Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

 ஆக்ஸிஜன் சிலிண்டர்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்ஸிஜன் சிலிண்டர்

மேற்கு வங்கத்தில் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், பிரமாண்டமான தேர்தல் பரப்புரைகளால்தான் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மேற்கு வங்கத்தில் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், பிரமாண்டமான தேர்தல் பரப்புரைகளால்தான் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

Published:Updated:
 ஆக்ஸிஜன் சிலிண்டர்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்ஸிஜன் சிலிண்டர்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

கேரள மாநிலம், பெருங்குளம் பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவர், தன் புதிய ஷூவைக் கடித்ததற்காகத் தனது வளர்ப்பு நாயை ஸ்கூட்டரில் கட்டி 3 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த, அந்தப் பகுதியைச் சேர்ந்த உம்மர் வளப்பன் என்பவர் சேவியரின் ஸ்கூட்டரைத் தடுத்து நிறுத்தி, வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போதும் சேவியர் கேட்காமல் கிளம்பவே... நாயை இழுத்துச் சென்றதை வீடியோ எடுத்த உம்மர், அதைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சேவியரைக் கைதுசெய்த காவல்துறையினர், சிகிச்சைக்காக நாயை கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். #தட்டிக்கேள்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துவருகிறது. இதனால், ‘கால தாமதமின்றி சரக்கு ரயில்களில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் சிலிண்டர்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்’ என மத்திய ரயில்வேதுறையிடம் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கைவைத்தன. மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் டேங்கர் ரயில்கள் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது ரயில்வே அமைச்சகம். இதையடுத்து மும்பை கலாம்போலி, பொய்சார் ரயில் நிலையங்களிலிருந்து காலி டேங்கர் ரயில்கள், ஆக்ஸிஜனை ஏற்றிவருவதற்காக விசாகப்பட்டினம், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, பொகாரோ உள்ளிட்ட இடங்களுக்கு விரைகின்றன. #விரையட்டும் சேவை!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மேற்கு வங்கத்தில் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், பிரமாண்டமான தேர்தல் பரப்புரைகளால்தான் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ‘தலைநகரமான கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி இனி பரப்புரையில் ஈடுபட மாட்டார். இறுதியாக ஏப்ரல் 26-ம் தேதி மட்டும் சம்பிரதாயமாகக் கூட்டத்தில் பங்கேற்பார். மேலும், தன்னுடைய அனைத்து மாவட்ட தேர்தல் பரப்புரைகளையும் 30 நிமிடங்கள் குறைத்திருக்கிறார்’ என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக ராகுல் காந்தியும், ‘மேற்கு வங்கத்தில் இனித் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப்போவதில்லை. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து’ என அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #மக்கள்நலனே முக்கியம்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் பெயரில், எட்டு போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகைத் தரப்பிலிருந்து காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில கணக்குகளிலிருந்து தற்போதும் பதிவுகள் இடப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆளுநரின் மாண்பு சீர்குலைவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேகாலயாவின் சைபர் பிரிவு, போலி கணக்குகளைக் கண்டறியும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. #ஆளுநருக்கு வந்த சோதனை!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

டெல்லியின் டரியங்கஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அந்தப் பகுதியில் சென்ற காரில் பயணித்த கணவன், மனைவி இருவரும் முகக்கவசம் அணியாததை அடுத்து, காரை மறித்தனர். முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்திய போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்மணி அப்ஹா குப்தா, ‘‘காருக்குள் இருக்கும்போது நான் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்... நான் என் கணவருக்கு முத்தம் கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது... என் கணவருக்கு நான் முத்தம் கொடுப்பதை நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களா?’’ என்று ஆரம்பித்து சகட்டுமேனிக்குப் பேசியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக அவரின் கணவரும் இறங்கி வாதம் செய்ய, கணவர் பங்கஜ் குப்தாவையும், அப்ஹா குப்தாவையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், வழக்கு பதிவு செய்து பங்கஜ் குப்தாவைக் கைதுசெய்துள்ளார்கள். #பேச்சு பேச்சா இருக்கணும்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில் டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் தடுப்புகளைக் காவல்துறை அகற்றியுள்ளது. மேலும், போராட்டம் நடக்கும் பகுதியிலுள்ள காசிப்பூர் எல்லையைத் திறக்கும் நடவடிக்கையிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதால் எல்லைகளைத் திறக்க வேண்டும் என்று விவசாய சங்க நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை ஏற்று காவல்துறை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. #முடியட்டும் போராட்டம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism