Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ரஷ்ய சாலட்
பிரீமியம் ஸ்டோரி
ரஷ்ய சாலட்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒருவர் மொட்டைமாடியிலிருந்து நாயைத் தூக்கி வீசி சித்ரவதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒருவர் மொட்டைமாடியிலிருந்து நாயைத் தூக்கி வீசி சித்ரவதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

Published:Updated:
ரஷ்ய சாலட்
பிரீமியம் ஸ்டோரி
ரஷ்ய சாலட்

ரஷ்ய சாலட்டுக்குத் தடை! கேரளத்தில் எழுந்த எதிர்ப்பு...

கேரள மாநிலம், கொச்சியில் செயல்பட்டுவரும் ‘காஷி ஆர்ட் கபே அண்ட் கேலரி’ என்கிற உணவு விடுதியில், வெளிநாட்டு உணவு வகைகள் மிகவும் பிரபலம். அவற்றில், ரஷ்யாவில் புகழ்பெற்ற சாலட் வகை உணவும் ஒன்று. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்ய சாலட் உணவை மெனுவிலிருந்து நீக்கியிருப்பதாக உணவகத்துக்கு வெளியே தகவல் பலகையில் எழுதிவைத்திருக்கிறது விடுதி நிர்வாகம். “இதை விளம்பரத்துக்காகச் செய்யவில்லை. ‘போர் வேண்டாம்’ என்ற செய்தியைத் தெரிவிக்க விரும்பினோம்... இது ரஷ்யர்களுக்கு எதிரானதல்ல; போருக்கு எதிரானது” என்று அந்த உணவகத்தின் உரிமையாளர் எட்கர் பின்டோ கூறியிருக்கிறார்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

தெருநாயைக் கொன்ற காவலர்!

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒருவர் மொட்டைமாடியிலிருந்து நாயைத் தூக்கி வீசி சித்ரவதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இப்போது அதைவிடக் கொடூரமாக டெல்லியைச் சேர்ந்த காவலர் வினோத் குமார் என்பவர் தெருநாய் ஒன்றை அடித்தே கொன்றிருக்கிறார். டெல்லி புறநகரான நொய்டாவில் வசிக்கும் அந்தக் காவலரும், அவரின் குடும்பத்தினரும் சாலையில் செல்லும்போது, அந்தத் தெருநாய் தினமும் அவர்களைப் பார்த்து குரைப்பது வழக்கம். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த காவலர், வீட்டிலிருந்த பேஸ்பால் மட்டையை எடுத்துவந்து அந்தத் தெருநாயை அடித்தே கொன்றுவிட்டார். இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், இது பற்றி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே... வினோத்குமாரைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை!

நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

மகளைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை... ஆணவக்கொலையால் அலறும் பீகார்!

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவ்ராம். இவர் தன் மகள் கிரண்குமாரியை நாடி சர்மா என்பவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தார். ஆனால், கிரண்குமாரி வேறொருவரைக் காதலித்ததால், திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த தேவ்ராம் தன் இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து மகளை வீட்டில் கட்டிவைத்து, கொடூரமாகக் கழுத்தை அறுத்திருக்கிறார். இதைத் தடுக்க முயன்ற தன் மனைவியையும் கடுமையாகத் தாக்கினார். இதில் கிரண் குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க... தேவ்ராம் உட்பட கொலையாளிகள் மூவரும் தப்பியோடிவிட்டனர். தந்தையின் சாதிவெறியால்தான் இப்படியோர் ஆணவக்கொலை நடந்திருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் பீகாரின் சமூகச் செயற்பாட்டாளர்கள்!