Published:Updated:

"நான் இந்த நவீன உலகத்துக்கு ஏற்றவன் அல்ல!" - நாஞ்சில் சம்பத்!

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

பாரிஸிலிருந்து 'ஜூம்' ஆப் வழியாகப் பேசச்சொல்லி என்னை அழைக்கிறார்கள். எனக்கோ அதை எப்படி 'ஆன்' செய்யவேண்டும் என்றுகூடத் தெரியவில்லை

நாட்டு நடப்புகளை வைத்து நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளைக் கேட்டோம். பாஸா, ஃபெயிலான்னு நீங்களே சொல்லுங்க...

ரஜினி கடந்த ஐந்தாண்டுகளில் நடித்த படங்கள் எவை?

(நீண்ட நேரம் யோசித்தவர்... கடைசியில்) ''தெரியல... அவரை நம்பியிருக்கிற லட்சக்கணக்கான ரசிகர்களே ஒருவித மனக்குறையோடு நாள்களை நகர்த்தவேண்டிய நிலையில்தான், ரஜினிகாந்தின் சினிமாவும் அரசியலும் இருக்கிறது! அதனால், அவரின் படங்கள் எதையும் நான் பார்ப்பதும் இல்லை... அதுபற்றிய செய்திகளை நினைவில் வைத்துக்கொள்வதும் இல்லை!''

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக பிரபலங்கள் மூவரின் பெயர்கள்..?

''அமிதாப் பச்சன், ம்... அடுத்து இந்தியாவின் ஹெல்த் மினிஸ்டரா?'' என்று அவராகவே கேட்டுக்கொண்டார். பின்னர் ''ஆங்... அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன்'' என்றார். 'உலகத் தலைவர்களின் பெயர்தான் வேண்டும்' என்று நாம் கேள்வியைத் திரும்பவும் கேட்டோம். ''உலக அளவில், அண்ணா யுனிவர்சிட்டியைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் அமைச்சர் அன்பழகனுக்கு இருக்கிறது... அப்படியென்றால் அவர் உலகத் தலைவர் இல்லையா..?'' என்று மறுபடியும் நம்மையே திருப்பிக் கேட்டார். 'மிடியல...' என்று நாம் அடுத்த கேள்விக்குத் தாவினோம்.

கிரிக்கெட்டில், ரன்கள் எதுவும் அடிக்காமலேயே, பேட்டிங் டீமுக்கு 5 ரன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டா?

''கிரிக்கெட்டைப் பத்தி அனா, ஆவன்னாகூட எனக்குத் தெரியாது.''

இந்தியாவுக்காக இஸ்ரோ உருவாக்கியிருக்கும் 'ஜி.பி.எஸ்'-க்கான மாற்று மென்பொருளின் பெயர் என்ன?

''தெரியாது... அதென்ன எல்லா கேள்வியுமே எனக்கு சம்பந்தம் இல்லாத கேள்வியா கேட்குறீங்க?"

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

ஆண்ட்ராய்டு ஓ.எஸ்-க்கு எப்போதும் உணவின் பெயரையே சூட்டிவருகின்றனர். அதில் ஏதாவது மூன்று பெயர்கள்..?

''நான் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்த ஆரம்பிச்சே ஒரு வருடம்தான் ஆகுது. இந்த நவீன உலகத்துக்கு ஏற்றவன் அல்ல நாஞ்சில் சம்பத்! பாரிஸிலிருந்து 'ஜூம்' ஆப் வழியாகப் பேசச்சொல்லி என்னை அழைக்கிறார்கள். எனக்கோ அதை எப்படி 'ஆன்' செய்யவேண்டும் என்றுகூடத் தெரியவில்லை."

- இதே கேள்விகளை நடிகர் சதீஷ், துரைமுருகன், நடிகை கஸ்தூரி ஆகியோரிடமும் கேட்டோம். அவர்கள் அளித்த பதில்களை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2C43zSR > அண்டர்வேர் ஆள்கிட்ட ஆண்ட்ராய்டு கேள்வியா? https://bit.ly/2C43zSR

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு