Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

காஷ்மீரின் ஜம்மு பகுதியிலுள்ள இரண்டு முக்கிய இடங்களான ஷேக் நகர், அம்பாலா சௌக் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவிருக்கின்றன.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

காஷ்மீரின் ஜம்மு பகுதியிலுள்ள இரண்டு முக்கிய இடங்களான ஷேக் நகர், அம்பாலா சௌக் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவிருக்கின்றன.

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

இடிக்கப்படும் இஸ்லாமியர்களின் வீடுகள்!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்த பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரைக் கைதுசெய்யக் கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜூன் 10 அன்று, இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள், சில இடங்களில் கலவரத்தில் முடிந்தன. உ.பி-யிலுள்ள பிரக்யாராஜில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, 91 பேர்மீது வழக்கு பதிந்தது காவல்துறை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜாவித் முகமது என்பவருக்குச் சொந்தமான பிரக்யாராஜிலுள்ள வீடு, ஜூன் 12-ம் தேதி அன்று இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லி ஜாவித்தின் வீடு இடிக்கப் பட்டிருக்கிறது. ஜாவித்தும் அவரின் மகள் அஃப்ரீன் பாத்திமாவும் சிஏஏ மற்றும் சுல்லி டீல்ஸ் ‘ஆப்’புக்கு எதிரானப் பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருக்கிறார்கள். `அரசியல் பழிவாங்கல் காரணமாகத்தான் ஜாவித்தின் வீடு இடிக்கப்பட்டிருக்கிறது’ என எதிர்க்கட்சிகள் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராகக் குரலெழுப்பியிருக்கின்றன. டெல்லி ஜே.என்.யூ-வில் படித்த மாணவியான அஃப்ரீனுக்கு ஆதரவாக #StandWithAfreenFatima என்கிற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலரது வீடுகளும் உ.பி-யில் இடிக்கப்பட்டுவருகின்றன!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஜம்முவில் மாற்றப்படும் இடங்களின் பெயர்கள்!

காஷ்மீரின் ஜம்மு பகுதியிலுள்ள இரண்டு முக்கிய இடங்களான ஷேக் நகர், அம்பாலா சௌக் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவிருக்கின்றன. ஷேக் நகரின் பெயர் `சிவ நகர்’ என்றும் அம்பாலா சௌக்கின் பெயர் `அனுமன் சௌக்’ என்றும் மாற்றுவதற்கான தீர்மானத்தை ஜம்மு மாநகராட்சிக் கூட்டத்தில் கொண்டுவந்தார் பா.ஜ.க உறுப்பினர் சாரதா குமாரி. ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பெயர்கள் மாற்றப்படுவதற்கு எதிராகப் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர். சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ``காஷ்மீரில், இடங்களின் பெயர்களை மாற்றுவதற்குப் பதில், அங்கிருக்கும் பண்டிட்டுகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் வேலைகளில் கவனம் செலுத்துங்கள்’’ என்று அரசுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

15 கிலோவுக்கு ரூ.15,000 கோடி!

கடந்த பிப்ரவரி மாதம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த விழாவுக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், `எனது தொகுதிக்கு நிதி ஒதுக்க வேண்டும்’ என்று கோரிக்கைவைத்திருக்கிறார் பா.ஜ.க எம்.பி அணில் ஃபிரோஜியா. அதற்கு, ``நீங்கள் அதிக எடைகொண்டவராக இருக்கிறீர்கள். எனவே உடல் எடையைக் குறையுங்கள். ஒரு கிலோ எடையைக் குறைத்தால், ரூ.1,000 கோடி நிதி ஒதுக்குகிறேன்’’ என்று நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார். அதைச் சவாலாக ஏற்றுக்கொண்ட அணில், தற்போது 15 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். ``ஏற்கெனவே பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் உஜ்ஜைன் தொகுதிக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது நான் 127 கிலோவிலிருந்து 112 கிலோவுக்கு வந்துவிட்டேன். 15 கிலோ குறைத்ததற்காக அமைச்சர் நிதின் கட்கரி, ரூ.15,000 கோடி நிதி ஒதுக்குவார் என நம்புகிறேன். இது தொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது அமைச்சரிடம் பேசுவேன்’’ என்கிறார் அணில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism