Published:Updated:

மனிதரைத் தாண்டியும் புனிதமானது!

எண்டகாசி - ஆண்ட்ரூ பௌமா
பிரீமியம் ஸ்டோரி
எண்டகாசி - ஆண்ட்ரூ பௌமா

உகாண்டா, ருவாண்டா, காங்கோ காடுகளில் இந்த வகை மலை கொரில்லாக்கள் வாழ்கின்றன.

மனிதரைத் தாண்டியும் புனிதமானது!

உகாண்டா, ருவாண்டா, காங்கோ காடுகளில் இந்த வகை மலை கொரில்லாக்கள் வாழ்கின்றன.

Published:Updated:
எண்டகாசி - ஆண்ட்ரூ பௌமா
பிரீமியம் ஸ்டோரி
எண்டகாசி - ஆண்ட்ரூ பௌமா

அந்த கொரில்லா இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும்போது ஆண்ட்ரூ பௌமா அதைச் சந்தித்தார். காட்டில் இறந்து கிடந்த தன்னுடைய அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு செய்வதறியாமல் குழப்பத்தோடு இருந்த எண்டகாசி என்ற அந்த கொரில்லாக் குட்டியை ஆண்ட்ரூ பௌமா மீட்டுக் கொண்டுவந்தார். இப்போது தன்னுடைய 14 வயதில், அவருடைய மடியிலேயே எண்டகாசி உயிரை விட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் அந்த கொரில்லா உலகப்புகழ் பெற்றுவிட்டது.

2019-ம் ஆண்டு எண்டகாசியும் அவளோடிருந்த இன்னொரு பெண் கொரில்லா எண்டேஸேவும் அவர்கள் வாழும் விருங்கா தேசியப் பூங்காவில் ஒரு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்கள். அந்தப் புகைப்படம் உலக அளவில் டிரெண்டானது.

மனிதரைத் தாண்டியும் புனிதமானது!

அந்த கொரில்லாக்கள் குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை பௌமா பேசியபோது, “அவைதான் எங்களுடைய அற்புதமான சொத்து. அவற்றுக்கு எப்படிச் சாப்பிட வேண்டும், விளையாட வேண்டும் என்று அனைத்தையுமே நாங்கள்தான் கற்றுக்கொடுத்தோம். எண்டேஸே, எண்டகாசி, மைஷா, மடபிஷி ஆகிய மலை கொரில்லாக்களை அநாதைகளாக இருந்த இளம் குட்டிகளாகக் கொண்டு வந்தோம். அவை இன்று எங்கள் குடும்பமாக மாறிவிட்டன” என்று கூறினார்.

இவற்றில் முதன்முதலாக மீட்கப்பட்டது எண்டகாசிதான். 2007 ஏப்ரல் 8-ம் தேதியன்று யாரோ அதன் அம்மாவைக் கொன்றுவிட்டார்கள். அப்போது எண்டகாசி இரண்டு மாதக் குழந்தை. அந்தச் சம்பவம் நடந்த அடுத்த ஒன்றரை மாதங்களில் மேலும் 6 கொரில்லாக்களைக் கொன்று குவித்தார்கள். அப்போதுதான், இறந்துபோயிருந்த தன்னுடைய பெரிய அண்ணனைக் கட்டிப்பிடித்தபடி அலறிக் கொண்டிருந்த எண்டேஸே மீட்கப்பட்டாள். ருவாண்டா எல்லையில், விலங்குக் கடத்தல்காரர்களிடமிருந்து, மைஷா மீட்கப்பட்டாள்.

உகாண்டா, ருவாண்டா பகுதிகளில் 3,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த ஒரு காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த எட்டு கொரில்லாக் குடும்பங்களில் ஒன்றான கபிரிஸி குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் எண்டகாசி. அவள் பிறந்த 2007-ம் ஆண்டில், பூமியில் அவள் இனத்தைச் சேர்ந்த மலை கொரில்லாக்கள் மொத்தமாகவே 720 தான் இருந்தன. உலக காட்டுயிர் நிதியத்தின் கணக்குப்படி, இப்போது அந்த எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.

உகாண்டா, ருவாண்டா, காங்கோ காடுகளில் இந்த வகை மலை கொரில்லாக்கள் வாழ்கின்றன. மனித ஆக்கிரமிப்புகள், விலங்குக் கடத்தல்காரர்கள் பொறி வைத்துப் பிடிப்பது, துப்பாக்கிகளோடு சுற்றும் வேட்டைக்காரர்கள் என்று இவை உயிர்பிழைத்திருக்க பல சவால்களைச் சந்திக்கின்றன. அப்படியொரு ஆபத்தில் சிக்கி, எண்டகாசியின் அம்மா உயிரிழந்திருந்தார். பிறந்து இரண்டு மாதமே ஆகியிருந்த எண்டகாசி, அம்மாவின் மார்பிலேயே அதுவரை இருந்துவிட்டாள். எண்டகாசியை அவளுடைய அம்மாவின் சடலத்திடமிருந்து பிரித்துக் கொண்டுவந்தபோது, ஆண்ட்ரூ பௌமா, அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். அன்று அவருடைய மார்பில் அரவணைப்புக்காகச் சாய்ந்தவள், தன் வாழ்வின் இறுதி நொடி வரை விடவில்லை.

2014-ம் ஆண்டு பிபிசி எண்டகாசியைப் பற்றி உருவாக்கிய ஓர் ஆவணப்படத்தில் ஆண்ட்ரூ பௌமா, “நான்தான் அவளுடைய அம்மா” என்று உணர்ச்சி பொங்கக் கூறியிருப்பார்.

மனிதரைத் தாண்டியும் புனிதமானது!

கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த எண்டகாசி உயிரிழந்துவிட்டதாக, கடந்த புதன்கிழமை அன்று விருங்கா தேசியப் பூங்கா நிர்வாகம் அறிவித்தது. பேட்டியளிக்கும் நிலையில்கூட ஆண்ட்ரூ பௌமா இல்லை, அவர் எண்டகாசியை இழந்த வேதனையில் உள்ளார் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அவளுடைய உயிரிழப்பு குறித்த அறிக்கையில் அவர், “மனிதர்களுக்கும் கொரில்லாக்களுக்குமான மனமார்ந்த பிணைப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை எண்டகாசி உணர்த்தியிருக்கிறாள். இந்தப் பிணைப்பு, அவற்றைப் பாதுகாக்க நாம் ஏன் நம்மால் ஆன அனைத்தையும் செய்யவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. என் சொந்தக் குழந்தையைப் போல் அவளை நேசித்தேன். அவளுடைய மகிழ்ச்சி நிறைந்த முகம் என்றென்றும் எங்கள் நினைவில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் இருந்தது பௌமாவின் கண்ணீரும் விட்டுச்சென்ற எண்டகாசியின் அன்பும்.