Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன்!

பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

ங்கனா ரணாவத் Vs மகாராஷ்டிரா அரசு யுத்தம் இன்னும் தொடர்கிறது. மும்பையைவிட்டு வெளியேறினாலும், மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான ட்விட்டர் யுத்தத்தை கங்கனா கைவிடவில்லை. இந்தநிலையில், மும்பை காவல்துறை அவர்மீது கிரிமினல் வழக்கு ஒன்றைப் பதிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து கங்கனா, ``சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போன்றோரை நான் வணங்குகிறேன். இன்று என்னையும் சிறையில் அடைக்கப் பார்க்கிறது மகாராஷ்டிர அரசு. இது, என்னுடைய தேர்வுகள் சரியானவை என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. விரைவில் சிறைக்குச் சென்று எனது தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்கவிருக்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

35 வருட இடைவெளிக்குப் பிறகு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) ஆட்சிக் குழுவின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றிருக்கிறது. இந்தியாவுக்கும் ஐ.எல்.ஓ-வுக்கும் இடையிலான 100 ஆண்டுக்கால உறவில் இது ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளர் அபூர்வா சந்திரா இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 187 உறுப்பினர்களைக்கொண்ட சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் நவம்பர், 2020 ஆட்சிக்குழு கூட்டத்துக்கு அபூர்வா சந்திரா தலைமை தாங்குவார்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் களத்துக்கு இப்போதே தயாராகிவிட்டது மேற்கு வங்கம். கிட்டத்தட்ட அனைத்து விவகாரங்களிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க-வும் கடுமையாக மோதிவருகின்றன. இந்தநிலையில், மேற்குவங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் துர்கா பூஜை தினத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க-வுக்கு எதிராக `பா.ஜ.க-விடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ (Mark Yourself Safe from BJP) என்ற டிஜிட்டல் பிரசாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

`savebengalfrombjp.com’ என்ற இணையதளத்தில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்திருக்கிறதாம். `மேற்குவங்கத்தில் துர்கா பூஜை அன்று மக்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள் என்பதால், அந்த நாளில் இதைத் தொடங்கியிருக்கிறோம்’ என்கிறார்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வ்வோர்ஆண்டும் தசரா விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்தமுறை கொரோனா பரவல் காரணமாக முக்கிய நிர்வாகிகள் 50 பேருக்கு மட்டுமே விழாவில் அனுமதி வழங்கப்பட்டது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370 பிரிவு நீக்கப்பட்டது, அயோத்தி தீர்ப்பு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பூமி பூஜை குறித்தெல்லாம் பேசினார். சிஏஏ குறித்துப் பேசிய மோகன் பகவத், `இது எந்த ஒரு மதச் சமூகத்தினருக்கும் எதிரானது இல்லை. சில போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன; நமது இஸ்லாமியச் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்’ என்று குறிப்பிட்டார்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

த்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2019-ம் ஆண்டில் அந்த மாநிலத்தில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் `57% வன்கொடுமைகள், போலியான திருமண வாக்குறுதிகளின் அடிப்படையில் நடந்திருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

`37% வழக்குகளில் பாதிக்கப்பட்டவருக்கு ஏதோ ஒரு வகையில் தெரிந்தவர்களே குற்றவாளிகள்’ என்றும், `6% வழக்குகளில் பாதிக்கப்பட்ட வருக்கு தொடர்பில்லாத அல்லது முன்பின் அறியாத நபர்கள் குற்றவாளிகளாக இருக்கிறார்கள்’ என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பீகார் தேர்தல் களம், அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டன. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், `கொரோனா தடுப்பு மருந்து இலவசம்’ என்பது பிரதானப்படுத்தப்பட்டது. இது விமர்சிக்கப்பட்டாலும், `கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசிடமிருந்து பெற்று, அதை இலவசமாக பீகார் அரசு வழங்கும்’ என பா.ஜ.க விளக்கமளித்தது. இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், தனது தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

`10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவோம்’ என்ற வாக்குறுதியுடன் பீகார் மக்களுக்கு அரசு வேலையில் 85% ஒதுக்கீட்டையும் அந்தக் கட்சி தருவதாக உறுதியளித்திருக்கிறது. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சி, தங்களின் தேர்தல் வாக்குறுதியில், ஏழு தீர்மானங்களை முன்வைத்திருக்கிறது. `புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு வட்டியில்லாமல் 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்’ என்றும், `வேலை வாய்ப்புகளை உருவாக்க, திறன் வளர்ப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

டந்த ஜூன் மாதத்தில் நேபாள நாடாளுமன்றம் அந்நாட்டின் புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் வழங்கியது. அந்த வரைப்படத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சில பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்ததால், இந்தியா-நேபாள உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளி தசரா வாழ்த்து தெரிவித்தபோது, அலுவலகத்தில் பழைய வரைபடம் இருந்ததாக அந்நாட்டு மக்கள் பிரதமரை வறுத்தெடுத்தனர். மேலும், இந்திய உளவுப்பிரிவான `ரா’ அமைப்பின் தலைவர் சமந்த் குமார் கோயல், ஷர்மா ஒளியைச் சந்தித்துப் பேசிய பின்னர் இந்த மாற்றம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. விமர்சனங்களுக்கு பதிலளித்த நேபாள பிரதமர் அலுவலகம், `புதிய வரைபடம் இருந்தபோதும், அது சிறிய அளவில் இருந்ததால் தெரியவில்லை’ என்றது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு