Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம், லாஹல்-ஸ்பிதி மாவட்டத்திலுள்ள தோரங் கிராமத்தில் வசித்துவரும் பெரும்பாலானவர்கள், தற்போது நிலவிவரும் கடும் குளிர் காரணமாக குலு பகுதிக்குச் சென்றுவிட்டனர்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

* ஐந்து மாதங்களுக்கு முன், டெல்லியின் பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர், தெற்கு டெல்லியின் Hauz Khas காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். ‘காலா’ என்ற ரௌடி ஒருவன், தொலைபேசியில் இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு, கொடுக்காவிட்டால் உரிமையாளரின் மகனைக் கொல்லப் போவதாக மிரட்டியதாக அந்தப் புகாரில் சொல்லப்பட்டிருந்தது. போலீஸாரின் விசாரணையில், டெல்லி தென்மேற்கு வட்ட காவல் நிலையத்தில், அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் ராஜ்பீர் சிங் அறிவுறுத்தலின் பேரில்தான் கூலிப்படையினர் அவரை மிரட்டி யிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்பீர் சிங் கைது செய்யப்பட்டிருக்கிறார். 2005-ம் ஆண்டு, துணிச்சல் மிகுந்த செயல்பாட்டுக்காக ஜனாதிபதி விருது பெற்றவர் இந்த ராஜ்பீர் சிங் என்பதுதான் இதில் ஹைலைட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

* உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவின் கோவர்தன் பகுதியில் அமைந்திருக்கிறது கிரிராஜ் வத்திகா ஆசிரமம். இங்கே பரிமாறப்பட்ட தேநீரைக் குடித்த மூன்று சாதுக்களில், குலாப் சிங், ஷியாம் சுந்தர் தாஸ் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றாமவரான ராம் பாபு, ``சுத்தம் செய்த பாத்திரத்தில்தான் தேநீர் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், அதைக் குடித்த பிறகுதான் நாங்கள் பாதிப்புக்குள்ளானோம்” என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார். இறந்த இருவரின் உள்ளுறுப்புகளும் சோதனைக்காகப் பாதுகாக்கப்படுவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாதுவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்துக்குப் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* ஹிமாச்சலப்பிரதேச மாநிலம், லாஹல்-ஸ்பிதி மாவட்டத்திலுள்ள தோரங் கிராமத்தில் வசித்துவரும் பெரும்பாலானவர்கள், தற்போது நிலவிவரும் கடும் குளிர் காரணமாக குலு பகுதிக்குச் சென்றுவிட்டனர். இந்தநிலையில், கிராமத்திலேயே தங்கியிருந்த 42 பேரில், 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக் கிறது. ``கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்தக் கிராமத்திலிருந்த ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை. இப்போது அதுவே தலைகீழாக மாறியிருக்கிறது’’ என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். 42 பேரைத் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக, அந்த ஒருவரை தனிமைப் படுத்திக்கொள்ளச் சொல்லிக் கொண்டிருக் கிறார்களாம் கிராம மக்கள்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் மூன்று இளைஞர்கள் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். சடலத்தை மீட்ட காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. விசாரணையில், இன்னொருவரும் தற்கொலைக்காக முயன்றுவிட்டு இறுதியில் மனம் மாறித் திரும்பியிருக்கிறார் என்பதை அறிந்தனர். அவரைப் பிடித்து விசாரித்ததில், அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் கிடைத்திருக்கிறது. நான்கு நண்பர்களும் மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியபோது, அவர்களில் ஒரு இளைஞன் ‘அமாவாசை அன்று இறந்தால் மோட்சம் கிடைக்கும்’ என்று கூறியதுதான் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* மூன்று மாதங்களுக்கு முன், மத்தியப்பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் காவல் நிலையத்தில், சகதாப் கான் என்ற பத்திரிகையாளர் தன்னுடைய 3 வயது நாய் ‘கோகோ’ காணாமல்போனதாகப் புகாரளித்தார். கடந்த வாரம், அந்தப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தன்னுடைய நாய் இருப்பதாக சகதாப் கான் போலீஸிடம் தெரிவிக்கவே நாயை மீட்டுக் கொடுத்தனர் காவல்துறையினர். மறுநாள் இந்தச் செய்தியை அறிந்த ஷிவ்ஹரே என்ற வழக்கறிஞர், அந்த நாய் தன்னுடையது என்றும், அதன் பெயர் ‘டைகர்’ என்றும் தெரிவித்தார். ‘கோகோ’, ‘டைகர்’ என எப்படி அழைத்தாலும் அந்த நாய் திரும்பிப் பார்த்தது. குழம்பிய காவல்துறையினர் நாய்க்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். சகதாப் கான், ‘பாஞ்ச்மாரி’ என்ற நகரத்தில் இந்த நாயின் தாய் இருப்பதாகவும், வழக்கறிஞர் ஷிவ்ஹரே ‘இதர்சி’ என்ற நகரத்திலிருந்து தான் இந்த நாயைக் கொண்டுவந்ததாகவும் கூறினர். இரு நகரங்களுக்கும் சென்ற போலீஸார், அங்கிருக்கும் தாய் நாய்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து வந்தனர். கடைசியில் டி.என்.ஏ பரிசோதனையில் ஷிவ்ஹரே சொன்ன ‘இதர்சி நகர’ நாயின் மாதிரி பொருந்திப்போகவே நாயை ஷிவ்ஹரே வசம் ஒப்படைத்தனர்.