Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

மரத்திலிருந்து ரத்தம் வடியவே, அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் கல் விழுந்த இடத்தில் துர்கா தேவி கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மரத்திலிருந்து ரத்தம் வடியவே, அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் கல் விழுந்த இடத்தில் துர்கா தேவி கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள்

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்
Varun N
நேஷனல் ஹாட் பிட்ஸ்

மார்ச் 27 அன்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது சொந்த கிராமமான பக்தியார்பூரில் விடுதலைப் போராட்ட வீரர் ஷீல்பத்ரா யாஜியின் சிலையைத் திறந்துவைத்தார். அப்போது, இளைஞர் ஒருவர் நிதிஷ் குமாரின் முதுகில் ஓங்கி அடித்தார்... அதிர்ச்சியடைந்த நிதிஷ் குமார் திரும்பிப் பார்க்க, மீண்டும் அவரைத் தாக்கக் கை ஓங்கினார் அந்த இளைஞர். சுதாரித்துக்கொண்ட முதல்வரின் பாதுகாவலர்கள், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ``நமது எதிர்ப்பை ஜனநாயக முறையில்தான் காட்ட வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். இது குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில், முதல்வரைத் தாக்கிய இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. முதல்வர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக அதிகாரிகள்மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார் பீகார் மாநில டி.ஜி.பி.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

முன்னொரு காலத்தில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்திலுள்ள கொட்டன்குளங்கரா பகுதியில், சிறுவர்கள் சிலர் பழங்கள் பறிப்பதற்காகக் கல்லை மரம் ஒன்றின் மீது வீசியிருக்கின்றனர். மரத்திலிருந்து ரத்தம் வடியவே, அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் கல் விழுந்த இடத்தில் துர்கா தேவி கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கோயிலில் ஆண்டுதோறும் `சமய விளக்கு’ என்ற பெயரில் திருவிழா நடைபெறும். கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத இந்தத் திருவிழா, சமீபத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் கடைசி நாளில், ஆண்கள் பலரும் பெண்கள்போல உடையணிந்து, மேக்கப் போட்டு நாள் முழுவதும் அந்தக் கோயிலில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இப்படிப் பிரார்த்தனை செய்வதால் நல்ல வேலைவாய்ப்புகளும், வசதிகளும் வந்து சேரும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

உக்ரைனைச் சேர்ந்த அன்னா ஹோரோடெட்ஸ்கா (Anna Horodetska) என்ற ஐடி ஊழியர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியும் அனுப் பாசின் என்பவரை மணம் முடிக்கவிருக்கிறார். இவர்கள் இருவரும் 2020-ல் கொரோனா ஊரடங்குக்கு முன்பாக இந்தியாவில் சந்தித்திருக்கிறார்கள். ஒரு பயணத்தின்போது ஏற்பட்ட இவர்களின் நட்பு, பின்னர் காதலாக மாறியிருக்கிறது. கொரோனா ஊரடங்கின்போது இந்தியாவில் மாட்டிக்கொண்ட அன்னா, அனுப்பின் வீட்டில் தங்கி, ஊரடங்கு முடிந்ததும் உக்ரைனுக்குத் திரும்பியிருக்கிறார். உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியபோது, உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்த அன்னா, ரயில்வே சுரங்கங்களில் பதுங்கியிருந்திருக்கிறார். பெரும்பாடுபட்டு எல்லையைக் கடந்து போலந்து நாட்டுக்குச் சென்ற அன்னா, கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தார். சீக்கிரமே இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இன்ஸ்டகிராமில் அறிவித்திருக்கிறார்கள். நாடு கடந்த இவர்களின் காதல் கதை, இளைஞர்கள் மத்தியில் ஹிட் அடித்திருக்கிறது!