Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

NH பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

NH பிட்ஸ்

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

அருணாச்சலப் பிரதேசம், அப்பர் சியாங் மாவட்டத்தில் இருக்கிறது சிடோ கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மிராம் தரோன் (17), ஜானி யாயிங் (27) இருவரும், சீன எல்லையை ஒட்டியுள்ள Tsangpo நதிக்கரை அருகே வேட்டையாடச் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த சீன ராணுவத்தினர் இருவரையும் பிடித்துச் செல்ல முற்பட்டனர். ஜானி தப்பிவிடவே... மிராம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் எம்.பி தபிர் கவோ, சீன ராணுவம் கடத்திச் சென்ற இளைஞரை மீட்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். 2020-ல் சீன ராணுவம், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களை இதேபோலக் கடத்திச் சென்று, ஒரு வாரம் கழித்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்ட வனத்துறையில் ரேஞ்சராகப் பணிபுரிபவர் சிந்து. மூன்று மாத கர்ப்பிணியான இவரை, பலசவாடே கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வைத்து ஒரு தம்பதியர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது. கர்ப்பிணி என்றும் பாராமல் சிந்துவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, தரையில் போட்டு உதைக்கிறார்கள் அந்தத் தம்பதியர். பலசவாடே கிராமத்தின் முன்னாள் தலைவரும், அவரின் மனைவியும்தான் சிந்துவைத் தாக்கினார்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. மேலும், ``அந்த முன்னாள் தலைவர் தற்போது உள்ளூர் வனத்துறை மேலாண்மை கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார். சிந்து, அவரது ஒப்புதல் பெறாமல் வனத்துறையில் பணிபுரிந்துவரும் ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்தவர், சிந்துவைத் தாக்கியிருக்கிறார்’’ என்று செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், வனத்துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, அந்தத் தம்பதியைக் காவல்துறை கைதுசெய்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களில் ஒன்றான கோவாவில், பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதையடுத்து முதற்கட்டமாக பா.ஜ.க 34 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில், கோவாவில் பா.ஜ.க-வை நிலைநிறுத்தியவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கரின் பெயர் இல்லை. பனாஜி தொகுதியில் உத்பல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயர் பட்டியலில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ``பா.ஜ.க `யூஸ் அண்ட் த்ரோ’ கொள்கையை மனோகர் பரிக்கரின் குடும்பத்திடமும் காட்டிவிட்டது. மனோகர் பரிக்கரை மிகவும் மதிக்கிறேன். ஆம் ஆத்மியில் இணைவதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் உத்பல் பரிக்கரை வரவேற்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க-வினரோ, `உத்பலுக்கு மீதமிருக்கும் ஆறு தொகுதிகளில், ஒரு தொகுதி ஒதுக்கப்படும்’ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism