Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

மார்ச் 30-ம் தேதி அன்று, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜனில் இயங்கும் காரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மார்ச் 30-ம் தேதி அன்று, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜனில் இயங்கும் காரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

டெல்லி சட்டமன்றக் கூட்டத்தொடரில் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க-வினர் கோரிக்கைவைத்தனர். இதற்கு பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``இந்தப் படம் அனைவரிடமும் சென்று சேர வேண்டுமென்றால், யூடியூப்பில் வெளியிடுங்கள். காஷ்மீர் பண்டிட்டுகளின் பெயரைச் சொல்லி சிலர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்’’ என்று விமர்சித்திருந்தார். இதையடுத்து, நூற்றுக்கணக்கான பா.ஜ.க-வினர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் காவல் தடுப்புகளில் ஏறிக் குதித்து கெஜ்ரிவால் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவரது வீட்டுக் கதவின்மீது காவிச் சாயத்தை ஊற்றினர் பா.ஜ.க-வினர். வீட்டைச் சுற்றியிருந்த சிசிடிவி கேமராக்களையும் நொறுக்கினர். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ``ஆம் ஆத்மியை தேர்தல்களில் பா.ஜ.க-வால் வெல்ல முடியவில்லை. அதனால், அரவிந்த் கெஜ்ரிவாலை, கொலை செய்ய நினைக்கிறது. இதற்காகவே பா.ஜ.க-வைச் சேர்ந்த ரெளடிகள் கெஜ்ரிவால் வீட்டுக்குள் நுழைய முயன்றிருக்கிறார்கள்’’ என்றிருக்கிறார்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மார்ச் 30-ம் தேதி அன்று, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜனில் இயங்கும் காரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் ஒருவர் பயன்படுத்துவது இதுவே முதன்முறை. `டொயோட்டா மிராய்’ என்ற ஹைட்ரஜன் காரில் வந்திறங்கியவர் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம், ``ஹைட்ரஜன் கார்கள்தான் இனி இந்தியாவின் எதிர்காலம். கிரீன் ஹைட்ரஜனை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு ஆகவேண்டிய வழிமுறைகளை இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது’’ என்றார். இந்தியாவில் இந்த ரக கார், இன்றைய தேதியில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இந்த ரக காரில் ஒரு முறை ஹைட்ரஜன் நிரப்பினால், 650 கி.மீட்டர் வரை பயணிக்க முடியுமாம்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

இந்தியாவில், மார்ச் 22-ம் தேதி முதல் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாபா ராம்தேவிடம் செய்தியாளர் ஒருவர், ``பெட்ரோல் விலையை ரூ.40-க்கும், காஸ் விலையை ரூ.300-க்கும் குறைப்பவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்களே?’’ என்று கேட்டார். அதற்கு ராம்தேவ், ``ஆம். நான்தான் சொன்னேன். அதற்கென்ன... உன்னால் என்ன செய்ய முடியும்? இது மாதிரியான கேள்விகளைக் கேட்காதே. நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம், நான் பதில் சொல்ல வேண்டும் என்று ஒப்பந்தம் எதுவும் இருக்கிறதா?’’ என்றார் கோபமாக. மீண்டும் அதே கேள்வியைச் செய்தியாளர் கேட்க, கடுப்பான ராம்தேவ், ``வாயை மூடு. இது நல்லதற்கு அல்ல. நீ நல்ல பெற்றோருக்குத்தான் பிறந்திருப்பாய் என நினைக்கிறேன்’’ என்றதும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். தொடர்ந்து பேசிய அவர், ``எரிபொருள் விலை குறைந்தால் வரி கிடைக்காது என அரசு சொல்கிறது. வரி கிடைக்காவிட்டால் நாட்டை எப்படி வழிநடத்துவது... சாலைகள் எப்படிப் போடுவது... அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் எப்படிக் கொடுப்பது... விலைவாசி குறைய வேண்டுமென்றால், மக்கள் கடுமையாக உழைக்க வேண்டுமல்லவா? நான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உழைக்கிறேன்’’ என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.