Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பஞ்சாப்
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சாப்

மொத்தமிருக்கும் 403 எம்.எல்.ஏ-க்களில் 205 (51%) பேர், குற்றப் பின்னணி கொண்டவர்கள்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மொத்தமிருக்கும் 403 எம்.எல்.ஏ-க்களில் 205 (51%) பேர், குற்றப் பின்னணி கொண்டவர்கள்

Published:Updated:
பஞ்சாப்
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சாப்

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தான் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் தோல்வியைத் தழுவினார். அதில் பதார் தொகுதியில் சரண்ஜித் சிங் சன்னியை, 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ஆம் ஆத்மி வேட்பாளர் லாப் சிங் உகோக். இவர் மொபைல் போன் ரிப்பேர் செய்யும் சிறிய கடை ஒன்றை நடத்திவருகிறார். லாப் சிங்கின் தந்தை தர்ஷன் சிங் ஒரு விவசாயக்கூலி. தாயார் பல்தேவ் கௌர், அரசுப் பள்ளியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிகிறார். ``மகனின் வெற்றி மகிழ்ச்சி தருகிறது. அவர் நல்ல பதவியில் இருந்தாலும், எனது தேவைக்கான பணத்தை நானே உழைத்துச் சம்பாதிப்பேன். தூய்மைப் பணியாளர் என்பதால், ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் என் வாழ்வின் ஓர் அங்கம். ஒரு மாநிலத்தின் முதல்வரையே எதிர்த்து போட்டியிட்டபோதும், என் மகன் வெற்றிபெற்றுவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு முன்னரே இருந்தது’’ என்று பேட்டியளித்திருக்கிறார் பல்தேவ் கௌர். இதையடுத்து, பஞ்சாப் மட்டுமின்றி இந்தியா முழுவதும் லாப் சிங்கின் குடும்பம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், உ.பி சட்டமன்றத்துக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரட்டிக் ரிஃபார்ம்ஸ் (ADR) அமைப்பு. அதில், மொத்தமிருக்கும் 403 எம்.எல்.ஏ-க்களில் 205 (51%) பேர், குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும், அவர்களில் 158 (39%) பேர்மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் இருக்கின்றன என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வில் 111 பேரும், சமாஜ்வாடியில் 71 பேரும், ராஷ்டிரிய லோக் தளத்தில் ஏழு பேரும் கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக ஏ.டி.ஆர் அறிக்கை சொல்கிறது. மேலும், புதிய எம்.எல்.ஏ-க்களில், 366 (91%) பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஆந்திர மாநிலம், திருப்பதியிலுள்ள வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான ராஜலெட்சுமி. தனியார் கல்லூரி விரிவுரையாளரான இவர், 5-ம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஷ்யாம் கிஷோரோடு வசிந்துவந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த ராஜலெட்சுமி, மார்ச் 8-ம் தேதி இரவு இறந்துவிட்டார். தாய் உயிரிழந்தது தெரியாமலேயே நான்கு நாள்களாக, ராஜலெட்சுமி தூங்குவதாக நினைத்து அவரை எழுப்பாமலேயே இருந்திருக்கிறான் சிறுவன். முதல் மூன்று நாள்கள் வீட்டில் இருந்த தின்பண்டங்களைச் சாப்பிட்டபடி தினமும் பள்ளிக்கும் சென்றுவந்திருக்கிறான். நான்காவது நாள் காலையில், ஷ்யாமின் மாமா துர்காபிரசாத் தொலைபேசியில் அழைத்து, ராஜலெட்சுமியின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான், ``அம்மா நாலு நாளா தூங்குறாங்க” என்று சிறுவன் சொல்லவே... திடுக்கிட்ட துர்காபிரசாத், நேரில் வந்து பார்த்தபோதுதான் ராஜலெட்சுமி உயிரிழந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. இது குறித்து காவல்துறைக்குத் தகவல் சொல்லப்பட, மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism