Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பசவராஜ் பொம்மை
பிரீமியம் ஸ்டோரி
பசவராஜ் பொம்மை

18 மாத ஆண் குழந்தையான முகமது, அரிதான நோயாகக் கருதப்படும் தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

18 மாத ஆண் குழந்தையான முகமது, அரிதான நோயாகக் கருதப்படும் தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

Published:Updated:
பசவராஜ் பொம்மை
பிரீமியம் ஸ்டோரி
பசவராஜ் பொம்மை

கடந்த வாரம் இரண்டு மைனர் பெண்கள் கோவா கடற்கரைக்கு இரவு நேரத்தில் சென்றபோது, குடிபோதையிலிருந்த ஒரு கும்பல் அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டது. இந்தப் பிரச்னை மாநிலம் முழுவதும் கொழுந்துவிட்டெரிய, சட்டமன்றத்திலும் விவாதப்பொருளானது. அப்போது பேசிய கோவா பா.ஜ.க முதல்வர் பிரமோத் சாவந்த், “பெற்றோர் ஏன் இரவு நேரத்தில் பெண் பிள்ளைகளை வெளியில் விட வேண்டும்? இரவு முழுவதும் கடற்கரையில் மைனர் பெண்களை அனுமதிக்கும் பெற்றோர், தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பிள்ளைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக, அந்தப் பொறுப்பை அரசாங்கத்தின் மீதும் போலீஸாரின் மீதும் போட முடியாது’’ என்றார். முதல்வரின் இந்தப் பேச்சால் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘‘சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கத் தெரியாத முதல்வர், இது போன்று பேசலாமா?’’ என்று பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். ‘‘பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்குரியது. அந்தப் பாதுகாப்பைக் கொடுக்கவில்லையெனில், முதல்வர் பதவியில் இருக்க பிரமோத் சாவந்துக்குத் தகுதியில்லை’’ என்று ‘கோவா ஃபார்வேர்ட் பார்ட்டி’யைச் சேர்ந்த எம்.எல்.ஏ விஜய் சர்தேசாய் காட்டமாகக் கூறியுள்ளார். #வார்த்தை முக்கியம் அமைச்சரே

நேஷனல் ஹாட் பிட்ஸ்

கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த ரஃபீக் மரியும்மா தம்பதியரின் 18 மாத ஆண் குழந்தையான முகமது, அரிதான நோயாகக் கருதப்படும் தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இந்த நோயிலிருந்து மீள 18 கோடி ரூபாய் விலையுள்ள மருந்து தேவைப்பட்டிருக்கிறது. கலங்கிப்போன பெற்றோர், உள்ளூரைச் சேர்ந்த இடதுசாரி எம்.எல்.ஏ உதவியுடன் சமூக வலைதளங்களில் நிதி உதவி கேட்டனர். பிறகுதான் நடந்தது அந்த ஆச்சர்யம்... சுமார் 15 நாள்களிலேயே உலகம் முழுவதுமிருந்து 46.79 கோடி ரூபாய் நிதியை வாரிவழங்கியுள்ளார்கள் கொடையுள்ளம் கொண்ட மக்கள். தேவைக்கு அதிகமாக நிதி குவியவே, இதே நோயால் பாதிக்கப்பட்டுள்ள முகமதின் சகோதரிக்கும் சிகிச்சையளிக்க முடிவு செய்ததுடன், மீதமுள்ள தொகையை இதே நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிற குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்காக மாநில அரசிடம் அளிக்கவிருக்கிறார்கள் ரஃபீக் மரியும்மா தம்பதியர். #உள்ளத்தில் நல்ல உள்ளங்கள்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்யலாமா அல்லது மாற்றியமைக்கலாமா என்பது குறித்து பா.ஜ.க மேலிடத் தலைவர் களிடம் தீவிர ஆலோ சனையில் ஈடுபட்டு வருகிறார் புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. தனக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடியிடம் நல்லாட்சியை வழங்குவதாக உறுதியளித்த பசவராஜ், நிலுவையிலிருக்கும் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுத்து, பசவராஜுக்கு பாராமுகம் காட்டுகிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் (2012-13). இதனால் கவலையடைந்த பசவராஜ், எப்படியாவது ஜெகதீஷ் ஷெட்டரைத் தனது அமைச்சரவைக்குள் இணைப்பதற்கான சமரச வேலைகளிலும் ஈடுபட்டுவருகிறார். அதேசமயம், அமைச்சர் பதவியைப் பிடிக்க சமூகரீதியாகவும் பல புள்ளிகள் காய்நகர்த்திக்கொண்டிருப்பது, பசவராஜுக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது! #முள்கிரீடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism