நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை, இரண்டு ஆண்டுகளாக சிறார் வதை செய்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இவ்வளவு பெரிய விவகாரத்தில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் யாருக்காகவோ காத்திருந்துவிட்டு, பிறகு அவர் கட்சியில் நீக்கப்பட்ட பிறகு பொறுமையாக வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் இரட்டைக்கொலை உள்ளிட்ட சம்பவங்களால் காவல்துறையினர்மீது பல்வேறு அதிருப்திகள் நிலவும் சூழலில், இந்த விவகாரம் அந்தத்துறையின் மீதான நம்பிக்கையின்மையை மேலும் அதிகரித்துள்ளது.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஜூலை 16-ம் தேதி காணாமல் போனார். நாகர்கோவிலைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் தன் மகளைக் கடத்திச் சென்றதாக சிறுமியின் தந்தை கோட்டாறு காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி சுசீந்திரம் குளத்தூரில் பதுங்கியிருந்த வாலிபரையும் சிறுமியையும் ஜூலை 17-ம் தேதி மீட்டனர். இந்த வழக்கு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் போலீஸார் அந்த வாலிபரைக் கைது செய்ததுடன், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது தாயின் துணையுடன்தான் சிலர் தன்னை சிறார் வதை செய்ததாகச் சொல்லியிருக்கிறார்.

பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் போலீஸார் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளனர். சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழு விசாரணை நடத்தியபோது, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான நாஞ்சில் முருகேசன் (60), இடலாக்குடியைச் சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43), கோட்டாறு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகியோர் தன்னைச் சிறார் வதை செய்ததாகவும், அந்தக் கொடுமையிலிருந்து தப்பிக்கவே வாலிபரைக் காதலித்து வீட்டைவிட்டு ஓடிப்போனதாகவும் சிறுமி கதறியிருக்கிறார்.

இந்த விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டர் மூலம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. ஆனால், சாத்தான்குளம் பிரச்னை போன்று விஷயம் பூதாகரமாகிவிடக் கூடாது என்று சுமார் பத்து நாள்கள் இந்தத் தகவல்களை அமுக்கியது அரசு நிர்வாகம். கலெக்டர் தரப்பு தொடங்கி காவல்துறை வரை கமுக்கமாகவே இருந்தன. இதற்கிடையே விஷயம் லேசாக வெளியே கசியத் தொடங்கியதும், வேறு வழியில்லாமல் ஜூலை 27-ம் தேதி மாலையில் நாஞ்சில் முருகேசன் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகே திடீரென்று விழித்துக்கொண்டதுபோல காவல்துறையினர் நாஞ்சில் முருகேசன், பால், அசோகன், கார்த்திக் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர்மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாஞ்சில் முருகேசனைத் தவிர மற்ற நான்கு பேரும் ஜூலை 28-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், கடைக்குளம் பகுதியில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை ஜூலை 29-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட நாஞ்சில் முருகேசனுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுகர் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “காணாமல்போன சிறுமியை மீட்கும் விவகாரத்தில் நாஞ்சில் முருகேசன் அதிக ஆர்வம் காட்டினார். சிறுமியின் தாய் அவருக்குத் தெரிந்தவர் என்பதால் ஆர்வம் காட்டுகிறார் என நினைத்தோம். ஆனால், நாஞ்சில் முருகேசன் சிறார் வதை செய்த விவகாரம் பிறகுதான் தெரியவந்தது. 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு முன்னர் பரிசு வாங்குவதற்கு என்று நாஞ்சில் முருகேசனின் ஃபிளாட்டிலுள்ள ஒரு வீட்டில் சிறுமியை அவரின் தாய் அழைத்துச் சென்று விட்டுள்ளார். அன்று முதல் அந்தச் சிறுமியை சிறார் வதை செய்ய தொடங்கியிருக்கிறார் நாஞ்சில் முருகேசன். அதன் பிறகும் தொடர்ந்து நாஞ்சில் முருகேசன் டார்ச்சர் கொடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது குறித்த விசாரணை தொடர்கிறது” என்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், “முருகேசன் 2004-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் தொழிலைத் தொடங்கினார். நெல் விளையும் புத்தேரி வயல்வெளிகளை பிளாட் போட்டு விற்பனை செய்ததால், குறுகியகாலத்தில் செல்வந்தர் ஆகிவிட்டார். வசதி வந்ததும், கடந்த 2009-ம் ஆண்டு பா.ஜ.க-வில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். 2010-ம் ஆண்டு அ.தி.மு.க-வுக்குத் தாவினார். அங்கு பணத்தை வாரி இறைத்து 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஒழுகினசேரி யிலுள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தில் இவர் இரண்டு பெண்களுடன் தனிமையில் இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே மீடியாக்கள் எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டன. அந்தப் பெண்கள் ரயில் டிக்கெட்டுக்கு இ-க்யூ கொடுப்பதற்காக வந்தார்கள் எனச் சொல்லிச் சமாளித்தார் முருகேசன். 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட நாஞ்சில் முருகேசன் தோல்வியடைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வில் இணைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், தன் மனைவிக்கு வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமான முருகேசன், இப்போது சிறுமி விவகாரத்தில் சிக்கிவிட்டார்” என்றார்கள்.

தமிழக காவல்துறை தலைவரே... புகார் தரப்பட்ட மறுநாளான ஜூலை 17-ம் தேதியே அந்த சிறுமியும், அவளுடன் சென்ற இளைஞரும் போலீஸாரால் வளைக்கப்பட்டுள்ளனர். ஆனால், பத்து நாள்களாக இந்த விஷயத்தை மூடி வைத்திருந்து, ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ என்பதால் முதலமைச்சர் அலுவலகம் வரை பேசி முடித்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியான பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்திருக்கிறீர்கள். ஊரடங்கு நேரத்தில் அப்பாவுக்கு மருந்து வாங்கச் செல்வதைக்கூட கொலைக் குற்றம்போலக் கருதி ஒரு பக்கம் பாடாய்ப் படுத்துகிறீர்கள். அதேசமயம், பஞ்சமாபாதகத்தைச் செய்தவரைக்கூட ஆளுங்கட்சிக்காரர், பிற கட்சியில் செல்வாக்குள்ளவர், பணம் படைத்தவர் என்பதற்காக நெருங்கக்கூட பயப்படுகிறீர்கள். சாத்தான்குளம், தென்காசி என்று கறை மேல் கறை படிந்தும்கூட, லஞ்சத்துக்காகவும், பதவி உயர்வுகளுக்காகவும், பதவி மிடுக்குகளுக்காகவும் கேடுகெட்ட அரசியல்வாதிகளிடம் கைகட்டி, காக்கிச் சட்டையை அடகு வைப்பதை எப்போதுதான் நிறுத்தப்போகிறீர்கள்?!