Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்...

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையம், நகரிலேயே முதன்முறையாக பார்க்கிங் வசதிகளைக் கண்டறியும் செயலியை உருவாக்கியிருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்...

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையம், நகரிலேயே முதன்முறையாக பார்க்கிங் வசதிகளைக் கண்டறியும் செயலியை உருவாக்கியிருக்கிறது.

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சார் சாஹிப் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்துகொண்ட எல்லோரிடமும் `அன்பளிப்பு எதுவும் வேண்டாம். அதற்கு பதிலாகத் திருமண மேடைக்கு அருகிலுள்ள பெட்டியில் தங்களால் முடிந்த தொகையை இட்டுச் செல்லலாம்” என்று தெரிவிக்கப்பட்டது. ‘அந்தப் பணம் முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்’ என்று திருமண வீட்டார் அறிவித்தார்கள். ``அது நமது போராட்டம். அதற்கு நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பங்களிக்க வேண்டும்” என மணமகன் அபிஜித் சிங் கூற, திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் அதை ஆமோதித்து நிதி வழங்கியிருக்கிறார்கள். #பயிர்போல் செழித்து வாழ்க!

த்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் டென்ட், ஃபர்னிச்சர் மற்றும் ஒலிபெருக்கி முதலியவற்றை ‘லல்லூஜி அண்ட் சன்ஸ்’ நிறுவனம் சப்ளை செய்தது. 2017, 2018-ம் ஆண்டுகளிலும் இந்த நிறுவனமே சப்ளை உரிமையை வைத்திருந்தது. இதற்கான செலவாக 196.24 கோடி என பில் கட்டணத்தை அரசிடம் வழங்கியது. ஆனால், அவற்றை ஆய்வுசெய்த அதிகாரிகள், லல்லூஜி நிறுவனம் அளித்த பில்களில் 86.38 கோடி ரூபாய்க்கான பில்கள் மட்டுமே உண்மையானவை. மீதமுள்ளவை மோசடியாக உருவாக்கப்பட்டவை என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து, அந்த நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்ததோடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தின் டெண்டர் உரிமங்களையும் ரத்துசெய்திருக்கிறது கும்பமேளாவுக்கான நிர்வாகக்குழு. #மைக்செட் மணிமாறா...

நேஷனல் ஹாட் பிட்ஸ்...

ரியானா மாநிலத்தின் குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையம், நகரிலேயே முதன்முறையாக பார்க்கிங் வசதிகளைக் கண்டறியும் செயலியை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள பார்க்கிங்குகளையும், அவற்றில் பயன்பாட்டுக்கு உள்ளவை குறித்த தகவலையும் அறிய வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயலியின் மூலம் தங்களுக்கான பார்க்கிங்கை முன்பதிவும் செய்யலாம். ஆன்லைனிலேயே பார்க்கிங் கட்டணங்களைச் செலுத்தும் வசதியும் இருக்கிறது. இதனால், அதிக கட்டணம் வசூலிக்கும் இடைத்தரகர்களை முறைப் படுத்தலாம் என்று ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். #நல்ல முயற்சி

நேஷனல் ஹாட் பிட்ஸ்...

த்தரகாண்ட்டின் பாகேஸ்வர் பகுதியில் நடந்த திருமண விழா ஒன்றில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்ட் மிஷ்ரா கலந்துகொண்டார். அப்போது நோய்த் தொற்று பரவாத வண்ணம் நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா எனச் சோதனை செய்தவர், அதிரடியாகத் திருமணத்தில் பங்கேற்ற அனைவரையும் நோய்ப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் எனக் கூறினார். சம்ஸ்கிருதம் அறிந்த அவர், அந்த உறுதிமொழியைச் சம்ஸ்கிருதத்தில் கூற, அனைவரும் அதை வழிமொழிந்தனர். ``ஓர் அரசு அதிகாரி அலுவல் வேலைக்குச் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்தலாமா?” என்று விமர்சனங்கள் எழவே, ``ஓர் இந்து திருமணத்தில் சம்ஸ்கிருத மந்திரங்கள் சொல்வது இயல்புதானே... அதனால், அந்த மொழியிலேயே எடுக்கச் சொன்னேன்” என்று சமாளித்திருக்கிறார் மணிகண்ட்.
#ஸ்வாஹா

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபதாரிணி சமந்தா. இவருடைய வயது 99 ஆண்டுகள் 11 மாதங்கள். இந்த மூதாட்டி, கொரோனா தொற்றால் காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் என்று ஃபுலேஸ்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 100 வயதாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், சிரத்தையாகச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரை வெற்றிகரமாக கொரோனாவிலிருந்து மீட்டனர். இதைக் கொண்டாடும்விதமாக, மருத்துவர்களும் செவிலியர்களும் பாட்டுப் பாடி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்லி அவரை வீட்டுக்கு வழியனுப்பிவைத்துள்ளனர். #செஞ்சுரி மூதாட்டி!

நேஷனல் ஹாட் பிட்ஸ்...

பீகாரில் அமைந்துள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகம், சமீபத்தில் ஒரு மாணவரைப் பற்றிய விசாரணையில் இறங்கியிருக்கிறது. குந்தன் குமார் என்ற அந்த மாணவரின் தேர்வு அனுமதிச் சீட்டில் இடம்பெற்றிருந்த தகவல்கள்தான் விசாரணைக்குக் காரணம். மீனாபூர், `தன்ராஜ் மட்டோ டிகிரி காலேஜி’ல் பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் குந்தன் குமார், தனது தேர்வு அனுமதிச் சீட்டில் மாணவரின் தந்தை பெயர் ‘இம்ரான் ஹாஸ்மி’ என்றும், தாயார் பெயர் ‘சன்னி லியோன்’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவரது முகவரியாக `சதுர்புஜ் ஸ்தான்’ என்ற இடம் எழுதப்பட்டிருக்கிறது. சதுர்புஜ் ஸ்தான் அந்த வட்டாரத்தில் பிரபலமான ரெட் லைட் ஏரியா என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர் பெயராக பாலிவுட் பிரபலங்கள் பெயரும், முகவரியாக ரெட் லைட் ஏரியாவும் இருப்பதை அடுத்து, இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணைவைத்து அந்த விண்ணப்பம் உண்மையானதா என்று விசாரிக்கத் தொடங்கியிருப்பதாகப் பல்கலைக்கழக ரெஜிஸ்ட்ரார் ராம் கிருஷ்ணா கூறியிருக்கிறார். #ஒரே கன்ஃப்யூஷனா இருக்கே!