Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஹர்பஜன் சிங்
பிரீமியம் ஸ்டோரி
ஹர்பஜன் சிங்

நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமிருக்கும் 117 தொகுதிகளில், 92 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது ஆம் ஆத்மி.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமிருக்கும் 117 தொகுதிகளில், 92 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது ஆம் ஆத்மி.

Published:Updated:
ஹர்பஜன் சிங்
பிரீமியம் ஸ்டோரி
ஹர்பஜன் சிங்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

உத்தரகாண்ட்டின் பரோலா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா, 10 கி.மீட்டர் தொலைவிலுள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்க்கிறார். வேலை முடிந்து இரவு அவர் வீடு திரும்பும்போது 10 கி.மீ தூரத்தை ஓடியே கடக்கிறார். இதைப் பல முறை கவனித்த பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி கடந்த வாரம் ஒரு நாள், ஓடிக்கொண்டிருந்த பிரதீப்புக்கு அருகே தனது காரை ஓட்டிக்கொண்டே, ``உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்’’ என்று கேட்டார். அதற்கு, ``இல்லை. நான் ஓடியே வீட்டுக்குப் போய்விடுவேன்’’ என்று பதிலளித்தார் பிரதீப். தொடர்ந்து காரை ஓட்டிக்கொண்டே பிரதீப்பின் பின்னணி பற்றி அவரிடம் கேட்டிருக்கிறார்... அப்போது, ``ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே எனது லட்சியம். காலையில் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் சமைக்க வேண்டும் என்பதால், உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை. அதனால்தான், இரவில் ஓடியே வீட்டுக்குச் செல்கிறேன். என் அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். நான் என் சகோதரருடன் வசித்துவருகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் பிரதீப். தொடர்ந்து இயக்குநர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட... அதை 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துவருவதால் உலகம் முழுவதும் வைரலாகிவருகிறார் பிரதீப்!

ஆந்திர மாநிலம், அட்டவாரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த உதய்கிரண் என்ற 8 வயது சிறுவன், கடந்த மார்ச் 12-ம் தேதி, மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தான். பிரேத பரிசோதனையில், சிறுவன் கொலை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறுவனின் உறவினர்களிடம் விசாரணை செய்த போலீஸாருக்கு, இரண்டு பேர்மீது சந்தேகம் எழுந்தது. இருவரையும் தனித்தனியே விசாரித்தபோதுதான் அந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. ``சிறுவனின் உறவினர்களான சகாதேவன், ராஜேஸ்வரி இருவரும் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் நெருக்கமாக இருந்ததைப் பார்த்துவிட்டான் சிறுவன். இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், சிறுவனின் பிறப்புறுப்பில் சரமாரியாகத் தாக்கியதோடு, கழுத்தை நெரித்துக் கொலையும் செய்திருக்கிறார்கள். பிறகு நள்ளிரவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் மரத்தில் சிறுவனின் உடலைத் தொங்கவிட்டிருக்கிறார்கள்’’ என்றார்கள் இந்த வழக்கை விசாரித்த போலீஸார். கொலையாளிகள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமிருக்கும் 117 தொகுதிகளில், 92 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது ஆம் ஆத்மி. தொடர்ந்து, அந்த மாநிலத்தில் ஐந்து மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் நிறைவடையவிருப்பதால், மார்ச் 31-ம் தேதி அந்தப் பதவிகளுக்கு போட்டியிட பஞ்சாப் மாநிலத்திலிருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி ஜல் போர்டு துணைத் தலைவர் ராகவ் சத்தா, டெல்லி ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக், லல்வி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அசோக் மிட்டல், லூதியானவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் அரோரா ஆகிய ஐந்து பேரை வேட்பாளராக அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி. எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை பலத்தைவைத்து நடைபெறும் தேர்தல் என்பதால் மாநிலங்களவையில் மூன்றாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் பலம், எட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism