரண்டாவது வீட்டுக்கான மாதத் தவணையைச் சரியாகச் செலுத்த முடியுமா, இதனால் உங்களின் மற்ற முதலீடுகள் பாதிப்படையுமா என்பதையும் கட்டாயம் கவனித்துவிட்டுத்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும்.''

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் மூலம் 30 ஆண்டுகளில் சராசரியாக என்ன வருமானம் எதிர்பார்க்கலாம்?

கௌதம், யூடியூப் மூலம்

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்

“மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின்மூலம் நீண்ட காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. கடந்த காலத்தில் கிடைத்திருக்கும் வருமானத்தின் அடிப்படையில் பணவீக்க விகிதத்தைவிட சில சதவிகித வருமானம் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். நீண்டகால பணவீக்கம் 5% என்று எடுத்துக்கொண்டால், ஈக்விட்டி ஃபண்ட் மூலமான வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 11% முதல் 12% வரை இருக்கக்கூடும்.”

மோதிலால் நாஸ்டாக் ஃபண்ட் ஆப் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?

தினேஷ், முகநூல் மூலம்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“தாராளமாக முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டிலோ, அதே ஃபண்ட் நிறுவனத்தின் எஸ் அண்ட் பி ஃபண்டிலோ முதலீடு செய்வது சர்வதேச முதலீடு செய்வதற்கு இணையானது. இந்தியாவுக்கு வெளியே ஓரளவுக்கு (மொத்த முதலீட்டுத் தொகையில் சுமார் 10-15%) முதலீடு செய்வது எந்த ஒரு நீண்டகால முதலீட்டுத் தொகுப்புக்கும் உகந்த விஷயமாகும். கடந்த சில வருடங்களாக இப்படி முதலீடு செய்வதில் இருக்கும் நன்மை நிரூபிக்கப்பட்டு வருகிறது.”

யெஸ் பேங்கில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 43.66%. அவர்களின் நலன் காக்கும் பொருட்டு லாக்-இன் பிரீயட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

ஆயுள் காப்பீட்டு பாலிசியை எல்லோரும் எடுத்துதான் ஆக வேண்டுமா, யாரரெல்லாம் அதை எடுக்கத் தேவையில்லை?

சிவன்குமார், மானாமதுரை

அருள்சிவம், ஆயுள் காப்பீட்டு ஆலோசகர், சேலம்

“எந்தச் செலவையும் ஈடுகட்டக்கூடிய பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி தேவையில்லை. தன்னை சார்ந்து யாரும் இல்லை என்கிறவர்களும் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கத் தேவை இல்லை. குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு தேவை இல்லை என்று நினைப்பவர்களுக்கும், ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கத் தேவையில்லை. ‘எனக்கு நன்றாகவே வருமானம் வருகிறது. இதை வைத்தே என் குடும்ப உறுப்பினர்கள் பிழைத்துக் கொள்வார்கள்' என்று நினைத்தவர்களின் எண்ணத்தைப் புரட்டிப் போட்டது கொரோனா. அது மாதிரியான ஒரு ஆபத்து இனியும் வராது என்பதற்கு என்ன நிச்சயம், அப்படி வந்தால், நம் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால பாதுகாப்புக்கு என்ன வழி? குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலப் பாதுகாப்பு குடும்பத் தலைவனின் கையில்தான் என்று நினைப்பவர்கள் அனைவரும் அவசியம் ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுக்க வேண்டும்.”

‘யெஸ்' (Yes) வங்கிப் பங்குதாரர்கள், தாங்கள் வைத்திருக்கும் மொத்தப் பங்குகளில் 25% பங்குகளை மட்டும் விற்க முடியும். மீதம் 75% பங்குகளை மூன்று வருடங்கள் வரை (2023 வரை) விற்க முடியாது (லாக்இன் பீரியட்) என ஒரு வருடத்துக்கு முன் தடை விதித்தது. இப்படிச் செய்ய ‘யெஸ்’ வங்கிக்கு அதிகாரம் இருக்கிறதா? நான் வைத்திருக்கும் 1,800 யெஸ் பேங்க் பங்குகளை விற்க முடியுமா?

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

சி.விவேகானந்தன், நிதி ஆலோசகர்

“பங்கு விற்பனை ‘லாக்இன் பீரியட்' நிபந்தனைக்கும் யெஸ் பேங்க்குக்கும் தொடர்பு இல்லை. மத்திய அரசுதான் இந்த விதிமுறை, நிபந்தனையைக் கொண்டுவந்திருக்கிறது. சிறு முதலீட்டாளர்களைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பங்கின் விலை அதிகமாக இறங்குவது தடுக்கப்பட்டுள்ளது. யெஸ் பேங்க் பங்குகளை பொறுத்தவரை, சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 43.66%. அவர்களின் நலன் காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் நீங்கள் வைத்திருக்கும் பங்கை விற்க முடியாது.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

பிட்ஸ்

1999 முதல் 2019 வரை காற்று மாசுபாட்டால் 16.7 லட்சம் பேர் இறந்து போயிருக் கலாம் என்றும் சுமார் ரூ.2.6 லட்சம் கோடி பொருள் இழப்பு ஏற்பட்டிருக்க லாம் என ஐ.எஸ்.எல்.டி.பி.ஐ (ILSBDI) என்ற நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது!