* உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் மாவட்ட நீதிபதி ஸ்ரீபிரசாந்த் ஜோஷி. சில தினங்களுக்கு முன்பு, முசோரி நீதிமன்றத்துக்குச் சென்று வந்திருக்கிறார். முசோரியிலிருந்து திரும்பியவருக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் காத்திருந்தது.

எதற்காக சஸ்பென்ஷன் என வதந்திகள் கிளம்பிய நிலையில், சஸ்பென்ஷனுக்கான விளக்கத்தைத் தெரிவித்தார் ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் ஹிரா சிங். “பிரசாந்த் ஜோஷி பயன்படுத்திய வாகனம், கேவல் கிருஷண் சாயின் என்பவருடையது. அவர்மீது ஏற்கெனவே காவல்துறையில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவருடைய வாகனத்தில் பயணிப்பது, அவரைக் காப்பாற்றுவது போன்றது. இதன் காரணமாகவே நீதிபதி பிரசாந்த் ஜோஷியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார். #நீதிடா... நேர்மைடா!

* உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில், திடீரென காற்றில் ரூபாய் நோட்டுகள் பறக்க, அந்தப் பகுதி மக்கள் ஆச்சர்யத்தில் திளைத்தனர். ரூபாய் நோட்டுகளைப் பிடிக்க, கூட்டம் கூடியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் பறந்த பணம், விகாஸ் பவன் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்கு வந்திருந்த முதியவர் ஒருவரின் பணம் என்பது பின்னர் தெரியவந்தது. நான்கு லட்ச ரூபாய் பணம் வைத்திருந்த முதியவரின் பையைக் குரங்கு ஒன்று பறித்துச் சென்றிருக்கிறது. மரத்தின்மீது அமர்ந்துகொண்டு, பையிலிருந்த நோட்டுகளை எடுத்து காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 12,000 ரூபாய் வரை காற்றில் பறக்கவிட்ட குரங்கு, பின் பையைத் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. சாலையில் கிடந்த பையையும், காற்றில் பறந்த நோட்டுகளையும் அந்த முதியவரிடமே அந்தப் பகுதி மக்கள் பத்திரமாக ஒப்படைத்த சம்பவம் பலரையும் நெகிழவைத்திருக்கிறது. #நல்லோர் பலரும் உளரேல்...

* டெல்லி கிழக்கு நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் காம்பீரை, டெல்லி காந்தி நகர் மக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். தனது தொகுதிக்குள் ‘ஜன் ரசோய்’ கேன்டீன் களைத் திறந்துவைத்ததால்தான் கௌதம் காம்பீருக்கு இந்தப் பாராட்டு கிடைத்திருக்கிறது. இந்த கேன்டீனில், மதிய உணவு 1 ரூபாய்க்கு வழங்கப்படுவதால் மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதேபோல அசோக் நகரிலும் ஒரு கேன்டீனைக் குடியரசு தின விழாவில் தொடங்கிவைக்கவிருக்கிறாராம் காம்பீர். #அடிச்சு ஆடுங்க!