Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஒரு வாரத்துல என்னன்னமோ நடந்திருக்கே!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஒரு வாரத்துல என்னன்னமோ நடந்திருக்கே!

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

* ஜார்கண்ட்டில் இயங்கிவரும் பிரபலமான ‘அதுனிக் குழும’த்தின் நிர்வாக இயக்குநர் மகேஷ் அகர்வாலின் புகைப்படம் தேசியப் புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) வலைதளத்தில் ‘மோஸ்ட் வான்டட்’ பிரிவில் இடம்பெற்றிருந்ததுதான் அங்கு ஹாட் டாபிக். ‘லஷ்கர்-இ-தொய்பா’ தலைவர் ஹபீஸ் முகமது சயீத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையத் சலாவுதீன், அவர்களின் உள்ளூர் கூட்டாளிகள் போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளுக்கான பக்கத்தில் தனது புகைப்படமும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகேஷ் தரப்பு, இந்தப் பிரச்னையை ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது. நீதிமன்றம் தலையிட்டு, மகேஷ் அகர்வால் பெயரையும் புகைப்படத்தையும் நீக்கச் சொல்லி உத்தரவிட்டது. மாவோயிஸ்ட் பின்னணியில் இயங்கும் ‘திரிதியா பிரஸ்துதி கமிட்டி’க்கு நிதி வழங்கியதாகக் குற்றச்சாட்டும், அது தொடர்பான வழக்கும் மகேஷ் அகர்வால் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி உதித் ராஜ் சீண்டியது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தீபாவளியையொட்டி, தன் ரசிகர்களுக்கு விராட் கோலி, ``தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்... பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும். வீட்டில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இனிப்புகளைப் பரிமாறி இந்த நன்னாளை எளிமையாகக் கொண்டாடுங்கள்’’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு விராட் கோலியை `நாய்’ என்று பொருள்படும்படியான கருத்தை உதித் ராஜ் தன் ட்விட்டரில் குறிப்பிட, வெடித்தெழுந்தனர் கோலி ரசிகர்கள். விஷயம் வைரலானதும், ``நாய் நன்றியுள்ள ஒரு ஜீவன். விராட் கோலியின் வாழ்த்து செய்தியை பாராட்டியே நான் அவரை அனுஷ்காவின் நாய் எனக் குறிப்பிட்டேன்’’ என ட்வீட் பதிவிட்டு ரூட்டை மாற்றினார் உதித்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* மத்தியப்பிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் திரைப்பட வசனத்தைப் பேசி மக்களை எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப்பிரதேசத்தின் ஜபுவா மாவட்டம், கல்யாண்புரா காவல் நிலையத்தின் இன்சார்ஜாகப் பணிபுரிபவர் கே.எல்.டாங்கி. காவல் வாகனத்தில் ரோந்துப் பணிக்காகச் சென்றபோது, பாலிவுட்டின் மிகப் பிரபலமான ‘ஷோலே’ திரைப்படத்தின் புகழ்பெற்ற `கப்பர்’ வசனத்தை மைக்கில் பேசினார் டாங்கி. ‘‘கல்யாண்புராவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு குழந்தை அழுதால்கூட குழந்தையின் அம்மா, ‘அழுகையை நிறுத்திவிட்டுத் தூங்கிவிடு. இல்லையென்றால் டாங்கி வந்துவிடுவார்’ என்று சொல்வார்’’ என ‘பன்ச்’ அடித்திருக்கிறார். வீடியோ வைரலானதை அடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக் கிறார் ஜபுவா மாவட்டக் கூடுதல் எஸ்.பி-யான ஆனந்த் சிங்.

* பீகாரில் ஏழாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் நிதிஷ் குமார். தொடர்ச்சியாக நான்காவது முறையாகப் பதவியைப் பிடித்திருக்கிறார். இதற்கிடையில், பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது கிட்டத்தட்ட 160 டன் பயோமெடிக்கல் கழிவுகள் உருவாகியிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக வாக்காளர்களுக்கு 18 லட்சம் முகக்கவசங்கள், 70 லட்சம் முகமூடிகள், 5.4 லட்சம் கையுறைகள் மற்றும் 7.21 கோடி ஒற்றைப் பயன்பாட்டு கையுறைகள் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அவைதான் தற்போது கழிவாக உருவாகியிருப்ப தாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* உலகிலேயே முதன்முதலாக இளம் வாசிப்பாளர்களுக்கான டிராம் கார் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மேற்குவங்க டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனும், அபிஜெய் ஆனந்த் குழந்தைகள் லைப்ரரி குழுவும் இணைந்து இந்த டிராம் காரை அறிமுகப் படுத்தியிருக்கின்றன. குழந்தைகளுக்கு இலவசம் என்றும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த ஓரியண்ட் புக் ஸ்டோர்ஸ் நிறுவனம் முன்வந்து புத்தகங்களை வழங்கியுள்ளது. பயணத்தின்போதே கதை சொல்லல், கவிதை படித்தல் என்று வேறு பல அம்சங்களையும் கொண்ட இந்த ‘மூவிங் லைப்ரரி’க்கு மக்களிடம் பலத்த வரவேற்பு!