Published:Updated:

NH பிட்ஸ்

கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
News
கெஜ்ரிவால்

மொத்தமுள்ள 35 இடங்களில் 14 இடங்களைத் தனித்து நின்று கைப்பற்றியிருக் கிறது ஆம் ஆத்மி கட்சி.

NH பிட்ஸ்

`மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே...’ எனத் தொடங்கும் ‘கோஹினூர்’ ஹிந்தி திரைப்படத்தின் பாடல் மிகவும் பிரபலமானது. முகமது ரஃபியால் பாடப்பட்ட இந்தப் பாடலை, ‘சரிகம’ இசை நிறுவனம் ரீமிக்ஸ் செய்து, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டது. பாலிவுட்டின் முன்னணிப் பாடகர்களான கனிகா கபூர், அரிந்தம் சக்ரவர்த்தி ஆகியோர் பாட, நடிகை சன்னி லியோன் நடனம் ஆடியிருந்தார். ஆல்பம் வெளியான முதல்நாளே, இந்தப் பாடல் இந்துக் கடவுள்களான கிருஷ்ணா, ராதாவை இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உத்தரப்பிரதேசம், மதுராவைச் சேர்ந்த சாமியார்கள், பாடலை தடைசெய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்விட்டரிலும் #ArrestSunnyLeone என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில், மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “பாடலை நீக்க வேண்டும், சன்னி லியோன் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பஞ்சாப் - ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் பொது தலைநகரான, சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் முடிவுகள் டிசம்பர் 27-ம் தேதி மாலை வெளியாகின. மொத்தமுள்ள 35 இடங்களில் 14 இடங்களைத் தனித்து நின்று கைப்பற்றியிருக் கிறது ஆம் ஆத்மி கட்சி. ஏற்கெனவே மாநகராட்சியைத் தன்வசம் வைத்திருந்த பா.ஜ.க 12 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும், அகாலி தளம் ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியிருக்கின்றன. கடந்த முறை இங்கு மேயராக இருந்த பா.ஜ.க-வின் ரவிகாந்த் சர்மா, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்துள்ளார். கடந்த தேர்தலில், 20 இடங்களைக் கைப்பற்றியிருந்த பா.ஜ.க-வுக்கு இது கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், பா.ஜ.க vs காங்கிரஸ் என்றிருந்த வழக்கமான போட்டியை உடைத்து, களம் கண்ட முதல் தேர்தலிலேயே தனித்து முதலிடத்துக்கு வந்திருப்பதால் ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள், இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

NH பிட்ஸ்

இந்தியாவில் ஒமிக்ரானைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா, அஸ்ஸாம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன. இதுவரை மொத்தம் 17 மாநிலங்களில், 560-க்கும் மேற்பட்டவர்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தநிலையில், ஜனவரி 3-ம் தேதி முதல் ‘15 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான முன்பதிவை ஜனவரி 1-ம் தேதி முதல் கோவாக்சின் இணையதளத்தில் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.