Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

போரிஸ் ஜான்சன்
பிரீமியம் ஸ்டோரி
போரிஸ் ஜான்சன்

ஏப்ரல் 20 அன்று நள்ளிரவில், குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ-வும், பட்டியல் சமூகச் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானியை குஜராத்தில் வைத்து கைதுசெய்திருக்கிறது அஸ்ஸாம் காவல்துறை

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஏப்ரல் 20 அன்று நள்ளிரவில், குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ-வும், பட்டியல் சமூகச் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானியை குஜராத்தில் வைத்து கைதுசெய்திருக்கிறது அஸ்ஸாம் காவல்துறை

Published:Updated:
போரிஸ் ஜான்சன்
பிரீமியம் ஸ்டோரி
போரிஸ் ஜான்சன்

கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

கர்நாடக மாநிலம், பவகடா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடரமணப்பா, அவரது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறுவதற்காக வந்தவரை வழிமறித்த இளைஞர் ஒருவர், ``எங்கள் கிராமத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன... தக்க நடவடிக்கை எடுங்கள்’’ என்றார். திடீரென்று ஆத்திரமடைந்த வெங்கடரமணப்பா அந்த இளைஞரைக் கன்னத்தில் அறைந்துவிட்டார். எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது, ``நீங்கள்தானே எங்கள் தொகுதி எம்.எல்.ஏ... குறைகளைச் சொன்னால் அடிப்பீர்களா?’’ என்று கேள்வியெழுப்பினார் அந்த இளைஞர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, வெங்கடரமணப்பாவுக்கு எதிராகப் பலரும் கொந்தளித்துவருகிறார்கள். கர்நாடக பா.ஜ.க-வும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

சபர்மதி ஆசிரமத்தில் இங்கிலாந்து பிரதமர்!

ஏப்ரல் 21 அன்று, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள்கள் பயணமாக இந்தியா வந்திருந்தார். தனி விமானம் மூலம் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்த போரிஸ் ஜான்சனை, குஜராத் முதல்வர் பூபேந்திர பாகல் நேரில் சென்று வரவேற்றார். பின்னர், அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று, அங்குள்ள ராட்டையில் நூல் நூற்றுப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட ஜான்சன், ``அசாதாரணமான மனிதரின் ஆசிரமத்துக்கு வந்தது பெரும் பாக்கியம். உலகத்தைச் சிறப்பாக மாற்றுவதற்கு அவர் எவ்வாறு உண்மை, அகிம்சை ஆகிய எளிய கொள்கைகளைக்கொண்டு அணி திரட்டினார் என்பதைப் புரிந்துகொள்வதும் ஒரு மகத்தான பாக்கியம்’’ என்று அங்குள்ள பதிவேட்டில் எழுதிக் கையெழுத்திட்டார்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

கைதான ஜிக்னேஷ் மேவானி!

ஏப்ரல் 20 அன்று நள்ளிரவில், குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ-வும், பட்டியல் சமூகச் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானியை குஜராத்தில் வைத்து கைதுசெய்திருக்கிறது அஸ்ஸாம் காவல்துறை. மோடி குறித்து தவறாக ட்வீட் செய்ததாக அஸ்ஸாம் பா.ஜ.க தலைவர் ஒருவர் கொடுத்த புகாரில் கைதுசெய்யப்பட்டு, அஸ்ஸாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் மேவானி. ஏப்ரல் 18-ம் தேதி மேவானி செய்த ட்வீட்டை, ட்விட்டர் நிறுவனமே முடக்கிவிட்டது. அதேசமயம், மேவானி தரப்பிலோ ‘அந்த ட்வீட் நாதுராம் கோட்சே தொடர்பானது’ என்று சொல்லிவருகிறார்கள். மேலும், ``என்ன வழக்கு, ஏன் கைது என்று எதுவும் சொல்லாமலேயே கூட்டிச் சென்றுவிட்டனர். எஃப்.ஐ.ஆரையும் காண்பிக்கவில்லை’’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``ஜனநாயகமற்ற முறையில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஜிக்னேஷ் மேவானியைக் கைதுசெய்திருக்கிறது அஸ்ஸாம் காவல்துறை. இது அவரைத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்கும் செயல்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism