Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

2020-ல், இஸ்லாமியக் குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் மதரஸாக்களை, பள்ளிக்கூடங்களாக மாற்ற முடிவுசெய்தது அஸ்ஸாமை ஆளும் பா.ஜ.க அரசு

நேஷனல் ஹாட் பிட்ஸ்

2020-ல், இஸ்லாமியக் குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் மதரஸாக்களை, பள்ளிக்கூடங்களாக மாற்ற முடிவுசெய்தது அஸ்ஸாமை ஆளும் பா.ஜ.க அரசு

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் சகோதரத்துவம்!

கர்நாடக மாநிலம், பெங்களூரிலுள்ள சாம்ராஜ்பேட் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான். அவரது பகுதியில் மே 22-ம் தேதி அன்று, ஈத் மிலான் பண்டிகையும், அம்பேத்கர் ஜெயந்தியும் ஒருசேரக் கொண்டாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அகமது கானுடன் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழா மேடையில், பட்டியலினத் தலைவருக்கு இனிப்பை ஊட்டிவிட்டார் அகமது கான். பதிலுக்கு அவரும் மேசையிலிருந்த இனிப்பை எடுத்து எம்.எல்.ஏ-வுக்கு ஊட்ட முயன்றார். அப்போது அந்தப் பட்டியலின தலைவரைத் தடுத்த அகமது கான், “உங்கள் வாயிலிருந்து இனிப்பை எடுத்து எனக்கு ஊட்டுங்கள்!” என்று கூறினார். அதன்படி, பட்டியலினத் தலைவர் செய்யவே, அதைச் சாப்பிட்ட அகமது கான், `பார்த்தீர்களா... இதுதான் சகோதரத்துவம்’ என்றார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ராணுவ வீரரின் காதலும் கைதும்!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலுள்ள ராணுவத் தளத்தில் பணியாற்றிவந்தவர் பிரதீப் குமார். இவர் கடந்த சில மாதங்களாக ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகிவந்தார். மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர்தான் தனது சொந்த ஊர் என்றும், தற்போது பெங்களூரிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருவதாகவும் கூறியிருக்கிறார் அந்தப் பெண். ஒரு கட்டத்தில் இருவரும் ஃபேஸ்புக் வழியாகவே காதலிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதையடுத்து, பிரதீப்பிடம் ராணுவ ரகசியங்கள் குறித்துக் கேட்டிருக்கிறார் அந்தப் பெண். `இதையெல்லாம் எதற்காகக் கேட்கிறாய்?’ என பிரதீப் கேட்க, `என் தோழிகளிடம் காண்பிக்கத்தான்’ என்றிருக்கிறார் அந்தப் பெண். பிரதீப்பும் முக்கியமான ராணுவ ரகசியக் கோப்புகளைப் புகைப்படம் எடுத்து அந்தப் பெண்ணுக்கு அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில், ராஜஸ்தான் சைபர் க்ரைம் போலீஸார் வேறொரு வழக்குக்காக ஃபேஸ்புக் கணக்குகளை ஆராய்ந்ததில், பாகிஸ்தானிலிருந்து ஒரு போலிக் கணக்கு சிக்கியிருக்கிறது. அப்போதுதான் பிரதீப் குமார் இத்தனை நாள்கள் பேசிக்கொண்டிருந்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-ன் பெண் உளவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து அவரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

முதலமைச்சரின் சர்ச்சை பேச்சு!

2020-ல், இஸ்லாமியக் குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் மதரஸாக்களை, பள்ளிக்கூடங்களாக மாற்ற முடிவுசெய்தது அஸ்ஸாமை ஆளும் பா.ஜ.க அரசு. இந்த முடிவை எதிர்த்து, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், தீர்ப்போ அரசுக்குச் சாதகமாக வந்தது. இதையடுத்து, அஸ்ஸாமிலுள்ள அனைத்து மதரஸாக்களையும் பள்ளிக்கூடங்களாக மாற்றிவருகிறது அரசு. இந்த நிலையில், குவாஹத்தியில் நடந்த கல்வி மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த படிப்புகளுக்கு இடம் கிடையாது. இனி ‘மதரஸா’ என்ற வார்த்தைக்கு முடிவுகட்ட வேண்டும். இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களுமே ஒருகாலத்தில் இந்துக்கள்தான். மதரஸாவில் பயின்ற ஒரு இஸ்லாமியக் குழந்தை திறமையாக இருந்தால், அதற்கு அந்தக் குழந்தையின் இந்துப் பூர்வீகமே காரணம்’’ என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism