Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

``அதிகாரிகள் இந்தச் செய்தியை எனது 80 வயது தாயார் அல்லது என் மனைவியிடம் தெரிவித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

நேஷனல் ஹாட் பிட்ஸ்

``அதிகாரிகள் இந்தச் செய்தியை எனது 80 வயது தாயார் அல்லது என் மனைவியிடம் தெரிவித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

உத்தரப்பிரதேச மாநிலம், புதான் மாவட்டத்தில், காணாமல்போன தன் தந்தை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களைப் பெற்ற 22 வயது இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளைஞரின் முன்னாள் மனைவியையே அவரின் தந்தை திருமணம் செய்துகொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த அதிர்ச்சி. தகவல் கிடைத்தவுடன், காவல்நிலையத்தில் புகாரளித்தார் அந்த இளைஞர். 2016-ம் ஆண்டு காதலித்து, திருமணம் செய்துகொண்ட ஆறே மாதங்களில், மனைவி அவரை விட்டுப் பிரிந்திருக்கிறார். இருவரும் அப்போது மைனர்கள் என்பதால், திருமணம் எங்கும் பதிவுசெய்யப்படவில்லை. இளைஞரைப் பிரிந்த மனைவி, பின்னர் 48 வயதான தன் மாமனாரையே மணந்திருக்கிறார். உ.பி போலீஸாரோ “அந்த இளைஞரின் திருமணத்துக்கு எந்தச் சான்றும் இல்லை. அந்தப் பெண் மறுமணம் செய்துகொண்ட பிறகு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தையொன்று இருக்கிறது. எனவே, நாங்கள் வழக்கு பதியவில்லை’’ என்கிறார்கள். #சில சமயம் தகவல்களைத் தெரிஞ்சுக்காம இருக்கிறதும் நல்லதுபோல!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 5-ம் தேதி கூடியது. ‘கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாள்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கடுமையாக விமர்சித்து, சட்டமன்றத்தில் தனது பேச்சைத் தொடங்கினார் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ். இதையடுத்து, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட, ‘அனைவரும் அமைதிகாக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார் சபாநாயகர். பிறகும், அமளியில் ஈடுபட்ட 12 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களைத் தீர்மானம் நிறைவேற்றி, குரல் வாக்கெடுப்பு மூலம் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்திருக்கிறார் சபாநாயகர். ``எதிர்க்கட்சியான பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் எனது இருக்கைக்கு முன்பு வந்து தகாத வார்த்தைகளைப் பேசினர். என்னைத் தாக்குவதற்குக்கூட சிலர் முயன்றனர்’’ என்றார் சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ். ``இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்’’ என்று பட்னாவிஸ் மறுக்க, ``இந்த தாக்கரே அரசு தாலிபன்கள்போலச் செயல்படுகிறது’’ என்றார் பா.ஜ.க எம்.எல்.ஏ ஆஷிஷ். #சைலன்ஸ்... இல்லைன்னா, சஸ்பெண்ட்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மகாராஷ்டிர மாநிலம், தானே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினார். சமீபத்தில் அவருக்கு மாநகராட்சி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. மறுமுனையில் பேசியவர், `சந்திரசேகரின் இறப்புச் சான்றிதழ் தயாராகிவிட்டது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என அவரிடமே தகவல் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்தார் அவர். “நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என அவர் பலமுறை சொல்லியும், “இல்லையில்லை... எங்கள் பதிவேட்டில் இறந்ததாகத்தான் இருக்கிறது” என்று அடித்துப் பேசியிருக்கிறார் அந்த மாநகராட்சி அதிகாரி. ஆவணங்களோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று, தான் உயிரோடு இருப்பதை சந்திரசேகர் நிரூபிக்க, அதிகாரிகள் தங்களது தவற்றை ஒப்புக்கொண்டனர். ``அதிகாரிகள் இந்தச் செய்தியை எனது 80 வயது தாயார் அல்லது என் மனைவியிடம் தெரிவித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் சந்திரசேகர். #உயிரோட இருக்கிறதை நிரூபிக்கவும் ஆதாரம் தேவைப்படுதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism