Published:Updated:

நாணயம் பிட்ஸ்

வெங்காயம்
பிரீமியம் ஸ்டோரி
வெங்காயம்

அண்மையில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தைப் பெருமளவில் இறக்குமதி செய்து மாநில அரசுகள் நடத்தும்

நாணயம் பிட்ஸ்

அண்மையில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தைப் பெருமளவில் இறக்குமதி செய்து மாநில அரசுகள் நடத்தும்

Published:Updated:
வெங்காயம்
பிரீமியம் ஸ்டோரி
வெங்காயம்

“பொருளாதார மந்தநிலை காலகட்டமே முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம்!”

- சஜ்ஜன் ஜிண்டால், ஜே.எஸ்.டபிள்யூ குரூப்

Sajjan Jindal
Sajjan Jindal
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மலேசிய பாமாயில் வேண்டாமே!

Palm oil
Palm oil

த்திய அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் குடியுரிமைத் திருத்த மசோதாவை நம் நாட்டில் ஒருசாரார் எதிர்த்துக்கொண்டிருக்க, சில உலக நாடுகளும் இந்த மசோதாவை விமர்சனம் செய்துவருகின்றன. அப்படி விமர்சனம் செய்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று. அதைத் தொடர்ந்து, `மலேசியாவிலிருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய வேண்டாம்’ என இந்தியாவிலுள்ள பாமாயில் சுத்திகரிப்பாளர்களிடம் தனிப்பட்ட முறையில் அரசாங்கம் கேட்டிருக்கிறது. உலக அளவில் மலேசியாவில் பாமாயிலை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது நம் நாடு. நாம் பாமாயிலைக் குறைவாக இறக்குமதி செய்யும் பட்சத்தில், அதன் விலை சர்வதேசச் சந்தையில் குறைய வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நம் நாட்டில் பாமாயில் விலை உயர்ந்துவிடப்போகிறது... உஷார்!

கலக்கும் ரோல்ஸ் ராய்ஸ்!

`உலகம் முழுக்கப் பொருளாதார நிலை சரியில்லை’ என்றுதான் திரும்பிய பக்கமெல்லாம் பேச்சு. இதனால் கார்களின் விற்பனை படு டல் என்றும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனமோ கடந்த ஆண்டில் விற்பனையை 25% அளவுக்கு அதிகரித்து, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் 4,107 கார்களை மட்டுமே விற்பனை செய்த இந்த நிறுவனம், கடந்த 2019-ம் ஆண்டு ஏறக்குறைய 50 நாடுகளில் 5,152 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விற்றிருக்கிறது.

rolls-royce car
rolls-royce car

116 வருடப் பாரம்பர்யம்கொண்ட பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் பெருமைமிகு பிராண்டான ரோல்ஸ் ராய்ஸ், அதன் வரலாற்றிலேயே இத்தனை அதிக கார்களை விற்றதில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.

பெரும் பணக்காரர்களுக்கு ஏது பொருளாதார மந்தநிலை?

suv car
suv car

சீனாவில் நடனமாடிய டெஸ்லா எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனம் தனது புதிய எஸ்.யூ.வி காரை சீனாவில் அறிமுகம் செய்திருக்கிறது. முழுக்க மின்சாரத்தில் இயங்கும் இந்த கார் ஷாங்காயில் இருக்கும் டெஸ்லா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட 357 நாள்களிலேயே கார் உற்பத்தியையும் தொடங்கியிருக்கிறது டெஸ்லா. இந்த காரை அறிமுகப்படுத்தும் விழாவில் நடனமாடி அசத்தினார் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க். ‌சீனாவில் டெஸ்லாவின் தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பற்றி புல்லரித்துப் பேசியிருக்கிறார் அவர்.

இந்தியாவுக்கு எப்ப வரப்போறீங்க எலன்?

Onion
Onion

வெளிநாட்டு வெங்காயம் மத்திய அரசுக்கு நஷ்டம்!

ண்மையில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தைப் பெருமளவில் இறக்குமதி செய்து மாநில அரசுகள் நடத்தும் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்ய முடிவெடுத்தது மத்திய அரசு. இதற்காக வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் வெங்காயத்தையும் இறக்குமதி செய்தது. ஆனால், இந்த வெளிநாட்டு வெங்காயத்தை பல மாநில அரசாங்கங்கள் வாங்க மறுத்துவிட்டன. இதனால் இறக்குமதி செய்த வெளிநாட்டு வெங்காயத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மத்திய அரசு, நியாயவிலைக் கடைகள் மூலமே அவற்றை விற்றுவிட மாநில அரசுகளை நிர்பந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ‘வாங்கிய விலையைத் தந்தால் போதும்; நீங்கள் சொல்லும் இடத்துக்கு கொண்டுவந்து தருகிறோம்’ என்று டீல் பேசுகிறது.

இனி ரேஷன் கடையில் வெங்காயத்தையும் வாங்கியாக வேண்டுமா?

நாணயம் பிட்ஸ்

ஏர் இந்தியா விற்பனைக்குத் தயார்!

ல ஆண்டுகளாக பெரும் நஷ்டத்திலிந்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அனுமதி கொடுத்திருக்கிறது மத்திய அமைச்சர்குழு. இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படுமாம். இந்த நிறுவனத்துக்கு ரூ.58,351 கோடி கடன் இருக்கிறது. இதில் ரூ.20,000 கோடியை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த நிறுவனம் ரூ.29,720 கோடி அளவுக்கு புதிதாக மூலதனத்தைப் போட்டும் எந்தப் பயனும் இல்லை.

ஏர் இந்தியாவை எந்த நிறுவனம் வாங்கப் போகிறதோ!

பதவி மாறும் விப்ரோ ரிஷாத் பிரேம்ஜி!

நாணயம் பிட்ஸ்

கார்ப்பரேட் நிறுவனங்களை முறைப்படுத்தும் நோக்கில் பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் ஒன்று, `ஒரு நிறுவனத்தின் தலைவராகவும் சி.இ.ஓ-வாகவும் ஒருவரே இருக்கக் கூடாது’ என்பது. இந்தப் புதிய விதிமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. செபியின் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இந்த இரு பதவிகளுக்கும் வெவ்வேறு நபர்களை நியமித்துவருகின்றன. விப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ ஆகிய இரு பதவிகளையும் ரிஷாத் பிரேம்ஜியே வகிக்கிறார். செபியின் புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்த விப்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியை இன்னொருவருக்குத் தந்துவிட்டு, நிர்வாகம் அல்லாத தலைவராக (Non Executive Chairman) அவர் பொறுப்பேற்கப்போகிறார். இது தொடர்பான இறுதி முடிவு வரும் 14-ம் தேதி அன்று நடக்கும் இயக்குநர்குழுவில் எடுக்கப்படவிருக்கிறது. செபியின் விதிமுறையை நடைமுறைப்படுத்த 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் மாற்றம் நடக்கவிருக்கிறது.

இனியாவது நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கட்டும்!

Real Estate
Real Estate

ரியல் எஸ்டேட்: குவியும் பி.இ முதலீடு!

டந்த 2019-ம் ஆண்டில் மிக அதிகமான பிரைவேட் ஈக்விட்டி (Private Equity) நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறது ரியல் எஸ்டேட்துறை. வர்த்தகரீதியிலான ரியல் எஸ்டேட்துறையில் ஏறக்குறைய 3.3 பில்லியன் டாலர் அளவுக்கு பி.இ முதலீடு வந்திருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் இதே துறையில் வந்த பி.இ முதலீடு 3.8 பில்லியன் டாலர். மும்பை, நேஷனல் கேப்பிட்டல் ரீஜியன் ஆகிய இடங்களைத் தேடித்தான் அதிகமான பிரைவேட் ஈக்விட்டி முதலீடு வந்திருக்கிறது. இந்த இரு இடங்களைத் தேடிவந்த பி.இ முதலீடு மட்டுமே 2.7 பில்லியன் டாலர். ஆனால், சென்னை ரியல் எஸ்டேட்டை நோக்கி வரும் பி.இ முதலீடு 2019-ம் ஆண்டில் 45% குறைந்திருக்கிறது.

சென்னை வளரும் நகரமாக இருந்தாலும் பி.இ முதலீடு வர மறுப்பது ஏன்?