Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

NH பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
NH பிட்ஸ்

மிரட்டல்கள் காரணமாக அதார் பூனாவாலா இந்தியாவைவிட்டு வெளியே சென்றுவிட்டால், நமது நிலைமை கேப்டன் இல்லாமல் புயலில் தத்தளிக்கும் கப்பல்போல ஆகிவிடும்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மிரட்டல்கள் காரணமாக அதார் பூனாவாலா இந்தியாவைவிட்டு வெளியே சென்றுவிட்டால், நமது நிலைமை கேப்டன் இல்லாமல் புயலில் தத்தளிக்கும் கப்பல்போல ஆகிவிடும்

Published:Updated:
NH பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
NH பிட்ஸ்

கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா, தனக்குத் தடுப்பூசி விநியோகம் குறித்துப் பல்வேறு குழுக்களிடமிருந்து மிரட்டல்கள் வருவதாகவும், மத்திய அரசு தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ஏப்ரல் 16-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து அவருக்கு `ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு. இந்தநிலையில் மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த நபர்களிடமிருந்து தடுப்பூசி கேட்டு வரும் மிரட்டல்கள் நிற்கவே இல்லை என்று கூறியிருக்கிறார் பூனாவாலாவின் வழக்கறிஞர். இதனால் பூனாவாலாவுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் `இஸட் ப்ளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், ‘‘மிரட்டல்கள் காரணமாக அதார் பூனாவாலா இந்தியாவைவிட்டு வெளியே சென்றுவிட்டால், நமது நிலைமை கேப்டன் இல்லாமல் புயலில் தத்தளிக்கும் கப்பல்போல ஆகிவிடும்’’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. #மருத்துவத்துக்கே மிரட்டலா?

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கொரோனா பாதிப்பால் மே 6-ம் தேதியன்று உயிரிழந்தார். தனது 82-வது வயதில் காலமான அஜித் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மன்மோகன் சிங் அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த இவர், வாஜ்பாய், நரசிம்ம ராவ், வி.பி.சிங் அமைச்சரவையிலும் பணியாற்றியிருக்கிறார். முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் மகனான அஜித் சிங், அமெரிக்காவில் கம்யூட்டர் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். தந்தை நோயுற்ற செய்தி அறிந்ததும், தனது இன்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பி, கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அஜித் சிங்குக்கு இருக்கும் செல்வாக்கு வேறெந்த அரசியல் தலைவருக்கும் இல்லை. விவசாயிகளின் பிரதிநிதியாகக் கருதப்படும் அஜித் சிங், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கினார். உ.பி - டெல்லி எல்லையான பாக்பத் (Bagpat) பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில்தான் கடைசியாக உரையாற்றினார் அஜித் சிங். #அஞ்சலிகள்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால் மம்தா, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதனால் விரக்தியடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், மம்தா ஆட்சி அமைத்த விரக்தியிலும் பா.ஜ.க தொண்டர்களும் வன்முறையில் இறங்க... ரணகளமானது மேற்கு வங்கம். வன்முறைச் சம்பவங்களில் இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 14 பேர் உயிரிழந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. 36 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த வன்முறைகளுக்கு திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்களே முழுக் காரணம் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். பதிலுக்கு திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன், ‘‘தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத வெறுப்பில் பா.ஜ.க-வினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார். #நிலமெங்கும் ரத்தம்.