Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

சென்ட்ரல் விஸ்டா
பிரீமியம் ஸ்டோரி
சென்ட்ரல் விஸ்டா

‘சென்ட்ரல் விஸ்டா’ எனப்படும் இந்தத் திட்டத்துக்காக புராதன கட்டடங்கள் இடிக்கப்பட விருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

‘சென்ட்ரல் விஸ்டா’ எனப்படும் இந்தத் திட்டத்துக்காக புராதன கட்டடங்கள் இடிக்கப்பட விருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published:Updated:
சென்ட்ரல் விஸ்டா
பிரீமியம் ஸ்டோரி
சென்ட்ரல் விஸ்டா
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் குஜராத் மாநிலத்துக்கு டவ்தே புயல் மூலமாக மற்றொரு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அரபிக் கடலில் உருவான டவ்தே புயல், அதி தீவிரப் புயலாக மாறி குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பகுதியில் அமரேலி உட்பட 12 மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரைக் காணவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. ஏற்கெனவே, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை வழங்குவதில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ.க அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு பெரிதும் சிரமப்படுகிறது. புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, குஜராத்துக்குப் புயல் நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க உத்தரவிட்டார். அதேசமயம், மற்ற மாநிலங்களிலெல்லாம் புயல் பாதித்தால், மத்தியக்குழு ஆய்வுசெய்து ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து ஆறு மாதங்கள் ஆனாலும் நிவாரணம் தராத மத்திய அரசு, குஜராத்திடம் இவ்வளவு கனிவு காட்டுவதையும் விமர்சித்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

புதிய நாடாளுமன்றக் கட்டடம், புதிய செயலகம், பிரதமருக்குப் புதிய மாளிகை ஆகியவற்றைக் கட்டியே தீருவது என்பதில் மத்திய பா.ஜ.க அரசு மிகவும் உறுதி யுடன் இருக்கிறது. ‘சென்ட்ரல் விஸ்டா’ எனப்படும் இந்தத் திட்டத்துக்காக புராதன கட்டடங்கள் இடிக்கப்பட விருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய அருங்காட்சியகம், இந்திரா காந்தி தேசிய கலை மையம், தேசிய ஆவணக் காப்பகத்தின் இணைப்புக் கட்டடம், சாஸ்திரி பவன், கிருஷி பவன், குடியரசுத் துணைத் தலைவர் குடியிருப்பு, ஜவஹர் பவன் ஆகியவை உட்பட 4,58,820 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டடங்கள் இடிக்கப்படவிருப்பதாகவும், அவற்றில் புராதனக் கட்டடங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக புராதன கட்டடங்களை இடிக்கக் கூடாது என்று ரொமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா, டிம் பாரிங்கர் (யேல் பல்கலைக்கழகம்), விவேக் குப்தா (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்) உள்ளிட்ட வரலாற்று அறிஞர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத மத்திய அரசு, சென்ட்ரல் விஸ்டா பணிகளைத் தீவிரமாக முடுக்கியுள்ளது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியைப் பெரும்பாலானோர் பயன்படுத்திவரும் நிலையில், ‘பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை, ஃபேஸ்புக் உள்ளிட்ட தனது உறுப்பு நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்வது’ என்ற வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு ‘‘இது பயன்பாட்டாளர்களின் உரிமையை மீறும் செயல்’’ என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. மத்திய அரசும் இதற்குத் தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. ‘‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டங்களை மீறும் இந்தக் கொள்கையை வாட்ஸ்அப் நிறுவனம் கைவிட வேண்டும்’’ என்று எச்சரித்துள்ள மத்திய அரசு, “இந்தியப் பயன்பாட்டாளர்கள் மீது நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது’’ என்று சாடியிருக்கிறது. மத்திய அரசின் இந்த உரிமைக்குரலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.