Published:Updated:

கேள்வி - பதில் : மனைவியின் வாகனம்... கணவன் ஓட்டி விபத்து... இழப்பீடு கிடைக்குமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

வாகனம் ஓட்டும் உங்களுக்குச் செல்லத்தக்க வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டியது அவசியம்.

என் மனைவி அவர் பெயரில் இரு சக்கர வாகனம் வைத்திருக்கிறார். அவர் பெயரில், அந்த வாகனத்துக்கு மூன்றாம் நபர் மற்றும் ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage Insurance) எடுத்திருக்கிறார். அந்த வண்டியை அவ்வப்போது நான் பயன்படுத்துகிறேன். நான் வண்டியை ஓட்டிச் செல்லும்போது ஏதாவது விபத்து என்றால் க்ளெய்ம் செய்ய முடியுமா?

- அ.கார்த்திகேயன், அம்பாசமுத்திரம்

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“செய்ய முடியும். நீங்கள் உங்கள் மனைவியின் அனுமதியுடன்தான் அவரின் வாகனத்தை ஓட்டுகிறீர்கள் என்பதால், மூன்றாம் நபர் மற்றும் டேமேஜ் இழப்பீடு கிடைக்கும். வாகனம் ஓட்டும் உங்களுக்குச் செல்லத்தக்க வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டியது அவசியம்.”

என் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மேல் இருக்கிறது. நான் இரண்டு வருடங்களாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை. ஆனால், வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. இதனால் எனக்கு ஏதாவது பாதிப்பு வருமா?

- மெ.கண்ணன், பேட்டை, நெல்லை மாவட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்டு அக்வுன்டன்ட்

“வருமானம் அடிப்படை விலக்கு வரம்பைத் தாண்டினால், வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை என்றாலும், வரிக் கணக்கு அறிக்கை தாக்கல் செய்வது அவசியம். இந்த அடிப்படை விலக்கு வரம்பு 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நிதியாண்டில் ரூ.2.5 லட்சமாகவும், 60 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சமாகவும் இருக்கிறது.

வி.எஸ்.சுரேஷ், வி.எஸ்.சரண்சுந்தர், த.பார்த்தசாரதி
வி.எஸ்.சுரேஷ், வி.எஸ்.சரண்சுந்தர், த.பார்த்தசாரதி

அந்த வகையில் உங்களின் வயது எதுவானாலும், நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம். முடிந்த 2018-2019-ம் ஆண்டுக்கான தாமதமாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான (Filing Belated Returns) கெடு தேதி இப்போது 2020, ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, எனவே, இப்போது 2018-2019-ம் ஆண்டுக்கான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். அதற்கு முந்தைய 2017-18-ம் ஆண்டுக்கு இப்போது வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. ஒருவேளை, வருமான வரித்துறையிலிருந்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்யச் சொல்லி நோட்டீஸ் வந்தால் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

இப்படி தாமதமாக வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்குச் சரியான காரணம் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படக்கூடும். அதனால், கூடிய வரையில் கெடு தேதிக்குள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவிடுவது நல்லது. வீட்டுக் கடன் போன்ற கடன்கள் வாங்கும்போது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வரிக் கணக்கு விவரங்கள் கேட்கப்படும். அப்போது அந்த விவரங்கள் இல்லையென்றால், கடன் கிடைக்காமல் போகக்கூடும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கேள்வி - பதில் : மனைவியின் வாகனம்... கணவன் ஓட்டி விபத்து... இழப்பீடு கிடைக்குமா?

ஒரு சொத்து வாங்கும்போது அது குறித்த பொது அறிவிப்பைப் பத்திரிகைகளில் வெளியிடுவது அவசியமா?

- அ.முருகவேல், சேலம்.

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

‘‘அனைத்துச் சொத்துகளுக்கும் அவசியம் இல்லை. சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருப்பதுபோல் தோன்றினால் அல்லது மூலப் பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் இப்படிப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும். அதற்கு முன்பு காவல் நிலையத்தில் `சொத்துப் பத்திரம் காணவில்லை’ எனப் புகார் கொடுக்க வேண்டும். அவர்களால் கண்டுபிடித்துத் தர முடியாத நிலையில் தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளில் சொத்தை வாங்கப்போகும் விவரம் குறித்து சிறிய அளவில் வரி விளம்பரமாகக் கொடுக்க வேண்டும். இதன் அடிப்படையில், 15 நாள்கள் கழித்து வழக்கறிஞர் ஒருவரிடம் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பத்திரம் பதிவு செய்துகொள்வது நல்லது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com