Published:Updated:

தேசிய பங்குச் சந்தை ஊழல்... ‘இமயமலை யோகி’ சென்னையில் இருக்கிறாரா?

சித்ரா ராமகிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தை ஊழலில் மாஸ்டர் மைண்டாக இருப்பவர் யோகி என்பதும், சித்ராவும் மற்றவர்களும் கருவியாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதும் இந்த வழக்கிலிருந்து அறிய முடிகிறது.

தேசிய பங்குச் சந்தை ஊழல்... ‘இமயமலை யோகி’ சென்னையில் இருக்கிறாரா?

தேசிய பங்குச் சந்தை ஊழலில் மாஸ்டர் மைண்டாக இருப்பவர் யோகி என்பதும், சித்ராவும் மற்றவர்களும் கருவியாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதும் இந்த வழக்கிலிருந்து அறிய முடிகிறது.

Published:Updated:
சித்ரா ராமகிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
சித்ரா ராமகிருஷ்ணா

பல மர்மங்கள் நிறைந்த தேசிய பங்குச் சந்தை ஊழலில் சிக்கிய சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நான்கு மாதங்களாகச் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக் கிறார்கள். இந்தச் சூழலில், தற்போது பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகளின் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலும் சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டிருக் கிறார். மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப் பது இந்தப் பிரச்னையை மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது!

பங்குச் சந்தை ஊழல்!

உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.இ) நிர்வாக இயக்குநர் - தலைமை செயல் அதிகாரியாக (எம்.டி - சி.இ.ஓ) 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டார். அந்தக் காலகட்டத்தில், மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமானது. அந்த ஊழல் தொடர்பாக, சித்ரா ராமகிருஷ்ணா, அவரின் தலைமை ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியம், என்.எஸ்.இ-யின் முன்னாள் எம்.டி - சி.இ.ஓ-வான ரவி நாராயண் ஆகியோர் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்குச் சந்தையில் ஆதாயமடையும் வகையில் பல முறைகேடுகளில் இவர்கள் மூவரும் ஈடுபட்டனர் என்பது குற்றச்சாட்டு. இதைத் தாண்டி, தற்போது புதிதாக வெளியாகியிருக்கும் பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

2009 முதல் 2017 வரை தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கின்றன. அவர்கள் வேவு பார்க்கப் பட்டிருக்கிறார்கள். வேவு, தொலைபேசி ஒட்டுக்கேட்புக்காக மும்பையைச் சேர்ந்த ‘ஐசெக் (iSec) சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனம் அமர்த்தப்பட்டதாகவும், அந்த நிறுவனத்துக்கு ரூ.12.5 கோடி ரூபாய் தரப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியம், ரவி நாராயண் ஆகியோருக்கு எதிராக புதிய வழக்கு ஒன்று பதியப்பட்டிருக்கிறது. ஐசெக் செக்யூரிட்டி நிறுவனம், மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேவுக்குச் சொந்தமானது. இந்த வழக்கில் சஞ்சய் பாண்டேவும் தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை, தேசிய அனல்மின் கழகம் (என்.டி.பி.சி), ரயில்வே துறையின் கீழ் செயல்படும் ஆர்.டி.எஸ்.ஓ உள்ளிட்ட அமைப்புகள், ஐசெக் சர்வீசஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது இன்னோர் அதிர்ச்சித் தகவல்.

சஞ்சய் பாண்டே
சஞ்சய் பாண்டே

இமயமலை யோகி

‘கண்களுக்குப் புலப்படாத’, ‘ஒரு முறைகூட தான் சந்தித்திராத…’, ‘இமயமலை யோகி’, ‘சித்த புருஷ்’ என்றெல்லாம் சித்ரா ராமகிருஷ்ணாவால் சொல்லப்படும் மர்ம நபர் யார் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது. இந்த நிலையில், இந்த ‘இமாலய’ ஊழல் குறித்து பங்குச் சந்தையில் தொடர்புடைய வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தேசிய பங்குச் சந்தை ஊழலில் மாஸ்டர் மைண்டாக இருப்பவர் யோகி என்பதும், சித்ராவும் மற்றவர்களும் கருவியாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதும் இந்த வழக்கிலிருந்து அறிய முடிகிறது. அந்த ‘மர்ம யோகி’, ஆனந்த் சுப்பிரமணியம்தான் என்று பலரும் யூகிக்கிறார்கள். அது உண்மை அல்ல. சித்ராவும் ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் பக்கத்து பக்கத்து அறைகளில் பணிபுரிந்தவர்கள். அப்படியிருக்கும்போது, எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம். ஆனால், சித்ராவுடன் இமெயிலில் மட்டுமே யோகி தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இமயமலையில் இருக்கும் யோகி என்று சித்ரா சொன்னாலும்கூட, அந்த யோகிக்கும் சென்னைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிகிறது. யோகி, இளையராஜாவின் ரசிகர் என்பதும் இமெயில் மூலம் தெரியவருகிறது. அதனடிப்படையில் அந்த யோகி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வர முடியும்.

ஆனந்த் சுப்பிரமணியம்
ஆனந்த் சுப்பிரமணியம்
ரவி நாராயண்
ரவி நாராயண்

பங்குச் சந்தையில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த, `வேட்டி கட்டிய ஒரு பெரிய மனிதர்’ சென்னையில் வசிக்கிறாராம். அவரின் நிழலாக வலம்வரும் ஒரு முக்கியப் புள்ளிதான், ‘இமயமலை யோகி’ என்ற பெயரில் சித்ராவுக்குப் பல உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறாராம். ஆனந்த் சுப்பிரமணியம் ஒவ்வொரு வாரமும் சென்னைக்கு வந்து சென்றது, சென்னையில் இருக்கும் ‘யோகி’க்கு டெல்லியிலிருந்து பல தகவல்களைக் கொண்டு வருவதற்குத்தான் என்று பங்குச் சந்தையில் பேசிக்கொள்கிறார்கள்” என்று பங்குச் சந்தை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

`இந்தியாவின் பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக முன்னேற்ற வேண்டும் என்பதே தன் கனவு’ என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. அப்படியிருக்கும்போது, சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டாலர் புழங்கும் தேசிய பங்குச் சந்தையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது பற்றிய கண்டனத்தையோ, கவலையையோ பிரதமர் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இது பற்றி பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்த ஊழல், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது என்றாலும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகும் அது தொடர்ந்திருக்கிறது. இந்த ஊழல் பற்றி வெள்ளை அறிக்கையையாவது அரசு வெளியிட வேண்டும்.

செய்யுமா அரசு?!