Published:Updated:

கேள்வி பதில் : கேரன்டர் கையொப்பம்... பிரச்னை வருமா? - என்ன சிக்கல் வரும்..?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கடன் வாங்கியவர் அதைத் திருப்பித் தராவிட்டால் கேரன்டர் முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தக் கோரப்படும்!

கல்லூரியில் என்னுடன் படித்த தோழி ஒருத்தி வீட்டுக் கடன் வாங்க இருக்கிறாள். ஜாமீன் கையெழுத்து போடும்படி என்னைக் கேட்கிறாள். அவளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவளுக்கு நான் கேரன்டர் கையெழுத்து போட்டால், எனக்கு ஏதாவது சிக்கல் வர வாய்ப்புள்ளதா?

ஏ.முல்லை, திருச்சி

கேள்வி பதில் : கேரன்டர் கையொப்பம்... பிரச்னை வருமா? - என்ன சிக்கல் வரும்..?

“கடன் வாங்கியவர் மூன்று மாத தவணைகளைச் செலுத்தத் தவறும்போது, கடன் கணக்கு, வாராக்கடனாக (என்.பி.ஏ) மாறும். அப்போது கடன் வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் முழுக் கடனையும் கட்டக் கோரலாம். அந்த நிலையில், கேரன்டர் என்கிற உத்தரவாதம் அளித்தவர், பாக்கி உள்ள முழுக் கடனையும் திருப்பிச் செலுத்துமாறு கோரப்படலாம். இணைக் கடன் வாங்குபவர் (co borrower) எனக் கையொப்பமிட்டிருந்தால், கடன் கணக்கு என்.பி.ஏ ஆகும்போது, கடன் வழங்கிய நிறுவனம், உங்கள் தோழியையும் உங்களையும் பாக்கி முழுக் கடனையும் கட்டச் சொல்லும். எனவே, நன்கு யோசித்து முடிவெடுங்கள்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நான் தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி பின்பு 2013-ல் அரசு வேலையில் சோ்ந்துவிட்டேன். எனது பிராவிடன்ட் ஃபண்ட் பென்ஷனை எப்படிப் பெற வேண்டும்?

ராஜ்குமார் ராமன், இ-மெயில் மூலம்

கேள்வி பதில் : கேரன்டர் கையொப்பம்... பிரச்னை வருமா? - என்ன சிக்கல் வரும்..?

“10 வருடம் வைப்புநிதி உறுப்பினராக இருந்தால், அவர் 50 வயது முதல் 57 வயது நிறைவு அடையும் வரை விண்ணப்பம் செய்து, வாழ்நாள் முழுவதும் குறைக்கப்பட்ட ஓய்வூதியம் மட்டுமே பெறலாம். 58 வயது நிறைந்த பின் விண்ணப்பம் செய்தால், அவருக்குச் சேர வேண்டிய முழு ஓய்வூதியம் பெறலாம். 10 வருடத்துக்குக் குறைவாக அவர் உறுப்பினராக இருந்து, தற்போது வைப்புநிதி செலுத்த வேண்டிய உறுப்பினராக எங்கும் பணியில் இல்லை, 58 வயது நிறைவுக்கு முன் 10 வருடம் ‘உறுப்பினராகத் தகுதியுடைய பணியில் இருக்கப்போவதில்லை’ என்னும் நிலையில் ‘படிவம் 10C’ மூலம் ஓய்வூதிய தொகையை முழுமையாகத் திரும்பப் பெறலாம்.”

கேள்வி பதில் : கேரன்டர் கையொப்பம்... பிரச்னை வருமா? - என்ன சிக்கல் வரும்..?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க இருக்கிறேன். அதில், ‘நோ க்ளெய்ம் போனஸ் என்று ஒன்று இருக்கிறது’ என்கிறார்கள். அது எப்படி பாலிசிதாரருக்குக் கிடைக்கும் என்பதைத் தெளிவுபடுத்தவும்.

சா.ஸ்ரீதர், இ-மெயில் மூலம்

கேள்வி பதில் : கேரன்டர் கையொப்பம்... பிரச்னை வருமா? - என்ன சிக்கல் வரும்..?

“ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதும், ஒவ்வோர் ஆண்டும் பாலிசிதாரர் க்ளெய்ம் செய்வது கிடையாது. இவ்வாறு பாலிசி எடுத்து க்ளெய்ம் செய்யாதபோது, பாலிசிதாரருக்கு பயனுள்ள வகையில் அந்த பாலிசியின் காப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்துவதோ, பாலிசியின் பிரீமியம் தொகையைக் குறைப்பதையோ ‘நோ க்ளெய்ம் போனஸ்’ என்று கூறுவார்கள்.இந்த ‘நோ க்ளெய்ம் போனஸ்’ என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யும். ஆகவே, பாலிசி எடுக்கும் முன் எந்தவகையான ‘நோ க்ளெய்ம் போனஸ்’ வழங்குகிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்கவும்.”

தவணை முறையில் வாங்கிய வீட்டு மனைகளை அரசு எடுத்துக்கொள்ளும்போது பட்டா உள்ளிட்ட சான்றுகளை நாம் அளிக்க வேண்டுமா?

சி.கார்த்திகேயன், சாத்தூர்

கேள்வி பதில் : கேரன்டர் கையொப்பம்... பிரச்னை வருமா? - என்ன சிக்கல் வரும்..?

“வருவாய்த்துறை ஆவணமான பட்டா அடிப்படையில் அரசு இழப்பீடு கொடுக்கும். அதனால், உங்கள் பெயரில் பட்டா இருப்பது நல்லது. இல்லை என்றால், உங்களுக்கு இந்த இடம் சொந்தமானது என்பதைப் பதிவுத்துறை ஆவணங்களான வில்லங்கச் சான்று, கிரயப் பத்திரம், மூலப்பத்திரம் ஆகியவற்றைத் தொடர்புடைய அதிகாரியிடம் காண்பித்து, நிரூபித்து இழப்பீடு பெறலாம். இதனால் காலதாமதம் ஏற்படக்கூடும். எனவே, உங்கள் பெயரில் பட்டா மாற்றி வைத்துக்கொள்வது நல்லது.”

கரூர் வைஸ்யா பேங்க் பங்கை பங்கு ஒன்று ரூ.140 விலையில் வாங்கினேன். தற்போது அதன் விலை ரூ.20-க்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நான் என்ன செய்வது?

ஆர்.எம்.குமரப்பன், மதுரை

கேள்வி பதில் : கேரன்டர் கையொப்பம்... பிரச்னை வருமா? - என்ன சிக்கல் வரும்..?

“நீங்கள் வாங்கிய விலையாகக் குறிப்பிடும் பங்கின் விலை, நீங்கள் 2017–ம் ஆண்டில் 1:6 உரிமைப் பங்கு வெளியீட்டுக்கு முன் வாங்கியதையே குறிக்கிறது. எனவே, நீங்கள் அதன் மூலம் பயனடைந்திருப்பீர்கள். ரூ.33 என்ற நிலையில் உள்ள பங்கின் தற்போதைய மதிப்பு நீங்கள் வாங்கிய விலையைவிட அதிகமான மதிப்பைக் குறிக்கிறது, எனவே, நீங்கள் கவலைபடத் தேவையில்லை. கரூர் வைஸ்யா பேங்க், இரண்டாம் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. வாராக்கடனுக்கான குறைந்த ஒதுக்கீட்டின் மூலம் இதன் நிகர லாபம் 81% உயர்ந்திருக்கிறது இந்த வங்கி முன்னேற்றப் பாதையில் இருப்பதையே காட்டுகிறது. நீங்கள் மற்றொரு காலாண்டுக்குப் பங்குகளை வைத்திருக்கலாம். அதன் பின்னர் மதிப்பீடு செய்யலாம்.

பங்கின் விலை ரூ.23-25 வரம்புக்குக் கீழே இறங்கினால், நீங்கள் இந்தப் பங்கிலிருந்து வெளியேறுவதைக் கருத்தில் கொள்ளலாம்.”

எனது 12 வயது மகளின் உயர்கல்வி, திருமணந்துக்கு ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் மாதம் ரூ.500 சேமித்து வருகிறேன். மேலும், எனது 8 வயது மகனின் உயர்கல்விக்கு நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்டில் மாதம்தோறும் முதலீடு செய்து வருகிறேன். இவற்றைத் தொடரலாமா?

கே.விஜயராகவன், நெல்லை

கேள்வி பதில் : கேரன்டர் கையொப்பம்... பிரச்னை வருமா? - என்ன சிக்கல் வரும்..?

“உங்களின் முதலீடுகளைக் கண்டிப்பாகத் தொடரலாம். மகளின் உயர் கல்விக்கு இன்னும் ஆறு வருடங்கள் உள்ளன. மகளுக்கு 17 வயதாவதற்கு ஓராண்டு அல்லது ஆறு மாதங்களுக்கு முன் முதலீட்டை லிக்விட் ஃபண்டுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் நல்ல லாபம் தரக்கூடியதுதான்.

உங்கள் மகனின் கல்லூரிப் படிப்புக்கு இன்னும் 10 வருடங்கள் இருப்பதால், அதையே தொடரலாம். உங்கள் மகன் கல்லூரியில் சேர்வதற்கு ஓராண்டு அல்லது ஆறு மாதங்களுக்கு முன் லிக்விட் ஃபண்டுகளுக்கு மாற்றி வைத்துக்கொண்டால், கடைசி நேரத்தில் பங்குச் சந்தை இறக்கத்திலிருந்து முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com