Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஹரியானாவைச் சேர்ந்த 17 வயதான இளம்பெண் நேகா, உக்ரைன் தலைநகர் கீவிலுள்ள விடுதியில் தங்கி மருத்துவம் படித்துவருகிறார்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஹரியானாவைச் சேர்ந்த 17 வயதான இளம்பெண் நேகா, உக்ரைன் தலைநகர் கீவிலுள்ள விடுதியில் தங்கி மருத்துவம் படித்துவருகிறார்.

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருக்கும் லாட்ஜ் ஒன்றில் மஸ்தான், ஜீவா ஆகிய இரண்டு பி பார்ம் படிக்கும் மாணவர்கள் கடந்த வாரம் அறை எடுத்துத் தங்கியிருக்கின்றனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் சந்தேகத்துக்குரிய வகையில் சத்தம் வரவே... லாட்ஜ் ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கே இரு மாணவர்களுடன், ரத்த வெள்ளத்தில் ஒரு சடலம் கிடந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். விசாரணையில், 28 வயதான ஸ்ரீகாந்த் என்பவர்தான் உயிரிழந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. திருமணமான சில நாள்களில் மனைவியைப் பிரிந்த ஸ்ரீகாந்த், மாற்றுப் பாலியல் அறுவை சிகிச்சை செய்ய மும்பை செல்லப்போவதாக மஸ்தான், ஜீவா ஆகியோரிடம் கூறியிருக்கிறார். பி பார்ம் படித்துவந்த மஸ்தானும் ஜீவாவும் குறைந்த செலவில் தாங்களே அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறி, யூடியூப் வீடியோவைப் பார்த்து லாட்ஜ் அறையில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். இதில் அதிக அளவில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ஸ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார். மாணவர்கள் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஹரியானாவைச் சேர்ந்த 17 வயதான இளம்பெண் நேகா, உக்ரைன் தலைநகர் கீவிலுள்ள விடுதியில் தங்கி மருத்துவம் படித்துவருகிறார். ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய நிலையில், நேகா தங்கியிருந்த விடுதி மூடப்பட்டது. இதனால் வாடகை வீடு தேடிவந்த நேகாவுக்கு, `எனது வீட்டில் தங்கிக்கொள்ளுங்கள்’ என்று அடைக்கலம் கொடுத்திருக்கிறார் உக்ரைனைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, `போர் செய்ய வாருங்கள்’ என்று குடிமக்களுக்கு அழைப்புவிடுக்க, அந்தப் பொறியாளர் போரில் ஈடுபடச் சென்றுவிட்டார். அவரின் மனைவியும், மூன்று குழந்தைகளும் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பொறியாளரின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் துணையாக இருக்கப்போவதாகக் கூறி, இந்தியா வர மறுத்துவிட்டார் நேகா. அவரது அம்மா எவ்வளவோ கெஞ்சியும், `போர் முடியும்வரை அவர்களுக்குத் துணையாக இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார். மனிதநேயம்மிக்க இந்தச் செயலால் உக்ரைனிலும் இந்தியாவிலும் வைரலாகிவருகிறார் நேகா!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பிப்ரவரி 27 அன்று பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வாரணாசியிலுள்ள 3,361 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமான பூத் ஏஜென்ட்கள் கலந்துகொண்டனர். அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் மோடி பேசுகையில் நூற்றுக்கணக்கான நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. மோடி பேசத் தொடங்கிய பின்னரும், பலர் நாற்காலிகளிலிருந்து எழுந்து சென்றனர். போதாதற்கு, பா.ஜ.க ஓ.பி.சி அணியின் தலைவர் சோம்நாத் மெளரியாவும் நாற்காலியிலிருந்து எழுந்து சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது. `பிரதமர் மோடி வெற்றி மந்திரத்தை பூத் ஏஜென்ட்களுக்கு சொல்லிக் கொடுப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம்’ என்று பா.ஜ.க-வினர் சொல்லிவந்த நிலையில், இப்படி நடந்திருப்பது கட்சியினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியது... ``யாரும் எழுந்து வீட்டுக்குச் செல்லவில்லை. பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால், தண்ணீர் குடிக்கவோ, கழிவறைக்கோ சென்றிருக்கலாம். சென்றவர்கள் திரும்பிவந்துவிட்டனர்’’ என்று சமாளித்துவருகிறார்கள் பா.ஜ.க-வினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism