Published:Updated:

நாணயம் பிட்ஸ்

இன்டர்நெட்
பிரீமியம் ஸ்டோரி
இன்டர்நெட்

வருகிற 2022-ம் ஆண்டுக்குள் நம் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி

நாணயம் பிட்ஸ்

வருகிற 2022-ம் ஆண்டுக்குள் நம் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி

Published:Updated:
இன்டர்நெட்
பிரீமியம் ஸ்டோரி
இன்டர்நெட்
‘‘பொருளாதாரம் சரிகிறது; பங்குச் சந்தை உயர்கிறது. ஏனென்று புரியவில்லை!’’
- அரவிந்த் சுப்பிரமணியம்
அரவிந்த் சுப்பிரமணியம்
அரவிந்த் சுப்பிரமணியம்
ராம்தேவ்
ராம்தேவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூ.4,000 கோடி... ராம்தேவுக்கு கடன் தரும் வங்கிகள்!

திவால் நிலைக்குச் சென்றிருக்கும் ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், அதற்குத் தேவையான நிதி இல்லாமல் தவித்தது பதஞ்சலி நிறுவனம். அதற்காக வங்கியில் கடன் பெற முயற்சி செய்துவந்தார் ராம்தேவ். கடன் கிடைத்துவிடும் என்று அவர் உட்படப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங்கை கிரிசில் நிறுவனம் தரமிறக்கம் செய்தது. ஆனால், கிரிசில் தன் முடிவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ வங்கி, பதஞ்சலிக்கு ரூ.4,000 கோடி கடன் வழங்க முன்வந்திருக்கிறது.

பாபாஜி, வாங்குற கடனை கரெக்ட்டா திருப்பித் தந்துடுவீங்களா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அம்பானி
அம்பானி

ரூ.25,000 கோடி... டவர் பிசினஸை விற்ற அம்பானி!

ஜியோ நிறுவனத்தின் செல்போன் டவர்களை பராமரித்துவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 100% பங்குகளை கனடாவின் புரூக் ஃபீல்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்ட்னர்ஸ் எல்.பி நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் ரிலையன்ஸுக்கு ரூ.25,215 கோடி கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு தற்போது 1,30,000 டவர்கள் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இது 1,75,000 டவர்களாக உயருமாம்!

முகேஷ் முடிவு சரியாத்தான் இருக்கும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரூ.1,300 கோடி... வி.ஆர்.எஸ் மூலம் பி.எஸ்.என்.எல்-க்கு மிச்சம்!

அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் லாபம் சம்பாதிக்க முடியாமல் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் போராட்டத்தை நடத்திவருகிறது. வருமானம் போதிய அளவில் இல்லாத நிலையில், செலவைக் குறைப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. தானாக முன்வந்து ஓய்வுபெறும்

வி.ஆர்.எஸ் திட்டத்தை பெரிய அளவில் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

வி.ஆர்.எஸ் கேட்டவர்களுக்கெல்லாம் வழங்கியதன் மூலம் இந்த நிறுவனத்துக்கு ரூ.1,300 கோடி மிச்சமாகும் என பி.எஸ்.என்.எல் தெரிவித்திருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நிறுவனம் மிச்சப்படுத்தும் தொகை இன்னும் கணிசமாக அதிகரிக்குமாம்!

வருமானம் இல்லாதபோது செலவைக் குறைப்பது சரிதானே!

ஆர்.டி.ஜி.எஸ்
ஆர்.டி.ஜி.எஸ்

24 x 7 நெஃப்ட்... ஆர்.டி.ஜி.எஸ் வசதியும் இனி கிடைக்கும்!

நெஃப்ட் (NEFT) மூலம் பணம் அனுப்பும் வசதி இப்போது நாள் முழுக்கக் கிடைக்கும்படி செய்திருக்கிறது ஆர்.பி.ஐ. கடந்த திங்கள் முதல் எல்லா வங்கிகளும் இந்த சேவையைத் தரத் தொடங்கின. அன்றைய தினத்தில் முதல் எட்டு மணி நேரத்திலேயே 11.40 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்தன. `நெஃப்ட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்தால், எந்தக் கட்டணத்தையும் விதிக்கக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறது ஆர்.பி.ஐ. விரைவில், ஆர்.டி.ஜி.எஸ் வசதியையும் 24 மணி நேரமும் அளிக்கத் திட்டமிட்டுள்ளது ஆர்.பி.ஐ.

கீப் இட் அப் கவர்னர்...!

இன்டர்நெட்
இன்டர்நெட்

ரூ.7 லட்சம் கோடி... கிராமப்புறங்களில் இன்டர்நெட் வசதி!

வருகிற 2022-ம் ஆண்டுக்குள் நம் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தித்தர `தேசிய பிராட்பேண்ட் மிஷன்’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார் சட்டம், நீதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இதற்கு ரூ.7 லட்சம் கோடி செலவாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இன்டர்நெட் சேவை அனைத்து மக்களுக்கும் சரிசமமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி மூன்று மில்லியன் கிலோ மீட்டர்களுக்கு புதிதாக ஃபைபர் ஆப்டிகல்கள் பதிப்பிக்கப்படும். `இரண்டாயிரம் பேருக்கு ஒரு டவர்’ என்ற அளவில் டவர் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10% அதாவது, ரூ.70,000 கோடி யூனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் ஃபண்ட் (USOF) திட்டத்திலிருந்து முதலீடு செய்யப்படவிருக்கிறது. தற்போது 5,65,000-ஆக இருக்கும் டவர்களின் எண்ணிக்கை 2024-ம் ஆண்டு 10 லட்சம் என்ற அளவில் உயர்ந்துவிடுமாம்!

இனி விவசாயமும் நெட் மூலமே நடக்கும்!

சில்லறைக் கடன்
சில்லறைக் கடன்

ரூ.96 லட்சம் கோடி... 5 ஆண்டுகளில் இருமடங்கு உயரும் சில்லறைக் கடன்!

பர்சனல் லோன், வாகனங்கள் வாங்க லோன், கிரெடிட் கார்டு லோன் போன்ற சில்லறைக் கடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கிரிசில் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மூலமே இந்த வகையான சில்லறைக் கடன்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட சில்லறைக் கடன் ரூ.22 லட்சம் கோடியாக இருந்தது; இந்த நிதியாண்டில் இந்த சில்லறைக் கடன் ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது, 2024-ம் ஆண்டில் இது ஏறக்குறைய ரூ.96 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது கிரிசில் நிறுவனம். வீட்டை அடமானமாகவைத்து பெறப்படும் கடன் தற்போது ரூ.23.4 லட்சம் கோடியாக இருக்கிறது. இது வரும் 2024-ம் ஆண்டில் ரூ.46.1 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ரூ.6.6 லட்சம் கோடியாக இருக்கும் எஸ்.எம்.இ-களுக்கான கடன் 2024-ம் ஆண்டில் ரூ.13.2 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கடன்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சரியான வளர்ச்சிதானா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism