Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நேஷனல் ஹாட் பிட்ஸ்

பெண்களின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாட்டை உறுதிசெய்யும் வகையில் பெண்களின் சட்டபூர்வ திருமண வயது 18-லிருந்து 21-ஆக அதிகரிக்கப்படும்

2022-ம் ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் கோவாவில் பெண் வாக்காளர்களைக் கவர்வதில் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கோவாவில் தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசு, ‘கிருஹ ஆதார்’ திட்டம் மூலம் மாதம்தோறும் ஒன்றரை லட்சம் குடும்பங்களிலுள்ள பெண்களுக்கு 1,500 ரூபாய் வழங்கிவருகிறது. “ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்குவோம்” என்று அறிவித்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த நிலையில்தான், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், `கிருஹ லஷ்மி’ திட்டத்தின் மூலம் மூன்றரை லட்சம் குடும்பங்களிலுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்குவோம்” என அறிவித்திருக்கிறது மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ். “சாத்தியமில்லாததை வாக்குறுதியாகத் தருகிறது திரிணமுல்” என்று இந்த அறிவிப்பை விமர்சித்திருக்கிறார் காங்கிரஸின் ப.சிதம்பரம்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், கடந்த அக்டோபர் 3-ம் தேதியன்று நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், ‘கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர்மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும்’ என்று சிறப்பு விசாரணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதை மாவட்ட நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்ப ஆத்திரமடைந்தவர், ``இது என்ன முட்டாள்தனமான கேள்வி... பைத்தியமா நீ?’’ என்று கத்தியதுடன், மைக்கைப் பறித்த சம்பவம் பத்திரிகையாளர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, ``அமைச்சரவை யிலிருந்து அஜய் மிஸ்ரா நீக்கப்பட வேண்டும்’’ என்ற முழக்கம் நாடாளுமன்றத்தில் வலுப்பெற்றிருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

``பெண்களின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாட்டை உறுதிசெய்யும் வகையில் பெண்களின் சட்டபூர்வ திருமண வயது 18-லிருந்து 21-ஆக அதிகரிக்கப்படும்’’ என்று கடந்த சுதந்திர தின விழாவில் பேசினார் பிரதமர் மோடி. அதன்படி, பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்ய செயல்திட்டக்குழுவை அமைத்திருந்தது நிதி ஆயோக். அந்தக் குழுதான் தற்போது, பெண் களின் திருமண வயதை உயர்த்திப் பரிந்துரைத்திருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், விரைவில் இது சட்டமாக்கப்படும். பெண்களின் திருமண வயது மாற்றத்துக்கு, பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.