Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டிருக்கும் திரெளபதி முர்மு, ஒடிசா மாநிலத்திலுள்ள உபர்பேடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டிருக்கும் திரெளபதி முர்மு, ஒடிசா மாநிலத்திலுள்ள உபர்பேடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

காலிஸ்தானுக்கு வெற்றியைச் சமர்ப்பித்த எம்.பி!

பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், 2022 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதால், தனது சங்ரூர் தொகுதிக்கான எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஜூன் 23 அன்று, சங்ரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில், 5,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஆம் ஆத்மிக்கு ஷாக் கொடுத்தது சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்). பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், 1999-க்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாத சிம்ரன்ஜித் சிங்கிடம் ஆம் ஆத்மி வேட்பாளர் தோல்வியுற்றிருப்பது அந்தக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. வெற்றிபெற்ற சிம்ரன்ஜித், ``இந்த வெற்றியை காலிஸ்தான் இயக்கத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங்குக்குச் சமர்ப்பிக்கிறேன். அவரது கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி இது. நான் எம்.பி-யாகப் பதவியேற்றதும், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், பீகார், சத்தீஸ்கரில் நக்சல்கள் எனக் கூறி பாதுகாப்புப் படையினரால் பழங்குடிகள் கொல்லப்படுவதற்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்’’ என்றிருக்கிறார். காலிஸ்தான் ஆதரவு மனநிலையில் பேசியிருக்கும் சிம்ரன்ஜித்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் எழுந்துவருகின்றன!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

`திருமண வரன்கள் கிடைக்காது!’

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் `அக்னிபத்’ திட்டம் குறித்து, ``எதிர்காலப் போர் வீரர்களுக்கு அக்னிபத் திட்டத்தில், ஆறு மாதங்கள் பயிற்சியும், ஆறு மாதங்கள் விடுப்பும் கிடைக்கிறது. மீதமிருக்கும் மூன்று ஆண்டுகள் பணி முடிந்து, ஓய்வூதியமுமின்றி வீடு திரும்பும் அவர்களுக்குத் திருமண வரன்கள் அமையாது. இளைஞர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது’’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். 2004-ல் பா.ஜ.க-வில் இணைந்த சத்யபால் மாலிக், ஒடிசா, பீகார், ஜம்மு காஷ்மீர், கோவா ஆகிய மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். தற்போது மேகாலயா ஆளுநராக இருக்கும் இவர், வேளாண் சட்டங்கள், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கருத்து கூறி தேசிய அளவில் பிரபலமடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!

மின்சார வசதி பெறும் திரெளபதி முர்முவின் கிராமம்!

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவராக நிறுத்தப்பட்டிருக்கும் திரெளபதி முர்மு, ஒடிசா மாநிலத்திலுள்ள உபர்பேடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தக் கிராமத்தில், 3,500-க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தாலும், துங்கிரிசாஹி என்ற மற்றொரு பகுதிக்கு இவ்வளவு காலம் மின்சார வசதி கொடுக்கப்படவில்லை. முர்மு, குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பத்திரிகையாளர்கள் பலரும் அந்தக் கிராமத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான், பாதி கிராமம் இருளில் மூழ்கியிருக்கும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, அந்தக் கிராமம் முழுவதும் மின்சாரம் வழங்குவதற்கான வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன!